Author: Editor web3

தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு கடந்த மே 10 அன்று பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சரவையை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, புதிய கூட்டணியினர் மற்றும் ஆதரவளித்த பிரிவினரை உள்ளடக்கி மேலும் 23 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்குப் பதவியேற்புப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இதற்கான புதிய அமைச்சர்கள் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. காங்கிரஸ் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்த்து 23 அமைச்சர்கள் இன்று த வெ க அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் அதிகாரப்பூர்வப் பட்டியலின்படி, பல்வேறு மாவட்டங்களுக்கும், கூட்டணிச் சமன்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீநாத் (தூத்துக்குடி), அவிநாசி – கமலி, குமாரப்பாளையம் – விஜயலட்சுமி, காஞ்சிபுரம் – ரஞ்சித் குமார், கும்பகோணம்…

Read More

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (மே 21) நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘வீர் பூமி’யில் (Vir Bhumi) காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், அவரது தாயாருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜீவ் காந்தி ஏற்றார். பின்னர், அதே ஆண்டு அக்டோபர் மாதம், தனது 40-வது வயதில் இந்தியாவின் மிக இளம் பிரதமராகப் பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்தார். தொடர்ந்து டிசம்பர் 2, 1989 வரை இந்தியாவின் பிரதமராக அவர் மக்கள் பணியாற்றினார். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு  வித்திட்டவராக ராஜீவ் காந்தி போற்றப்படுகிறார். ஆகஸ்ட் 20, 1944 அன்று பிறந்த ராஜீவ் காந்தி, கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில்…

Read More

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக சுகாதாரத்துறை மிக முக்கியமான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் இருந்து வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகங்கள் உடனடியாக இந்த உத்தரவுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளின் தூய்மைத் தன்மையை 100% உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, மருத்துவமனைகளில் உள்ள அனைத்து சிகிச்சை வார்டுகள் மற்றும் கழிவறைகள் தொடர்ந்து தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினிகள்  கொண்டு உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட வேண்டும். மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும், அவர்களது உறவினர்களையும் எவ்விதக் கடினமான வார்த்தைகளும் இன்றி, மிகவும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள்…

Read More

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் பயன்பாட்டிற்காகப் புதிதாக வாங்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் ‘பொலிரோ’ (Bolero) காரை, முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்து, அவரே ஸ்டீயரிங்கைப் பிடித்து ஓட்டிப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பதிவில், மக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில், மருத்துவத் துறைக்கு இந்த புதிய வாகனங்கள் அர்ப்பணிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரே அதனை ஓட்டிப் பரிசோதித்தது அதிகாரிகளிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. https://x.com/anandmahindra/status/2057076164796305681 எளிமையான, அதே சமயம் மிகவும் உறுதியான ‘மஹிந்திரா பொலிரோ’ தான், நான் ஓட்டுவதற்கு மிகவும் விரும்பும் கார் என்று பலமுறை நான் வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன். இப்போது தமிழக முதலமைச்சரும் அதே காரை தேர்ந்தெடுத்து, அதை அவரே ஓட்டிப் பார்ப்பதைக் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது என்று நெகிச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Read More

உலகில் பலருக்கு டீ, காபி அல்லது இனிப்பு வகைகளுக்கு அடிமையாகும் பழக்கம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஷானன் (Shannon) என்ற இளம்பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் மிக விசித்திரமான மற்றும் உயிருக்கே ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி, ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் பிரபல ‘டிஎல்சி’ (TLC) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்‌ஷன்’ (My Strange Addiction) என்ற நிகழ்ச்சியில் இவரது இந்த விசித்திரப் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. https://www.instagram.com/p/C9Ms8R-z856/?utm_source=ig_embed&utm_campaign=loading ஷானனுக்கு ஆரம்பத்தில் பெட்ரோலின் வாசனை மிகவும் பிடித்துள்ளது. அதற்காக அவ்வப்போது பெட்ரோல் பாட்டில்களை திறந்து மோப்பம் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பின்னர், நாளடைவில் தனது கைகளில் பெட்ரோலைத் தொட்டு சுவைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளார். இந்த விசித்திரமான பொழுதுபோக்கு, காலப்போக்கில் ஒரு கொடிய போதையாக மாறியுள்ளது. தற்போது அவர் தினமும் பலமுறை பெட்ரோல் குடிக்கும் அளவிற்கு அதற்கு அடிமையாகியுள்ளார். இந்த விசித்திரப் பழக்கம் குறித்து…

