Author: Editor web3
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள். இப்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. நான் இப்போது தான் சென்னைக்கு செல்கிறேன். அதற்குள் எல்லா விஷயங்களுக்கும் எப்படி பதில் சொல்ல முடியும்…?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில்,“உங்கள் வீட்டு பொருளாதாரத்தை பற்றி கேட்டால் உடனே பதில் சொல்ல முடியுமா…? அது போலத் தான் அரசின் செயல்பாடுகளும். ஒவ்வொன்றாக முன்னேறும் முதலமைச்சர் விஜய் அறிவித்த 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை மக்கள் வரவேற்று உள்ளனர். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். டாஸ்மாக் கடைகள் குறித்து பேசிய அவர், “பேருந்து நிலையங்கள், ஆலயங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டு உள்ளன.…
கோலிவுட் வட்டாரத்தில் தற்பொழுது வெடித்துள்ள விவாகரத்து மற்றும் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகள், முன்னணி நட்சத்திரங்களுக்கு இடையேயான மோதலாக உருவெடுத்துப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், தனது சொந்த வாழ்க்கை விவகாரங்கள் குறித்துப் பேசும்போது, தமிழ் சினிமாவின் ‘மூன்றெழுத்து’ இட்லி நடிகை ஒருவரே தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சீரழித்தார் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஒரு வெடிகுண்டை வீசியிருந்தார். ரவி மோகனின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு வெளியான சில நிமிடங்களிலேயே, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மிகவும் காட்டமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த உலகத்தில் உள்ள சில மனிதர்கள், தங்களது தரம் குறைந்த மரபணுவை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். உங்களைப் பற்றி நான் முன்பு கணித்துக் கூறியது எவ்வளவு உண்மையானது மற்றும் சரியானது என்பதை, இப்போது நீங்களாகவே…
பொதுமக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு கூடுதல் வரி அல்லது புதிய கட்டணங்களை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மைக்காலமாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இதில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய அரசின் இந்த புதிய வரி விதிப்பு ஆலோசனைக் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ்பிரஸ் பக்கத்தில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “பொதுமக்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானவை. இதுபோன்ற எந்தவொரு கட்டுப்பாட்டையும் மக்கள் மீது திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்குக் கிடையாது.
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் அழைப்புகள், உடற்பயிற்சி கூடம், பயணம் மற்றும் தூங்கும் போது கூட பாடல்கள் கேட்பது எனப் பலரும் மணி கணக்கில் ப்ளூடூத் இயர்பட்ஸ் மற்றும் வயர்லெஸ் ஹெட்போன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இதன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்தே, “ப்ளூடூத் இயர்பட்ஸ்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது மூளைப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா?” என்ற அச்சமும் விவாதமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ப்ளூடூத் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது? ப்ளூடூத் தொழில்நுட்பம் என்பது ரேடியோ அலைவரிசை (Radio Frequency – RF) கதிர்வீச்சு மூலம் செயல்படுகிறது. ‘கதிர்வீச்சு’ (Radiation) என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே மக்களுக்குப் புற்றுநோய் போன்ற நோய்களின் பயம் வந்துவிடுகிறது. ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, ப்ளூடூத் சாதனங்கள் வெளியிடும் கதிர்வீச்சு ‘அயனியாக்கமற்ற கதிர்வீச்சு’ (Non-ionizing radiation) வகையைச் சேர்ந்தது. இது எக்ஸ்ரே (X-rays) போன்ற ஆபத்தான அயனியாக்கும் கதிர்வீச்சுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மற்றும் மிகவும் பலவீனமானது. மணி…
தமிழக அரசியலில் ‘நம்பிக்கை’, ‘நிதானம்’, ‘அனுபவம்’ ஆகிய வார்த்தைகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் கே.ஏ. செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய அவர், தற்போது தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் தொடங்கி, கோட்டையின் நிதிப் பொறுப்பை ஏற்கும் வரையிலான அவரது நீண்ட நெடிய அரசியல் பயணம் தொகுப்பை பார்க்கலாம். அரசியல் தொடக்கம் மற்றும் எம்ஜிஆர் காலம்: 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கியபோது, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஆரம்பகால மூத்த நிர்வாகிகளில் செங்கோட்டையனும் ஒருவர். 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு மாறிய அவர், அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக மாறினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் 8…
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் கலைஞர் முத்துக்காளை, தற்போது தன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மருத்துவச் சூழல் காரணமாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் உதவி கோரியுள்ளார். ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து அவர் செய்த ‘செத்து செத்து விளையாடுவோமா’ காமெடியும், ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ திரைப்படத்தில் ஒற்றனாக வந்து அவர் செய்த அலப்பறைகளும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவை. நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு அண்மையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதற்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்குத் தலையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக, கடந்த 17 நாட்களாக அவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு மூச்சுவிடச் சிரமப்பட்டு வரும் தனது மனைவிக்கு, உயர்தர மேல் சிகிச்சை…
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் வசம் காவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ள நிலையில், மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் பின்வருமாறு: முதலமைச்சர் ஜோசப் விஜய்: காவல் துறை உள்துறை பொது நிர்வாகம் மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 16 துறைகள் முதலமைச்சர் விஜய் வசம் உள்ளது. அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள்: கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை. டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை, ஊழல் தடுப்பு, நீதி, சிறைத்துறை ராஜ்மோகன்…
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், உலக நாயகனுமான கமல்ஹாசன் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது இந்தச் சந்திப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தச் சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவுக்கான கோரிக்கைகள்: தமிழ் சினிமா துறையின் மேம்பாட்டை முன்னிறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் நேரில் கொடுத்துள்ளேன். நன்மை மலரட்டும்” என்று தெரிவித்துள்ளார். சினிமாத்துறையில் இருந்து வந்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யிடம், மூத்த திரைக்கலைஞரான…
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், முதன்முறையாக அரசு முறைப் பயணமாக டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 22-ஆம் தேதி அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தற்போது 5 நாடுகளுக்கான தனது அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் மே 21-ஆம் தேதி டெல்லி திரும்புகிறார். அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான மே 22-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் – பிரதமர் மோடி இடையேயான சந்திப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை விஜய் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த டெல்லி பயணத்தின் போது, பிரதமர் மோடியை மட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய மத்திய…
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு, பயங்கரவாதிகளைத் தன் மண்ணில் வளர்த்து வந்தால், அவர்கள் உலக வரைபடத்தில் (பூகோளத்தில்) நீடிக்க வேண்டுமா அல்லது வரலாறாக மாற வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். டெல்லி மானேக்சா மையத்தில் நடைபெற்ற ‘யூனிஃபார்ம் அன்வெயில்டு’ (Uniform Unveiled) கலந்துரையாடல் நிகழ்வில் ராணுவ தளபதி கலந்து கொண்டார். அப்போது, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) போன்றதொரு சூழல் மீண்டும் ஏற்பட்டால் இந்திய ராணுவம் எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நான் ஏற்கனவே கூறியதைத்தான் இப்போதும் சொல்கிறேன். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளைத் தன் நாட்டில் தங்க வைத்து, இந்தியாவிற்கு எதிராகச் சதி வேலைகளில் ஈடுபட்டால், பாகிஸ்தான்…