Author: Editor web3
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து வணிகர்களின் அமைப்பு (AIOCD) சார்பில் நாளை (மே 20, புதன்கிழமை) ஒரு நாள் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய மருத்துவப் பரிந்துரைச் சீட்டுகள் மற்றும் தகுந்த சரிபார்ப்புகள் இல்லாமல் இணையவழியில் மருந்துகள் விநியோகிக்கப்படுவதற்கு மருந்து வணிகர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனையின்றி வலி நிவாரணிகள், தூக்க மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகள் போன்றவை ஆன்லைன் மூலம் எளிதாகக் கிடைப்பதால், அது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரிக்கின்றனர். கார்ப்பரேட் ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் அதீத தள்ளுபடிகளால், பாரம்பரிய உள்ளூர் சில்லறை மருந்துக்கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்ட மின்னணு மருந்தக (e-pharmacy) அரசாணையை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த வேலைநிறுத்தப்…
இந்தியாவில் மிக விரைவில் ஒரு பெரிய “பொருளாதாரப் புயல்” வீசப்போகிறது என்றும், இதனால் சாமானிய மக்களும் சிறு வணிகர்களுமே கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும், இந்த நெருக்கடியால் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானி ஆகியோர் எந்தப் பாதிப்பும் அடைய மாட்டார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, அங்கு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்த அவர், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு உழைக்கும் வர்க்கத்தினரை விடுத்து, ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு சாதகமாகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புயல் நம்மை நெருங்கி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் மோடிஜி உருவாக்கிய கட்டமைப்பு அதானி மற்றும் அம்பானிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. தற்போது அந்த கட்டமைப்பே சரிவின் விளிம்பில்…
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட துறைகளில், சுமார் 5,500-க்கும் அதிகமான நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பணி நேரம் காலை 10:10 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆகும். இருப்பினும், சமீபகாலமாக பணியாளர்கள் பலர் தாமதமாக பணிக்கு வருவதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் தினசரி காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துவிடுகிறார். இதனைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் அனைவரும் தாமதத்தைத் தவிர்த்து, சரியாக காலை 10 மணிக்கே பணிக்கு ஆஜராக வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தரப்பில் துறை வாரியாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில்…
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்டிற்குப் பதிலாக கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் தலைமையில் 15 பேர் கொண்ட இந்த இந்திய அணி களமிறங்குகிறது. கடந்த நவம்பர் மாதம் உள்நாட்டில் தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என தோற்றதற்குப் பிறகு இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், வேகப்பந்து வீச்சாளர் குர்னூர்…
விலை உயர்த்தப்பட்ட வெறும் நான்கே நாட்களில், மோடி அரசு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. தன் தோல்விகளை மறைத்து, அதன் பாரத்தை மக்கள் மீது சுமத்தும் முயற்சியில் இந்த அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், “சாமானிய மக்களைக் கொள்ளையடித்து, அமெரிக்காவில் அதானிக்கு தடையில்லாச் சலுகை வழங்குவதுதான் மோடியின் ‘காம்ப்ரமைஸ் மாடல்’ என்று விமர்சித்துள்ள அவர், உலகிற்கே விஸ்வகுரு என்று போலியான பெருமை பேசும் பிரதமர் மோடி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான “அனுமதிக்கு” காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்குமாறு அமெரிக்காவிடம் கெஞ்சியுள்ளார். இப்படிச் செய்யும் ஒவ்வொரு முறையும், 140 கோடி இந்தியர்களின் பெருமைக்கு அவர் கங்கம் விளைவிக்கிறார். இதற்கு முன்பு எந்தவொரு இந்திய அரசாங்கமும் இந்த அளவிற்குத் தாழ்ந்து போனதில்லை. மத்திய அரசின் கூற்றுப்படி, எண்ணெய் வாங்க அனுமதி கிடைத்துவிட்டது என்றால், பிறகு ஏன் பெட்ரோல்-டீசல் விலை உயர்வின் பாரத்தை…
தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டாலோ அல்லது கருத்தடை செய்யப்பட்டாலோ, அவற்றை மீண்டும் அதே பகுதிகளில் கொண்டு போய் விடக்கூடாது என்ற முந்தைய உத்தரவில் திருத்தங்கள் செய்யக் கோரிய மனுக்களை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்துக் கடுமையான கவலைகளையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய் கடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தாக்குதல்களால் சிறுவர்களும், முதியவர்களுமே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் மட்டுமின்றி, நாட்டின்…
அதிமுகவில் அதிகார மோதல் போக்கு உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், கட்சியின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் மட்டும் இக்கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்களது மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானக் கடிதங்களை அவரிடம் நேரில் வழங்கினர். மேலும், அந்தந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு முழு ஆதரவு அளித்துக் கையெழுத்திட்ட படிவங்களையும் மாவட்டச் செயலாளர்கள் முறைப்படி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அறிவுரைகளையும், கருத்துகளையும்…
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இனி காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பயோமெட்ரிக் முறையில் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி நிரந்தரப் பணியாளர்கள் 12,960 பேர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 23,421 பேர் என மொத்தம் 36,381 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் பணி நேரத்திற்கு முறையாக அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், இதனால் மக்கள் பணிகள் தொய்வடைவதாகவும் புகார் எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இனி காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பயோமெட்ரிக் (Biometric) முறையில் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நள்ளிரவு நேரத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை, கஞ்சா வழக்கில் தொடர்புடைய கும்பல் வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாகக் குத்திய சம்பவம் டெல்டா மாவட்டங்களில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன். இவர் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் முத்துப்பேட்டை வட்டார செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று (மே 18) இரவு தனது செய்திப் பணிகளை முடித்துவிட்டு, வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 11:45 மணியளவில் இவரது வீட்டின் கதவு தட்டப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்த அப்துல் பாசித் என்பவன், மேலும் இருவருடன் சேர்ந்து அங்கு வந்துள்ளான். அண்ணே, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என அந்தக் கும்பல் அழைத்ததும், ஹாஜா முகைதீன் வாசலுக்கு வந்து விபரம் கேட்டுள்ளார். அதற்கு அப்துல் பாசித், “என்னை கோவிலூரைச் சேர்ந்த ஒருவர் தாக்கிவிட்டார்.…
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட விறுவிறுப்பான பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (மே 20) இரவு 7:00 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. ரசிகர்களின் வசதிக்காகப் போட்டிகளின் அடிப்படையில் வெவ்வேறு தேதிகளில் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் போட்டிக்கான டிக்கெட்கள் வரும் 20, 21-ம் தேதிகளிலும், குவாலிஃபையர் 2, இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 22, 22-ம் தேதிகளிலும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது டிக்கெட் வாங்குவது எப்படி? ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளைக் மைதானத்திற்குச் சென்று நேரில் காண விரும்பும் ரசிகர்கள், ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iplt20.com பக்கத்திற்குச் சென்று தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.