Read More

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிச் சென்று வர ஏதுவாக, இன்று (மே 21) முதல் மே 23-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 200 பேருந்துகள், நாளை (மே 22) 595 பேருந்துகள் மற்றும் மே 23 சனிக்கிழமை அன்று 650 பேருந்துகள் என மொத்தம் 1,445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இன்று முதல் மே 23 வரை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா மற்றும் பொன்னேரி மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்காக மாதவரத்தில் இருந்து 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை தவிர,…

Read More

பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதைத் தொடர்ந்து, இன்று (மே 21) மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள ‘சேவா தீர்த்’ வளாகத்தில் மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குழுவின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூட்டப்படும் இந்த உயர்மட்டக் கூட்டம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியிலேயே இருக்குமாறு அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் மிக முக்கிய நோக்கமாக, அண்மைக்காலமாக தீவிரமடைந்து வரும் மேற்காசியப் பகுதி போர்ச் சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.  மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, விநியோகச் சங்கிலி பாதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற சவால்கள் எழுந்துள்ளன. இவற்றை இந்தியா எவ்வாறு வெற்றிகரமாகக்…

Read More

ஐபிஎல் 2026 தொடரின் 66-வது லீக் போட்டியில் இன்று (மே 21), ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இந்த விறுவிறுப்பான ஆட்டம் தொடங்குகிறது. தொடர்ச்சியான சில தோல்விகளால் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மிகவும் மங்கிப்போயுள்ள சூழலில், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் நீடிக்கிறது. ரன் ரேட் அடிப்படையிலும் சரிவடைந்துள்ளதால், சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமானால் இன்று குஜராத் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்துவதுடன், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளிலும் ஏதேனும் அற்புதம் நடக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. எது எப்படியிருந்தாலும், இந்தத்…

Read More

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அதனைத் தடுத்து நிலைநிறுத்தவும், வங்கித்துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, 5 பில்லியன் டாலர் (சுமார் ₹48,000 கோடிக்கும் மேல்) மதிப்பிலான டாலர்-ரூபாய் மாற்று ஏலத்தை (USD/INR Buy-Sell Swap Auction) நடத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த ஏல நடைமுறை வரும் மே 26ம் தேதி ஒரு மணி நேர விண்டோவில் (முற்பகல் 10:30 முதல் 11:30 மணி வரை) நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த டாலர்-ரூபாய் மாற்று ஒப்பந்தம் ஒரு எளிய ‘வாங்குதல்-விற்றல்’   முறைப்படி இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வணிக வங்கிகள் தங்களிடம் உள்ள அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கிக்கு  தற்போதைய சந்தை மதிப்பில் விற்கும். இதற்குப் பதிலாக, அந்த டாலர்களின் மதிப்புக்கான இந்திய ரூபாயை…

Read More

உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) மிக உயரிய விருதான ‘அக்ரிகோலா’ (Agricola Medal) பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள FAO தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் கியூ டோங்யு இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் FAO தலைமையகத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த உயரிய அங்கீகாரம் குறித்துப் பிரதமர் மோடி தனது ‘X’ பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஐநா சபையின் இந்த உயரிய ‘அக்ரிகோலா’ பதக்கத்தை மிகுந்த மனநிறைவோடும், பணிவோடும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த கௌரவத்தை இந்தியாவின் உண்மையான உணவு வழங்குநர்களான  விவசாயிகளுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். இது லட்சக்கணக்கான இந்திய…

Read More