Author: Editor web3

வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் தலைமையிலான  தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் மற்றும் அரசுப் பணிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமாகச் செயலாற்றி வந்ததால் அவருக்குக் கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் செங்கோட்டையனின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, அவரது உடல்நிலை தற்போது சீராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஓட்டங்களின் காரணமாக ஏற்பட்ட உடல் சோர்வே இதற்குக் காரணம் என்பதால், அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணிகளுக்குத் திரும்புவார் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

பாகிஸ்தானில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவட்டா  நகரில், பயணிகள் ரயில் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்தத் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்த பயங்கர சத்தத்தில் ரயிலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. சம்பவ இடத்திலேயே 24 பயணிகள் உடல்கள் சிதறி பலியாகினர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பான ‘பலுசிஸ்தான் விடுதலைப் படை’ (BLA) என்ற கிளர்ச்சிப் படை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும், பலுசிஸ்தான் தனிநாடு கோரியும் இந்த அமைப்பினர் தொடர்ந்து இது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப்…

Read More

விளையாட்டு உள்கட்டமைப்பில் புதியதொரு பாய்ச்சலுக்குத் தயாராகி வரும் கர்நாடக அரசு, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்டும் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான ஆனேக்கலில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட மைதானத்திற்குப் பூமி பூஜை செய்யப்பட்டு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த அதிநவீன புதிய மைதானத்தில் ஒரே நேரத்தில் 80,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளைக் ரசிக்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்படவுள்ளன. கர்நாடக வீட்டுவசதி வாரியம் (KHB) தனது சொந்த நிதியிலிருந்து சுமார் ரூ.943 கோடி பட்ஜெட்டில் இந்த சர்வதேச மைதானத்தை உருவாக்கவுள்ளது. பெங்களூருவின் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள சூர்யாநகர் (இண்ட்லாவாடி கிராமம்) பகுதியில் இந்த விளையாட்டு வளாகம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு தரப்பில் வீட்டுமனைப் பிரிவுகள் மற்றும் விளையாட்டு கிராமத்திற்காக  கையகப்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த 4,000 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 75 ஏக்கர் நிலம் இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்திற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.…

Read More

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் ரவி மோகன் முன்வைத்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தியின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நடிகை குஷ்பு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்த்தி ரவி, அவரது குழந்தைகள் மற்றும் ஆர்த்தியின் குடும்பத்தினர் ஆகியோர் மிக நெருக்கமாகச் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்திற்கு “#MyFamily” என்ற ஹேஷ்டேக்கை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்த்திக்குத் தனது முழுமையான ஆதரவு உண்டு என்பதை வெளிப்படையாகக் காட்டும் விதமாகவே குஷ்புவின் இந்தப் பதிவு அமைந்துள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இவ்வளவு பெரிய பேசுபொருளாக மாற முக்கியக் காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் அளித்த உணர்ச்சிகரமான செய்தியாளர்…

Read More

கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த ‘கரும்பி’ என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்று, உலகிலேயே மிகவும் குள்ளமான ஆடு என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்  இடம்பிடித்துள்ளது. இந்த ஆட்டின் குள்ளமான உருவமே இதை உலக அளவில் பிரபலமாக்கியுள்ளது. 4 வயதாகும் இந்தக் கரும்பி ஆட்டின் முழு உயரம் வெறும் 40.50 சென்டிமீட்டர் மட்டுமே உள்ளது. இந்த ஆடு கனடா நாட்டைச் சேர்ந்த ‘பிக்மி’ (Pygmy) என்ற சிறப்பு இனத்தைச் சேர்ந்ததாகும். பொதுவாகவே இந்த இனத்தைச் சேர்ந்த ஆடுகள் அதிக உயரமாக வளராத இயல்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டின் உரிமையாளரான பீட்டர் லீனு என்பவர் கூறுகையில், ஆரம்பத்தில் இதன் சிறப்பைத் தான் பெரிதாக உணரவில்லை என்றும், அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ஆட்டின் அபூர்வமான குள்ளத் தன்மையைக் கவனித்துத் தெரிவித்த பிறகே, இதை கின்னஸ் சாதனைக்காகப் பதிவு செய்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது இந்தச்…

Read More

கோவை சிறுமி விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனா தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சிரித்தபடியே பதிலளித்ததாகக் கூறி சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் மீது பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சுழலில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்தை முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியே வந்தபோது, கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் இயல்பாக நான் சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தில், மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்…

Read More

இந்தியாவில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் இந்தத் தீவிர வெப்பத்தின் காரணமாக, நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் வெப்ப பக்கவாதத்தால் 62 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. வெப்பக் காற்றில் சிக்கிப் பலியானவர்களில் பெரும்பான்மையானவர்கள் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா – 40 பேர், ஆந்திரப் பிரதேசம் – 16 பேர், மகாராஷ்டிரா – 3 பேர், ஒடிசா – 3 பேர் என மொத்தம் 62 பேர் உயிரிழந்துள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களை இந்த அபாயகரமான வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சுட்டெரிக்கும் வெயில் உச்சத்தில் இருக்கும் நேரமான…

Read More

எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், காங்கோ ஜனநாயகக் குடியரசு (DR Congo), உகாண்டா (Uganda) மற்றும் தெற்கு சூடான் (South Sudan) ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் திட்டவட்டமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச சுகாதார விதிமுறைகளின்படி (IHR) மே 17, 2026 அன்று இதனை “சர்வதேச அளவில் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக” (PHEIC) உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. இதன் தொடர்ச்சியாகவே இந்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://x.com/MoHFW_INDIA/status/2058404558939001213? மேலும், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமும் (Africa CDC) இந்த ‘புண்டிபுஜியோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் பரவலை…

Read More

பொருளாதாரம், தொழில், சேவை மற்றும் உற்பத்தி எனப் பல துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டு வரும் தமிழ்நாடு, தற்போது மற்றொரு புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு தங்கக் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தைக் கடந்தது. இந்த அதிரடி விலை உயர்வால் மக்கள் புதிய நகைகள் வாங்குவது குறைந்தாலும், தங்கக் கடன் சந்தைக்கு இது மிகப்பெரிய ஊக்கமளித்துள்ளது. தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், பழைய நகைகளை அடகு வைக்கும்போது முன்பு கிடைத்ததை விட தற்போது அதிக தொகை கடனாகக் கிடைக்கிறது. இதனால் மக்கள் தங்களது பணத் தேவைகளுக்கு மற்ற கடன்களை விட தங்கக் கடன்களையே அதிகம் நாடுகின்றனர். தேசிய அளவில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த…

Read More

இன்றைய வேகமான இயந்திரத்தனமான உலகில், உடல் ஆரோக்கியத்திற்கு நிகராக மன ஆரோக்கியமும் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, உலக மக்களின் மனநலம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவப் பேராசிரியர் ஒருவரின் சமீபத்திய ஆய்வறிக்கை அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த உலகளாவிய மருத்துவப் பகுப்பாய்வின் மூலம் சில முக்கியத் தரவுகள் அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளன. உலகெங்கிலும் சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) மக்கள் ஏதோ ஒரு வகையான மனநலச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் ஒவ்வொரு 7 பேரிலும் ஒருவருக்குத் தீவிர மன அழுத்தம், அதிகப்படியான சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற கடுமையான பாதிப்புகள் உள்ளன. 2020-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் வாழ்வாதார இழப்புகள் ஆகியவை மக்களின் மனதை ஆழமாகப் பாதித்துள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வேலை பறிபோனது, எதிர்காலம் பற்றிய அச்சம் மற்றும் ஸ்மார்ட்போன்…

Read More