Author: Editor web3
மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை மேலும் சுறுசுறுப்பாக்கவும், பொதுமக்களுக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும் ஏதுவாக, தமிழகத்தில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, உயர் அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி, பி. அமுதா, சத்யபிரதா சாகு, ஷுன்சோங்காம் ஜடக் சிரு, அனில் மேஷ்ராம், எம். வள்ளலார், கே.எஸ். பழனிசாமி, வி. தட்சிணாமூர்த்தி, சஜ்ஜன்சிங் ஆர். சவான், பிரசாந்த் எம். வட்னேரே, ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் மற்றும் ஜி. லட்சுமிபதி ஆகியோருக்குப் புதிய பணியிடங்களும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முக்கிய வாரியங்களின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், சில குறிப்பிட்ட அதிகாரிகள் அந்தந்த துறைகளின் கீழ் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, டி. ஆனந்த் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வசமும், ஏ.ஆர். ராகுல் நாத் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) வசமும்…
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற முதல் நாளான இன்றே, மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மூன்று மிக முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய அமைச்சரவைக் கூட்டத்திலும் இத்திட்டங்களுக்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு இலவச பஸ் பயணம்: கேரள மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டத்தின் மூலம் மாநிலத்தில் சுமார் 1.88 கோடி மகளிர் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பொதுமக்களின் சுகாதாரப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ஆஷா (ASHA) பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதச் சம்பளத்தில் ₹3,000 உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. முதியோர் நலனுக்காக தனித்துறை: முதியவர்களின் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும்…
கோவை இருகூர் பகுதியில் விளையாட சென்ற இடத்தில், 13 வயது சிறுவன் சக நண்பர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டு, உடல் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவை இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரது 13 வயது மகன், ஆர்.ஜி. புதூர் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், கடந்த மே 15-ஆம் தேதி பிற்பகல், தனது நண்பர்கள் சிலருடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளான். ஆனால், இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தபோது, “அவன் யாரோ ஒரு மர்ம நபருடன் தனியாகச் சென்றுவிட்டான்” எனக் கூறி மழுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனுடன் கடைசியாகச் சென்ற…
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47), சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணியளவில் காலமானார். மாலதி அவர்களுக்குத் தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக, கடந்த 19 நாட்களாகச் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தன்னிடம் இருந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் மனைவியின் சிகிச்சைக்காகச் செலவழித்த நடிகர் முத்துக்காளை, மேற்கொண்டு மருத்துவச் செலவுகளுக்குப் பணமின்றித் தவித்தார். இதையடுத்து, தனது மனைவியைக் காப்பாற்ற நிதியுதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தத் தகவல் அறிந்தவுடன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர். எனினும், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்த மாலதி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார். கடந்த ஆண்டுதான் தனது மகன்…
சட்டம் ஒழுங்கை காப்பதில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும், கடந்த ஆட்சியின் நிலைதான் நீடிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில்,தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு – பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெகவும் தோல்வியடையக் கூடாது. https://x.com/TTVDhinakaran/status/2056246374530998376?t=9mHh9mTaBVznLLayHiNDXA&s=08 காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில்…
சென்னையில் ‘கிளாண்டர்ஸ்’ (Glanders) எனப்படும் ஆபத்தான பாக்டீரியா தொற்று பாதிப்பு காரணமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பரவி வரும் இந்த நோய் தொற்றின் எதிரொலியாக, மாநிலத்தின் முக்கியச் சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் அனைத்திலும் குதிரை சவாரிக்குக் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குதிரைகளுக்குக் காய்ச்சல், தோல் புண், சுவாசக் குறைபாடு (மூச்சுத் திணறல்) போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கண்டிப்பாகச் சவாரி மேற்கொள்ளக் கூடாது எனவும் நோயுற்ற குதிரைகளை உடனடியாகப் பிற குதிரைகளிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் குதிரைகள் வளர்க்கப்படும் லாயங்கள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களை லெய்சால் அல்லது கிருமிநாசினிகள் கொண்டு முறையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, சுகாதாரத் துறை…
பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (வயது 85) ஆவார். இவர், இன்று (17.05.2026) மாலை கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரது தற்கொலை பற்றி அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவுச் செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகினரும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், பல்வேறு மேடைகளில் திரைத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்காகவும், சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சர் விஜய், இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த்திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகஸ்தருமாகத் தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான திரு. கே. ஜே.…
கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து 2026-2027 கல்வி ஆண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களையும் அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார். அந்தவகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு (2026-2027) தொடங்குவதாகவும், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மாணவர்கள், எதிர்பார்த்துக் காத்திருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20, புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1…
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறைக்கும் வகையில், மின் நுகர்வோருக்காகப் புதியதொரு நவீன தொழில்நுட்ப வசதியை மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக மின் வாரிய விதிகளின்படி, வீடுகளுக்கான மின் பயன்பாடு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. ரீடிங் எடுக்கப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும். இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால், முன்கூட்டியே எந்தவித அறிவிப்பும் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதன்பின், நுகர்வோர் அபராதத் தொகையைக் கட்டிய பிறகே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். வேலைப்பளு மற்றும் மறதி காரணமாகப் பலர் சரியான தேதியில் பணம் செலுத்த முடியாமல் இந்தத் துண்டிப்பு நடவடிக்கையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் பொதுவான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘தானியங்கி மின் கட்டணச் செலுத்தும் முறை’ தற்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நுகர்வோர்,…
கோடை விடுமுறை முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த உயர் மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கியத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் என்பதால், இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமாக 4 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படியில், தமிழகத்தில் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது. தேர்வு முடிவுகள் வரும் மே 20-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது மேலும், தமிழகத்தில் வெயிலின்…