Author: Editor web3

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் ஒருவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற இளைஞரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குதூன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரன் என்ற இளைஞருக்கும் முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் முத்து மணிக்கு பலமாக அடிப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துமணி,…

Read More

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் தேர்வு நிலை பேரூராட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் தடுப்புச் சுவர், நள்ளிரவில் வீசிய சூறைக்காற்று மற்றும் மழையின் போது இடிந்து விழுந்து பெரும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பொதுமக்களுக்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. நவீனமயமாக்கல் மூலதன திட்டத்தின் கீழ், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்போதைய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி காட்சி மூலமாக இந்த பேருந்து நிலையம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், இன்று காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, பலத்த காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் பேருந்து நிலையத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர்…

Read More

ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர, அவலங்கள் அப்படியே தான் தொடர்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையின் ரணம் ஆறும் முன்னே, மீண்டும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து இக்கொடூரத்தை கடந்து வர நாம் அனைவரும் துணை நிற்போம். https://x.com/i/status/2058738680517521697 தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை ஜோசப் விஜய் அவர்கள் தூண்டி விட்டாரோ, நான் தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு ஜோசப் விஜய் அவர்கள் தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள் தான் தினசரி…

Read More

மகளிருக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 8 மாத காலமாகத் தேர்தல் களம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான உழைப்பிற்குப் பிறகு, வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி பெற்றிருந்தேன். ஆண்டுக்கு இருமுறை உடல் பரிசோதனை செய்வது எனது வழக்கம். அந்த வகையில், ‘மாஸ்டர் செக்-அப்’ அடிப்படையில் மருத்துவமனையில் தங்கி அனைத்துப் பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. எனது உடல்நிலை குறித்த அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் சரியாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, விரைந்து அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்வதற்காகச் சென்னைக்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்றார். அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னைப்பொறுத்தவரை இது எனது உறவினரின் மருத்துவமனை. நான் எப்போதும் இங்கே தான் சிகிச்சை பெறுவது வழக்கம். இங்கு வந்தால் ஓய்வு எடுப்பதும்…

Read More

அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த போர் தொடங்கிய சமயத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் தங்கம் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது, அந்தவகையில், சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, சவரன் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று (மே 25) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் (22 கேரட்) கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.14,780-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று…

Read More

டிஜிட்டல் இந்தியா மற்றும் வீடு தேடி வரும் சேவைகள் எனப் பல்வேறு திட்டங்கள் பேசப்பட்டு வரும் வேளையில், வெறும் 500 ரூபாய் மாதாந்திர பென்ஷனுக்காக 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் மைல் கணக்கில் நடந்து சென்ற மருமகளின் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://x.com/archana2098/status/2058101288261546331? சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஜங்கல்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்மனியா. இவருடைய மாமியார் சோன்வாரி (90). முதியோருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை ரூ.500, இந்தநிலையில், வங்கியின் ‘கே.ஒய்.சி’ விவரங்கள் புதுப்பிக்கப்படாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக இவருக்குக் கிடைக்கவில்லை. வழக்கமாக ‘வங்கி மித்ரா’  பணியாளர் மூலம் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் இந்தத் தொகை, ஆவணக் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதால், வேறு வழியின்றி சுக்மனியா தனது  மாமியாரைத் தூக்கிக் கொண்டு மென்பட் (Mainpat) நகரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்குக் கரடுமுரடான காட்டுப்…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் குடும்பத்தினரைத் தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘சேவா தீர்த்’தில்  சந்தித்துப் பேசினார். மிகவும் பரபரப்பான அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகளுக்கு மத்தியிலும், பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடிய எளிமையான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் மனங்களையும் கவர்ந்து வருகின்றன. அப்போது, அந்த மழலைகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரதமர், அந்த குழந்தைகளின் புத்தகத்தில் தனது கையெழுத்திட்டு, அன்போடு ஆசி வழங்கியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நேற்று இரண்டு இளம் நண்பர்கள் சேவா தீர்த்திற்கு வந்திருந்தனர்” எனக் குறிப்பிட்டு, குழந்தைகளுடன் சிரித்துப் பேசி விளையாடிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுடன் அவரது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் என மூன்று தலைமுறையினரும் பிரதமரைச் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த…

Read More

சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் பெரிய அளவில் உள்கட்சிப் பூசல் வெடித்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும், தோல்வி குறித்து விவாதிக்கப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட அதே வேளையில், தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றமாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் வேலுமணி தரப்பிற்கு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தவெக அமைச்சரவையில் அதிமுகவினருக்கு இடம் கிடைக்காத சூழ்நிலை உருவானது. இதனிடையே, அதிருப்தியில் இருந்த அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது நீக்க உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேலுமணி தரப்பில்…

Read More

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தமிழக அரசு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.  முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுலாத் தலங்களை இன்று முதல் வரும் மே 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகக் கண்டுகளிக்கலாம். தற்போது கோடைகாலம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கட்டணச் சாவடிகளில்  கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, சாலைப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (மே 25) முதல் மே 31 வரை மட்டுமே இந்த இலவச அனுமதி பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடை விடுமுறை வார இறுதி நாட்களில் கொடைக்கானல் வரத் திட்டமிடும்…

Read More

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 25) காலை 10:00 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) அறிவித்துள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 17, மாலை 5:00 மணி வரை. இணையதள முகவரி: https://adm.tanuvas.ac.in. மிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடைமருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 660 இடங்கள்…

Read More