Author: Editor web3
அறிவிக்கப்படாத மின் வெட்டால் தமிழ் நாட்டு மக்கள் அவதியுறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; கோடை காலம் வந்தாலே தமிழகத்தின் மின் தேவை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்தது. பகல் நேரங்களில் வீட்டு மின் உபயோகம் அதிகரிக்கும். அதே நேரம், தொழிற்சாலைகளின் மின் உபயோகமும் கூடுதலாகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், ஆண்டுதோறும் கோடைகால மின் தேவையை சமாளிக்க முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். 2011-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, தமிழகம் முழுவதும் தினமும் 10 மணி நேரத்திற்குமேல் மின்வெட்டு என்ற கடுமையான நிலைமையை இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே மாண்புமிகு அம்மா அவர்கள் மாற்றி, கழக ஆட்சியில் தமிழ் நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது. மேலும், கோடை காலத்தில் கூடுதல் மின் தேவை ஏற்படுவதை கணக்கிட்டு காற்றாலை,…
சென்னையில் இன்று காலை முதலே பரவலாகக் காணப்படும் மேகமூட்டமான சூழ்நிலை மற்றும் சூறைக்காற்று வீசியது உள்ளிட்ட காரணங்கள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். மத்திய வங்கக்கடல் பகுதியில் சுமார் 700 hPa வளிமண்டல அடுக்கில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சியும், ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு-தெற்காக நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த இருவேறு வானிலை அமைப்புகள் காரணமாக, வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை வீசி வந்த வறண்ட வடமேற்கு காற்று மாறி, வங்கக்கடலில் இருந்து அதிக ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு மற்றும் தரைக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. இன்றைய வானிலையில் கவனிக்கத்தக்க ஒரு முக்கிய அம்சமாக, வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே கடல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. காலை 08:00 மணி முதல் 10:00 மணிக்குள் கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி…
லடாக் பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், உயர் அதிகாரிகள் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் நூலிழப்பில் உயிர் தப்பியுள்ளனர். இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் எச்.ஏ.எல் சீட்டா (HAL Cheetah) ரக ஹெலிகாப்டர் ஒன்று, லடாக் பகுதியில் வழக்கமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கித் தரையிறங்க முடியாமல் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ மேஜர் ஜெனரல் சச்சின் மேக்தா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் புன்னகையுடன் எடுத்த ‘செஃல்பி’ புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழலிலும் ராணுவ வீரர்களின் மன தைரியத்தை இப்புகைப்படம் காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, மிகவும் நம்பகமான இந்தச் சீட்டா ஹெலிகாப்டர்…
திடீரென பலத்த சூறைக்காற்று வீசி வருவதன் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வானிலை திடீரென தலைகீழாக மாறியது. பலத்த சூறைக்காற்று வீசியதால், ரன்வேயில் விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் விமானம் ஒன்று சென்னையில் தரை இறங்க முடியாமல், உடனடியாக ஆந்திர மாநிலம் திருப்பதி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டு, அங்குப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. திடீர் வானிலை மாற்றம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் சென்னைக்கு வர வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இன்று கணிசமான நேரம் தாமதமாகின. இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். விமான நிலையப் பகுதி மட்டுமின்றி, சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே பலத்த புழுதி…
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 82 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்ஷி (Shanxi) மாகாணத்தில் உள்ள ‘லியுஷென்யு’ நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த பகுதிகளுக்குள் கார்பன் மோனாக்ஸைடு என்னும் நச்சு வாயு மிக அதிவேகமாகப் பரவியுள்ளது. இதன் காரணமாக, சுரங்கத்திற்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் மயக்கமடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். நச்சு வாயுவின் தீவிரமே பலி எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர முக்கியக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த லியுஷென்யு சுரங்கமானது அனைத்து விதமான நவீன பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது என்று கூறப்படும் நிலையில், இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிநவீன பாதுகாப்பு கட்டமைப்புகள்…
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மின்சாரத் தேவைகளுக்கு சூரிய ஆற்றலை பெருமளவில் பயன்படுத்தி வருவதன் மூலம், ஆண்டுதோறும் சுமார் 5.6 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் தற்போது பயன்பாட்டில் உள்ள 54 கிலோமீட்டர் நீள முதல்கட்ட மெட்ரோ ரயில் பாதை மற்றும் அதன் நீட்டிப்புப் பகுதிகளில் இந்தச் சூரிய மின்சக்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்கள் இயக்கம் தவிர்த்து, மெட்ரோ நிலையங்களின் இதர தேவைகளுக்கான மின்சாரத்தில் சுமார் 22 விழுக்காடு தற்போது இந்த மாற்று ஆற்றல் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக சென்னை முழுவதும் மொத்தம் 36 முக்கிய இடங்களில், 10.77 மெகாவாட் உச்ச திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கோயம்பேடு உள்ளிட்ட மெட்ரோ ரயில் பராமரிப்பு நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், அசோக் நகர், ஆலந்தூர், திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், நேரு பூங்கா,…
துக்க நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட மோதலில், சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க வந்த அவரது அண்ணனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (என்கிற சின்ன கோனை, 27). இவர் மீது மணலி புதுநகர் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ‘சி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார். இதனால், இவரும் இவரது அண்ணன் நவீனும் சொந்த ஊரில் வசிக்காமல் வெளியூரில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாப்பாளையத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அண்ணன், தம்பி இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். இறுதி ஊர்வலத்தின் போது இவர்களுக்கும், மற்றொரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, தனித்தனி குழுக்களாக மது அருந்திக் கொண்டிருந்தபோது மீண்டும் இருதரப்புக்கும்…
பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, தவணை முறையில் மக்களின் வருமானத்தை மோடி அரசு கொள்ளையடிப்பதாக கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசு தினசரி ரூ.1000 கோடி வரி வசூலித்த போதிலும் பாஜகவின் பேராசை இன்னும் அடங்கவில்லை என அவர் சாடியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது, அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் அரசு தொடர்ந்து மக்களைச் சுரண்டி வந்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், “நெருக்கடியான காலகட்டங்களில் தேர்தலை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் மத்திய அரசு, தேர்தல் முடிந்தவுடன் மக்களிடம் ‘தியாகம்’ செய்யுமாறு கூறுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் எரிபொருள் விலை மிகவும் குறைவு என்று மத்திய அரசு பொய்களை கூறிவருவதாகவும்…
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தியில் பதிவிட்டுள்ளதாவது, புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளியை தவெக நிர்வாகியின் மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய புகார் எழுந்துள்ளது. தாராபுரம் அருகேயுள்ள குள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த லதா (40). கணவனை இழந்த பெண், தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக சர்ச் சாலையில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த உணவகத்தை தமிழக வெற்றி கழகத்தின் தொகுதி பொறுப்பாளர் கராத்தே கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் ஹரிஹரன் ஆகியோர் நடத்தி வருவதாகத் தெரிகிறது. சமீபத்தில், உணவகத்தில் பணி நிமித்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஹரிஹரன் அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசி, காதின் அருகே பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த லதாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும்,…