Author: Editor web3
நேபாளப் பகுதியில் நிலவிய சாதகமான வானிலையைப் பயன்படுத்தி, ஒரே நாளில் 274 மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த அருண் குமார் திவாரி மற்றும் சந்தீப் ஆரே ஆகிய இரு வீரர்களும் அடங்குவர். இவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து தங்களது இலக்கை வெற்றிகரமாக எட்டினர். சிகரத்தை வென்று பெருமையுடன் கீழே இறங்கத் தொடங்கியபோது, ‘டெத் ஜோன்’ (Death Zone) எனப்படும் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான பகுதியில் நிலவிய கடுமையான குளிர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் அதீத உடல் சோர்வு காரணமாக இருவரும் கடுமையான உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர். ஷெர்பா (Sherpa) மீட்புக் குழுவினர் மற்றும் வழிகாட்டிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவர்களைக் காப்பாற்ற நள்ளிரவிலும் தீவிரமாகப் போராடினர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் மலையிலேயே தங்களது இறுதி மூச்சை விட்டனர். அண்மைக்காலமாக எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுபவர்களின்…
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரவிருக்கும் வேளையில், நேரம் கிடைத்தால் தமிழகத்திற்கும் ஒரு குறுகிய காலப் பயணம் மேற்கொண்டு முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தனது நண்பர் விஜய்யை, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளார். தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் எதிர்காலத்திற்காகவும் முதல்வர் விஜய் திறம்படச் செயல்படத் தேவையான வலிமையும் ஞானமும் கிடைக்கப் பிரார்த்திப்பதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எனது நண்பரும் தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினேன். வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில்…
தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைச்சரவையின் முழுமையான விரிவாக்கம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிமுகவின் மிக முக்கிய அரசியல் தளமாக விளங்கும் கொங்கு மண்டலத்திற்கு முதலமைச்சர் விஜய் அசுர பல பிரதிநிதித்துவத்தை அள்ளிக் கொடுத்துள்ளார். மொத்தமுள்ள அமைச்சரவையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே 9 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தக் கோட்டையாகக் கருதப்படும் கொங்குப் பகுதியில், அக்கட்சியின் செல்வாக்கை முழுமையாகக் கட்டுப்படுத்த தவெக இந்த மெகா வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. யார் அந்த 9 கொங்கு அமைச்சர்கள்: கொங்கு மண்டலத்தின் அனைத்து முக்கிய மாவட்டங்களையும் உள்ளடக்கி, சீனியர்கள் மற்றும் இளம் முகங்களின் கலவையாக இந்த அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கே.ஏ. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்) – வருவாய்த் துறை அமைச்சர் அருண்ராஜ் (திருச்செங்கோடு) – சுகாதாரத்துறை அமைச்சர் கமலி (அவினாசி) – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் விஜயலட்சுமி (குமாரபாளையம்)…
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில், தமிழக அரசியல் வரலாற்றிலேயே புதிய மைல்கல்லாக Gen Z (1990களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்த முதல் அமைச்சர் என்ற பெருமையை அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலி பெற்றுள்ளார். இன்று காலை 7 மணி வரை தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற விபரமே தெரியாமல் இருந்த கமலிக்கு, முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி கோட்டை வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவைப் பட்டியலில் அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலியின் பெயர் கடைசி நிமிடம் வரை இறுதி செய்யப்படாமல் இருந்தது. முன்னதாக, மற்றொரு பெண் எம்.எல்.ஏ-வான சத்யபாமாவின் பெயரே தீவிரப் பரிசீலனையில் இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் சத்யபாமாவுக்குப் பதிலாக கமலியின் பெயரை முதல்வர் விஜய் டிக் செய்துள்ளார். காலை 7 மணிக்குப் பிறகே தனக்கு அமைச்சர் பதவி என்ற அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்ததாகக் கூறி…
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவை இன்று 23 புதிய அமைச்சர்களின் சேர்க்கையோடு முழுமையடைந்துள்ள நிலையில், சீனியர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் இலாகா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 10 அன்று முதற்கட்டமாகப் பதவியேற்ற மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையனுக்கு மிக முக்கியத் துறையான நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றபின் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள புதிய இலாகா ஒதுக்கீடு பட்டியலில், செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு, அவருக்கு வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நிதி அமைச்சர் மரிய வில்சன்: சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, இன்று புதிய அமைச்சராகப் பதவியேற்ற மரிய வில்சனுக்கு மிக முக்கியமான நிதித்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வியாளராகவும், சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராகவும் அறியப்படும் இவருக்கு இந்த முக்கியப்…
