Author: Editor web3
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் விவசாயி ஒருவர் மீது மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடவூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணகிரி, தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திடீரென கருணகிரியை நோக்கி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் கருணகிரியின் முதுகில் சுமார் 10 தோட்டாக்கள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் விவசாயி மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணகிரியைச் சுட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது, முன்விரோதம் ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக திடீர் மின் தடை மற்றும் குறை மின்னழுத்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனையில், மின்விநியோக தடைகளை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என மின்சார துறை அதிகாரி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் பல இடங்களில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் திடீர் மின் தடைக்கான பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து விரிவாக கேட்டறிந்ததாகவும் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில்துறையினரை பெரிதும் பாதிக்கும் குறை மின்னழுத்த குறைபாடுகளைச் சரிசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய கோடைக்கால மின் தேவையின் அளவு எவ்வளவு உள்ளது, அதனை தடையின்றி வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய ‘கிரீன் கார்டு’ வைத்துள்ள சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு எபோலா பாதிப்பு குறித்து தங்களது எச்சரிக்கையைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 21 நாட்களில் காங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற அல்லது அந்நாடுகள் வழியாகப் பயணம் செய்த கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தடை பொருந்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 30 நாட்கள் எபோலா பயணத் தடையில் இருந்து அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எபோலா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதைத் தடுக்க இந்த நீட்டிப்பு…
கோவை அருகே சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் விடிய விடிய நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சூலூர் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் தேடி வந்த நிலையில், கண்ணம்பாளையம் குளத்தின் அருகே அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இக்கொடூர சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இதையடுத்து, பள்ளப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி, அவரது நண்பர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மோகன் ராஜ் ஆகியோரை…
தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்றதும், கோவில், கல்வி நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதையடுத்து முதல்கட்டமாக 500-க்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மதுக்கடைகளை மூடும் பணிகளானது நடந்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு மாற்றுக் கடைகள் மற்றும் அலுவலகங்களில் பணி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த விற்பனையாளர்கள் மற்றும் இதர ஊழியர்களை, பணி மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ள அருகில் உள்ள கடைகளில் பணியமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள…
கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு நாடு தழுவிய அளவில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தேர்வு கட்டணத்தை மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே திருப்பியளிக்க தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள மறுதேர்வுக்கு மாணவர்கள் தனியாக எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் NTA ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. கட்டணத்தை திரும்பப் பெறுவது எப்படி? தேர்வு கட்டணத்தை ரீஃபண்ட் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தங்களின் வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். தளத்தில் தங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல் (Password) அல்லது பிறந்த தேதியைப் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். உள்நுழைந்த பிறகு, ‘Refund’ இணைப்பைக் கிளிக் செய்து, பின்வரும் துல்லியமான வங்கி விவரங்களை வழங்க…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க குழுவினரையும், குறிப்பாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சீனா உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் போல ராணுவ வீரர்களை மாறுவேடத்தில் அமர்த்தி சீனா இந்த உளவு வேலையை பார்த்ததாக பெய்ஜிங் மீது புகார்கள் எழுந்துள்ளன. ஜெனிபர் ஜெங் (Jennifer Zeng) என்ற சமூக ஊடக பயனர் இது குறித்து அடுக்கடுக்கான புகார்களைப் பகிர்ந்துள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற அரசு விருந்தின் போது, எலான் மஸ்க்கிற்கு பின்னால் நின்ற பெண் ஊழியர் உண்மையில் ஒரு சாதாரண ஹோட்டல் ஊழியர் அல்ல என்றும், அவர் சீன ராணுவத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, அந்தப் பெண்ணின் பெயர் Cheng Cheng. அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். சீன ராணுவத்தின் ‘ஹானர்…
பொதுமக்களுக்கு மேலும் சுமையளிக்கும் வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்துள்ளது. இந்த அதிரடி விலையேற்றத்தின் காரணமாக, சென்னையில் நேற்று ஒரு லிட்டர் ரூ.104.57-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், இன்று ரூ.105.44 ஆக மாறியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, உள்நாட்டிலும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே, கடந்த 10 நாள்களில் மட்டும் தற்பொழுது 3-வது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த எரிபொருள் விலை உயர்வு, வாகன ஓட்டிகள் மத்தியிலும் சாமானிய மக்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற 79-வது கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் (Cannes 2026) சிவப்பு கம்பளத்தில், உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது வழக்கமான கம்பீரத்துடனும் தனித்துவமான ஃபேஷன் தேர்வினாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அமித் அகர்வால் வடிவமைத்த ‘அபிஸ் ப்ளூ’ (Abyss Blue) எனப்படும் மினுமினுக்கும் நள்ளிரவு நீல நிற (Midnight Blue) கவுன் உடையில் ஐஸ்வர்யா ராய் வலம் வந்தார். இந்த ஆடையில் உள்ள நுணுக்கமான கிரிஸ்டல் வேலைப்பாடுகள் (Crystal Vein Embroidery) மற்றும் வடிவமைப்பை உருவாக்குவதற்கு 1,500 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. தோள்பட்டைகளில் சிறகுகள் போன்ற அமைப்பும், கைகளில் அலை அலையாகக் கவிழ்ந்திருக்கும் நீளமான துணியும்இந்த ஆடைக்கு ஒரு புதிய ‘ஃப்யூச்சரிஸ்டிக்’ மற்றும் ராயல் தோற்றத்தைத் தந்தன. ஐஸ்வர்யா ராயின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் (SM) படுவேகமாக வைரலாகி வருகின்றன. வைரல் ரெட் கார்பெட் லுக் மட்டுமின்றி,…
ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றின் ‘எலிமினேட்டர்’ போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதப்போகும் அந்த 4-வது அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தனது கடைசி லீக் போட்டியில் வலுவான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 18 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றது. இருப்பினும், ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளை விட நெட் ரன்ரேட் சற்று குறைவாக இருந்ததால், புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தையே எஸ்ஆர்ஹெச் பெற்றது. இதன் காரணமாக அந்த அணி நேரடியாக ‘எலிமினேட்டர்’ சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிளே-ஆஃப் சுற்றின் முதல் மூன்று இடங்களை ஆர்சிபி, குஜராத் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் உறுதி செய்துவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் ஒரேயொரு 4-வது இடத்திற்கு தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,…