Author: Editor web3

கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களைப் பிடித்து வரலாற்றுச் சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில், கேரளாவின் 13-வது முதலமைச்சராக மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், கேரள ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் வி.டி. சதீசனுக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 20 அமைச்சர்கள் கொண்ட முழு அமைச்சரவையும் இன்று ஒன்றாகப் பதவியேற்றுக் கொண்டது. இந்த விழாவில் தேசிய அளவிலான முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கூட்டணித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர்…

Read More

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நடப்பு சாம்பியனான ஆர்சிபி  ஏற்கனவே 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிளே ஆஃப் செல்லும் வாய்ப்புகளின் சதவீதம்: குஜராத் டைட்டன்ஸ் அணி, 95% 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்குச் செல்ல 1 வெற்றி போதும், ரன் ரேட்டும் வலுவாக உள்ளது. ஹைதராபாத் 87%: 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் 1 வெற்றி இவர்களை 16 புள்ளிகளுக்குக் கொண்டு செல்லும். சென்னை 44%: 12 புள்ளிகளுடன் சம பலத்தில் உள்ளது. ரன் ரேட் பாசிட்டிவாக இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம். ராஜஸ்தான் 44%: சென்னைக்கு இணையாக 12 புள்ளிகளுடன் சம வாய்ப்பில் நீடிக்கிறது. பஞ்சாப் 35%: 13 புள்ளிகளுடன்…

Read More

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய குடும்பச் சட்டம், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. தாலிபன்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள, 31 பிரிவுகளைக் கொண்ட இந்த “தம்பதியர் பிரிவிற்கான கோட்பாடுகள்” (Principles of Separation Between Spouses) என்ற புதிய சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்றால், பருவமடைந்த ஒரு பெண்ணிடம்திருமணத்திற்கான சம்மதம் கேட்கப்படும்போது, அவர் பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அமைதியாக இருந்தால், அது அந்தத் திருமணத்திற்கு அவர் தெரிவித்த ‘சம்மதம்’ என்றே எடுத்துக்கொள்ளப்படும். இதே விதியின் கீழ், ஒரு சிறுவனுக்கோ அல்லது ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கோ இந்த ‘மௌனம் சம்மதம்’ என்ற விதி பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் திருமணங்களை முடிக்கும் முழு அதிகாரமும் தந்தை மற்றும் தாத்தாக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நிச்சயிக்கும்…

Read More

அதிமுக-வின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிந்து அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், செம்மலையின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொத்தமுள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,050 பேர் பொதுக்குழுவை கூட்ட கையெழுத்திட்டுள்ளனர். 59% உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதால் பொதுக்குழுவை கூட்ட எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர், இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த பேரதிர்ச்சியாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வலுவான அரசியல் செல்வாக்கு கொண்ட செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வருத்தத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளன. இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக உழைத்து…

Read More

புதுடெல்லியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி மாநில அரசு ஒரு முக்கிய நிர்வாகச் சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 நாள்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் புதிய வசதியை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்துள்ளார். அரசுத் துறைகளைப் போலவே, டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையைக் கடைப்பிடிக்குமாறு அம்மாநிலத் தொழிலாளர் துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் சர்வதேசப் பதற்றங்களுக்கு இடையே, எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த அழைப்பை ஏற்று, டெல்லி அரசு “மேரா பாரத், மேரா யோக்தான்” (Mera Bharat, Mera Yogdaan) என்ற 90 நாட்கள் நீடிக்கும்…

Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜன் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவருடைய இந்த விபரீத முடிவு குறித்து அடையாறு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த கே. ராஜன், தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர். கடந்த 1983-ஆம் ஆண்டு சுரேஷ் நடிப்பில் வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கால் பதித்தார். 1991-ல் சரத்குமார், நிழல்கள் ரவி நடிப்பில் வெளியான ‘நம்ம ஊரு மாரியம்மா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதுமட்டுமின்றி, ‘தங்கமான தங்கச்சி’, ‘சின்ன…

Read More

தமிழகத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக அனுபவமில்லாத ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்த நடிகர் விஷாலுக்கு, முதலமைச்சரின் முடிவில் யாரும் தலையிடக்கூடாது என நடிகர் அருண் விஜய்  பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வருத்தத்தையும், புதிய அரசுக்கான சில கோரிக்கைகளையும் பகிர்ந்திருந்தார். அதாவது, முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள விஷால், செய்தித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். “சினிமா துறையில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளைக் கையாள, அனுபவம் இல்லாத ராஜ்மோகன் எப்படி சரியாக இருப்பார்?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். https://x.com/AVinthehousee/status/2055939361049550854 விஷாலின் இந்த விமர்சனத்திற்கு நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கடும்…

Read More

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  திடீரென வெறிபிடித்த நிலையில் ஓடிவந்த தெருநாய் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை அடுத்தடுத்து ஓட ஓட விரட்டிக் கடித்துக் குதறியுள்ளது. இந்தத் திடீர் நாய் தாக்குதல் ஒட்டுமொத்த அப்பகுதி மக்களையும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலில், அதிகாலையில் பணிக்குச் சென்ற நகராட்சி பெண் தூய்மைப் பணியாளர் உட்பட மொத்தம் 18 பேர் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 18 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு நச்சுமுறிவு ஊசிகளும், தீவிர முதலுதவிச் சிகிச்சைகளும் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர்களின் தகவல்படி, இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் தெருநாய்க் கடிக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, குடியிருப்புப் பகுதிகளிலும் வீதிகளிலும்…

Read More

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே நேற்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலையில் நெஞ்சை பதறவைக்கும் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, ஹெல்மெட் அணிந்து தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணிமங்கலம் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் காவல் துறையினர், தப்பியோடிய…

Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் திடீரென கடல் நீர் சுமார் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், இன்று காலை ஒரு அசாதாரண இயற்கை நிகழ்வு அரங்கேறியுள்ளது. வார இறுதி நாளான இன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கடல் நீர் சுமார் 80 அடி தூரத்திற்குப் பின்வாங்கியது. இந்த திடீர் மாற்றம் அங்கிருந்த மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல் நீர் பெருமளவில் உள்வாங்கியதன் காரணமாக, எப்போதும் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பழமையான, பாசி படர்ந்த பாறைகள் தரைப்பகுதி போல வெளியே தெரியத் தொடங்கின. இந்த அரிய காட்சியைக் கண்ட உள்ளூர் மக்களும், வெளியூர் பயணிகளும் அச்சமின்றி அந்தப் பாறைகளின் மீது ஏறி நின்று, தங்களது மொபைல் போன்களில் புகைப்படங்களையும், செல்ஃபிக்களையும்…

Read More