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முறைப்படி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்: செங்கோட்டையன் – வருவாய்த்துறை அமைச்சர் மரிய வில்சன் (ஆர்.கே.நகர்) – நிதி அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி) – மீன்வளத்துறை அமைச்சர் கமலி (அவிநாசி) – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் விஜயலட்சுமி (குமாரபாளையம்) – பால்வளத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் – வனத்துறை அமைச்சர் வினோத் (கும்பகோணம்) – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ராஜீவ் குமார் (கிள்ளியூர் – காங்கிரஸ்) – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜ்குமார் (கடலூர்) – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் காந்திராஜ் (அரக்கோணம்) – கூட்டுறவுத் துறை அமைச்சர் மதன்ராஜ் (ஒட்டப்பிடாரம்) –…
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான தனபால் அக்கட்சியில் இருந்து விலகியதும், அவரது மகனுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு தற்போது புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதற்குப் பிந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சபாநாயகராகப் பணியாற்றியவர் தனபால். குறிப்பாக, அதிமுகவில் பிளவு ஏற்பட்ட காலகட்டத்தில் சபாநாயகராக இருந்து அப்போதைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்தது. இருப்பினும், கடந்த தேர்தல் தொகுதிப் பங்கீட்டின் போது தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனபால் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். “ஆட்சியைக்…
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா, மீண்டும் ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவின் போதும் இதேபோல் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதுஇதையடுத்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதவியேற்ற விழாவில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படுவதற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. இதற்கு தவெக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முன்னுரிமை பெற வேண்டும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம்…
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை 33 உறுப்பினர்களுடன் முழுமையடைந்துள்ள நிலையில், இந்த புதிய அமைச்சரவையின் பட்டியல் சமூகப் பிரதிநிதித்துவம் மற்றும் தவெக-வின் அடித்தளமாக விளங்கிய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமைச்சரவையில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதோடு, அடித்தட்டு மக்களுக்காக உழைத்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 7 தலித் அமைச்சர்கள்: புதிய அமைச்சரவையில் பட்டியலின (SC) சமூகத்திற்குப் பலமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பி. விஸ்வநாதனுடன் சேர்த்து மொத்தம் 7 தலித் முகங்கள் அமைச்சரவையில் தடம் பதித்துள்ளனர். ராஜ்மோகன் (பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்) காந்தி ராஜ் (அரக்கோணம்) தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்) கமலி (அவிநாசி) லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்) மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்) பி. விஸ்வநாதன் (மேலூர் – காங்கிரஸ்) பெண் அமைச்சர்கள்: பெண் உரிமை மற்றும் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 4 பெண் அமைச்சர்கள்…
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ கூட்டணி அரசு, தனது அமைச்சரவையை அதிரடியாக விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், புதிய கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு (சுமார் 59 ஆண்டுகள் கழித்து) தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்கிறது என்பது அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தவெக அமைச்சரவையில் எஸ். ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி), பி. விஸ்வநாதன் (மேலூர் தொகுதி) ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் இடம்பெறும் இரு அமைச்சர்கள் ஆவர். முதலமைச்சர் விஜய் கடந்த மே 10 அன்று பொறுப்பேற்றபோது, முதற்கட்டமாக அவருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். அப்போது 22-க்கும் மேற்பட்ட முக்கியத் துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தன. தற்போது ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேலும் 23 புதிய…