Author: Editor web3

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகி ருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நடப்பாண்டில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண், 113 பத்மஸ்ரீ உள்ளிட்ட 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள விருதுகள், பின்னர் நடைபெறும் மற்றொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உட்பட மொத்தம் 66 பேருக்கு உயரிய பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிக்கிறார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மற்றும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆளுமைகளுக்கு இன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்தவகையில், பத்ம விபூஷண் விருது 2 பேருக்கும், பத்ம பூஷண் விருது…

Read More

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது. இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?” சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து,…

Read More

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்துள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவின், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது பள்ளிக் கால தோழி சுபாஷினியை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே விடுமுறையில் ஊருக்கு வந்த கவின் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டைக்கு அழைத்துச் சென்றார். கவின் அங்கு வந்திருப்பதை அறிந்த காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித், அவரிடம் பேசுவது போல அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளார். கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பாக உடனடியாக சுர்ஜித்தை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சுர்ஜித்தின் தந்தை, தாய் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் நிலையில், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தந்தை சரவணன்…

Read More

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுகள் நாளை (மே 26) முதல் தொடங்குகின்றன. லீக் சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். குவாலிஃபையர் 1-ல் தோல்வியடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ‘குவாலிஃபையர் 2’-ல் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 27எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன இந்த சீசனின் சாம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் மே 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எந்த அணி கோப்பையைக்…

Read More

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் வரும் மே 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களை ஒட்டியுள்ள பின்வரும் 19 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, தேனி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், குமரி, கோவை, திருப்பூர், மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த…

Read More

நாடு முழுவதும் எரிபொருள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையேயும், வாகன ஓட்டிகளடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றம் மற்றும் நுகர்வுத் தேவைக்கேற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், தற்போதைய புதிய விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55க்கும் விற்பனையாகிறது. கடந்த 14 நாட்களில் மட்டும் நான்கு முறை விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாயை நெருங்கியுள்ளது. அதேபோல், டீசல் விலையும் 100 ரூபாயைத் தொடும் நிலைக்கு வந்துள்ளது. இந்தத் தொடர் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச்…

Read More

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரை, அந்த அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் பிளாக் செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேவிட் வார்னர் மொபைலில் தேடியபோது, அவருக்கு ‘User Not Found’ மற்றும் ‘This Profile is Private’ என்ற வாசகங்கள் திரையில் காட்டியுள்ளன. பொதுவாக ஒரு கணக்கு பிளாக் செய்யப்பட்டால் மட்டுமே இதுபோன்று காட்டும் என்பதால், வார்னர் அதனை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும், ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “அவர்கள் என்னை ஒருபோதும் அன்-பிளாக் செய்ய மாட்டார்கள்” என்றும் வார்னர் பதிலளித்துள்ளார். ஹைதராபாத் அணியின் முதுகெலும்பாகவும், மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை  வென்று கொடுத்த ரன் மெஷினாகவும் திகழ்ந்த வார்னரை அணி நிர்வாகம் இப்படி நடத்துவதா என ரசிகர்கள்…

Read More

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் செல்வாக்கு குறித்து பிரபல ஆய்வு நிறுவனமான ‘ஆர்மேக்ஸ் மீடியா’ (Ormax Media)  புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பல மாதங்களாகத் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நடிகர் விஜய், தற்போது சரிவைச் சந்தித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தில் நீடித்து வந்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய பட்டியலில் அவர் தனது முதலிடத்தை இழந்து, 4-வது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் முழுநேர அரசியலில் களம் இறங்கியுள்ளதாலும், சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததாலும், வட இந்திய மற்றும் பிற மொழி ரசிகர்களிடையே சினிமா ரீதியான அவரது செல்வாக்கு சற்றே சரிந்துள்ளதாகத் திரைத்துறை நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய் முதலிடத்தை இழந்ததைத் தொடர்ந்து, பான்-இந்தியா ஸ்டாரான பிரபாஸ் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.…

Read More

முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்து வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பிரபல சினிமா டிக்கெட் முன்பதிவு செயலியான ‘District’-ல், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஜூன் 19 என்று குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22-ம் தேதி வரவிருக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே (வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை) படத்தை உலகளவில் ரிலீஸ் செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சில தாமதங்களுக்குப் பிறகு, தற்போது ஜூன் மாத வெளியீட்டிற்குப் படம் தயாராகி வருவதாகக் கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.…

Read More

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைத் திரட்டி காவல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில், கார்த்திக் என்ற நபர் அந்தச் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக கார்த்திக்கைக் கைது செய்து விசாரித்ததில், சிறுமியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த கொடூரக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்…

Read More