Close Menu
    What's Hot

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மின் கட்டணம் செலுத்த புதிய வசதி!. வங்கி கணக்கில் இருந்து தானாகவே ‘ஆட்டோ பே’ முறை அறிமுகம்!
    தமிழ்நாடு

    மின் கட்டணம் செலுத்த புதிய வசதி!. வங்கி கணக்கில் இருந்து தானாகவே ‘ஆட்டோ பே’ முறை அறிமுகம்!

    Editor web3By Editor web3May 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN EB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறைக்கும் வகையில், மின் நுகர்வோருக்காகப் புதியதொரு நவீன தொழில்நுட்ப வசதியை மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    தமிழக மின் வாரிய விதிகளின்படி, வீடுகளுக்கான மின் பயன்பாடு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. ரீடிங் எடுக்கப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும்.

    இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால், முன்கூட்டியே எந்தவித அறிவிப்பும் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதன்பின், நுகர்வோர் அபராதத் தொகையைக் கட்டிய பிறகே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். வேலைப்பளு மற்றும் மறதி காரணமாகப் பலர் சரியான தேதியில் பணம் செலுத்த முடியாமல் இந்தத் துண்டிப்பு நடவடிக்கையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்தப் பொதுவான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘தானியங்கி மின் கட்டணச் செலுத்தும் முறை’ தற்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த புதிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நுகர்வோர், தங்களது வங்கி கணக்கை மின் இணைப்புடன் ஆன்லைன் மூலமாக இணைக்க வேண்டும். இதன் மூலம், இனிவரும் காலங்களில் மின் நுகர்வு கணக்கெடுக்கப்பட்ட 10-ஆவது நாளில், உங்களுடைய மின் கட்டணத் தொகை வங்கி கணக்கில் இருந்து ஆட்டோமேட்டிக்காக (தானாகவே) எடுத்துக் கொள்ளப்படும்.

    இந்த வசதியை எப்படி ஆக்டிவேட் செய்வது? மின் நுகர்வோர் தங்களது வீட்டிலிருந்தபடியே மிக எளிதாக இந்த வசதியைத் தொடங்கிவிடலாம். மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உள்ள ‘Payment’ பிரிவுக்குச் சென்று, ‘EB Auto Pay’ என்ற புதிய ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர், உங்களுடைய மின் இணைப்பு எண்ணை (Consumer Number) உள்ளிட்டு, விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.மின் இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும். இறுதிப் படியாக, உங்களது வங்கி கணக்கு எண் (Bank Account Number) மற்றும் தேவையான வங்கி விவரங்களை உள்ளீடு செய்து இந்தச் சேவையைச் செயல்படுத்திக் கொள்ளலாம்.

    வீட்டு உபயோக மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து தாழ்வழுத்தப் பிரிவு  நுகர்வோரும் இந்த எளிய நவீன வசதியைப் பயன்படுத்தி, கடைசி நேர மின் துண்டிப்பு பதற்றத்தைத் தவிர்க்கலாம் என மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுதிரைகளுக்குப் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று – சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை
    Next Article மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

    Trending Posts

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    May 18, 2026

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.