Author: Editor web3

சென்னையின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் புறநகர் ரயில் வழித்தடங்களில் ஒன்றான அரக்கோணம் – செங்கல்பட்டு இடையேயான 68 கிலோமீட்டர் தூரப் பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ. 993 கோடி மதிப்பீட்டில் இந்த மெகா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரயில்களின் தாமதத்தைக் குறைக்கவும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இத்திட்டம் வழிவகை செய்யும். இந்தத் திட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “இந்தத் தடம் விரிவாக்கத்தின் மூலம் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையேயான ரயில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவது உறுதி செய்யப்படுவதுடன், ரயில்வேயின் ஒட்டுமொத்த செயல்பாடும் மிகவும் சீராகவும், திறம்படவும் மாறும்” என்று தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வேயால் இயக்கப்படும் இந்த வழித்தடமானது சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு…

Read More

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வசூல் வேட்டை நடத்தி வரும் திரைப்படம் ‘கருப்பு’. நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் அதில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தை மறைமுகமாக நையாண்டி செய்யும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்களும் இளையராஜாவின் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், “இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்தியதற்காக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்” என்ற தொனியில் வசனம் இடம்பெற்றிருந்தது. பல ஆண்டுகளாக தனது இசைக்கான காப்புரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஒரு ஜாம்பவானை, இப்படித் தரம் தாழ்த்திச் சித்தரிப்பது முறையல்ல என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஜே. பாலாஜிக்கும் படக்குழுவிற்கும் எதிராக கண்டன குரல்களை எழுப்பினர். சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்…

Read More

தஞ்சாவூர் அருளாந்த நகர் பகுதியில் உள்ள பிரபல கே.எஃப்.சி (KFC) சிக்கன் கடையில் ஏசி கம்ப்ரஸர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடையில் இருந்த ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அதனைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது ஏசியின் அவுட்டோர் யூனிட்டில் கேஸ் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கேஸ் கசிவு ஏற்பட்டு கம்ப்ரஸர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் ஏசி பழுது பார்க்கும் தொழிலாளி கணேசன், கடையில் பணிபுரியும் ஊழியர்களான அருண்குமார், ரவிராஜ் மற்றும் டெலிவரி ஊழியர்களான பிரேம், கதிரேசன் உள்ளிட்ட ஐந்து பேர்  பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் தஞ்சை தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்…

Read More

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் மேற்பார்வையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், கடையிலிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல்குமார் (23) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். அமுல்குமாரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அம்பலமானது. உடனடியாக…

Read More

சென்னையில் இன்று (மே 19) அதிகாலை முதலே அமலாக்கத்துறை  அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ரூ.300 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரங்கள் தொடர்பாகவும் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் பிரபல பைனான்சியர் குல்னஸ் பேகம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களை இலக்கு வைத்து இந்த ரெய்டு துவங்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் லக்ஷ்மணசாமி என்பவரது இல்லம், அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமான இடங்கள் என நகரின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக சென்னை அயனாவரம் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களிலும் இந்த சோதனையானது…

Read More

கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, சென்னையில் இன்று (மே 19) திடீரென அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ,120 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,870-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ஒரே நாளில் ரூ.960 வரை உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கி திரும்புவது…

Read More

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸின் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. காங்கோ மற்றும் உகாண்டா உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி எபோலா பாதிப்பால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த புதிய வகை எபோலா தொற்றால் பாதிக்கப்படும் 100 நபர்களில், சராசரியாக 30 பேர் மரணமடையும் அபாயம் இருப்பதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன. இதன் காரணமாக, சர்வதேச அளவில் பதற்றம் நிலவினாலும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் எபோலா பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு, தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மகாராஷ்டிர…

Read More

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குத் தமிழ் திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யை வைத்து GOAT திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, முதல்வருக்கு ஒரு மறக்கமுடியாத நெகிழ்ச்சியான பரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘GOAT’ திரைப்படத்தில் விஜய் பயணிக்கும் கார் ஒன்றின் முகப்புப் பலகையில் ‘TN 07 CM 2026’ என்ற பதிவு எண் இடம் பெற்றிருக்கும். அப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களால் இந்த நம்பர் பிளேட் பெரிதும் உற்றுநோக்கப்பட்டு, இணையத்தில் வைரலானது. இந்நிலையில், திரையில் காட்டியது போலவே 2026-ல் விஜய் நிஜமாகவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதால், அந்தப் படத்தின் கார் நம்பர் பிளேட்டை அழகிய ‘ஃபிரேம்’ செய்து முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பரிசாக வழங்கியுள்ளார் வெங்கட் பிரபு. மேலும், எதிர்காலத்தில் விஜய் தமிழக முதல்வராவார் என்பதைத் தான் இயக்கிய ‘GOAT’ படத்திலேயே முன்கூட்டியே கணித்திருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன்…

Read More

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில், இரண்டு யானைகள் திடீரென சண்டையிட்டுக் கொண்டதில், சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த ஜின்மு என்ற ஜுனேஷ்(33) என்ற பெண், குடகு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். சம்பவத்தன்று, துபாரே முகாமில் உள்ள ஆற்றில் யானைகள் குளிப்பதை அவர் மற்ற சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ‘கஞ்சன்’ என்ற யானை, ‘மார்த்தாண்டா’ என்ற மற்றொரு யானையை திடீரென  முட்டித் தள்ளி சண்டையிட்டது. https://x.com/ndtv/status/2056303329509335115? யானைகளின் இந்தத் திடீர் மோதலால் நிலைகுலைந்த மார்த்தாண்டா யானை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜுனேஷ் மீது சாய்ந்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர், ஒரு யானையின் அடியில் சிக்கியதோடு, மற்றொரு யானை மிதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் மேற்கொண்ட முயற்சி…

Read More

அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1972-ஆம் ஆண்டு திமுகவிற்கு எதிராக ‘பொன்மனச்செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் மக்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த இயக்கத்தை இரும்புக்கோட்டையாக மாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா. எம்.ஜி.ஆர், அம்மா மற்றும் அவர்கள் காட்டிய வழியிலான ஆட்சி என மொத்தம் 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து, ஏழைகளைக் காத்து, வறுமையை ஒழித்த பெருமை இந்த இயக்கத்திற்கு உண்டு. கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிய பெருமை கழக அரசைச் சேரும். “காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்பார்கள். அதுபோல, எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கம்பீரமான ஆலமரத்தின்…

Read More