Author: Editor web3

புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு முதல் 6 மாதங்கள் எவ்வித இடையூறும் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக இன்று ஒவ்வொரு விஷயத்திலும் திமுகவினர் குற்றம் கண்டுபிடித்து வருகிறார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காரசாரமாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று தவெக ஆட்சியமைக்க விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன. இந்த நிலையில், தவெக அரசு அமைந்து இரண்டு வாரங்களேயான சூழலில், திமுகவினர் வைக்கும் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று (மே 25) நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது, “மக்களுக்கு நல்லது செய்தால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்பதை இனி யாரும் நம்பாதீர்கள். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்குச் செய்த நன்மைகளைப் போல வேறு எந்தவொரு எம்.எல்.ஏ-வும் தமிழ்நாட்டில் செய்திருக்க முடியாது. சென்னைக்குச் சுற்றுலா…

Read More

காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால் தமிழகத்தின் முக்கிய 4 மாவட்டங்களில் மதுக்கடைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது காலி பாட்டில்களைக் கையாளுவதற்குக் கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தங்களது இந்த நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததைக் கண்டித்து, ஊழியர்கள் தற்போது இந்த அதிரடிப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது வரை டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில்…

Read More

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், திடீரென கல்லெறி மற்றும் தடிதடி மோதலாக மாறியதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த இருதரப்பு மோதலால் குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசிக குன்னம் மாவட்டச் செயலாளர் அன்பானந்தம் என்பவர், திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எம்பி கனிமொழி மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களைப் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவினர் திரண்டனர். அதே நேரத்தில், விசிகவினரும் அங்கு மற்றொரு ஆர்ப்பாட்டத்திற்காக கூடியதால் இருதரப்பிற்கும் இடையே திடீர் பதற்றம் தொற்றிக் கொண்டது. சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதால் இருதரப்புமே ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது எனப் போலீசார்…

Read More

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் இடையே கடுமையான அரசியல் மோதல் வெடித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமார், “தமிழ்நாடு அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், மேகதாதுவில் நாங்கள் அணை கட்டியே தீருவோம்” என்று மீண்டும் மிக அழுத்தமாக உறுதிபடக் கூறியுள்ளார். மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை (DPR) கர்நாடகா தயாரிப்பதற்கு தடை விதிக்க மறுத்ததற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம்  அதிரடியாக நிராகரித்துத் தள்ளுபடி செய்தது. மேலும், இது தொடர்பாக ஒரு புதிய அமர்வும் அமைக்கப்பட்டுள்ளது. இது கர்நாடகாவிற்கு மிகச் சிறந்த நற்செய்தியாகும். இந்த அதிரடி தீர்ப்புக்காக கர்நாடக மக்களின் சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாதுவில் ஒருபோதும் அணை கட்ட விட மாட்டோம்” என்று தமிழகத் தரப்பு தொடர்ந்து சட்டப்…

Read More

“ராஜினாமா கடிதம் முறையாக இருந்தால் மட்டுமே அதனை ஏற்பேன்; எனது முடிவை அறிவிக்குமாறு யாரும் எனக்குக் கெடு விதிக்க முடியாது” என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று ராஜினாமா செய்த நிலையில் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்திற்கு நேரில் வந்த அவர், தனது கைப்பட எழுதி எடுத்து வந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அதிமுகவினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தந்தார். “ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ராஜினாமா கடிதம் சட்டவிதிகளின்படி முறையாக இருந்தால், அதனை…

Read More

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் குறித்துப் பிரதமரிடம் அவர் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தின் முக்கிய நிகழ்வாக, அங்குள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகப் பொதுமறை…

Read More

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “கடந்த 13-ஆம் தேதி தமிழக பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அரசின் மீது எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதம் சபாநாயகரின் ஆய்வில் இருப்பதாக அவரே கூறியிருந்தார். இந்த நிலையில், தங்களுக்கு எதிராக கட்சித் தாவல் சட்டம் பாய்ந்து…

Read More

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் திரைப்படங்களில் நடிப்பதற்கு, பாலிவுட் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு (FWICE) அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநரும் தயாரிப்பாளருமான ஃபர்ஹான் அக்தர் தயாரிப்பில் உருவாகவிருந்த ‘டான் 3’ (Don 3) திரைப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதற்காகப் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் ப்ரீ – ப்ரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. படம் தொடங்கும் நிலையை எட்டியபோது, எதிர்பாராத விதமாகக் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இருந்து தான் விலகுவதாக ரன்வீர் சிங் படக்குழுவினருக்கு அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார். கோடிக்கணக்கில் பணமும் நேரமும் செலவிடப்பட்ட நிலையில், ரன்வீர் சிங்கின் இந்தத் திடீர் முடிவால் ‘டான் 3’ படக்குழுவினர் பெரும் நஷ்டத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்தனர். இதுகுறித்து தயாரிப்புத் தரப்பில் பாலிவுட் திரைப்பட அமைப்பிடம் (FWICE) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த…

Read More

திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் செயற்கை நுண்ணறிவு & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குமார், “எனது கோரிக்கையை ஏற்றே மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இங்கு நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவுப்படி, இப்பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் அமைத்துத் தரப்படும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்துள்ளோம். குறிப்பாக பட்டா, சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். இது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read More

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான பக்ரீத் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தென் தமிழகத்தின் புகழ்பெற்ற நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் குர்பானி ஆடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையிலேயே தொடங்கிய இந்தச் சந்தையில், ஒட்டுமொத்தமாக சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தையில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. செம்மறி ஆடுகளில் பொட்டுக்குட்டி, செங்குட்டி, மகிழம்பாடி போன்ற வகைகளும்; வெள்ளாடுகளில் பல்லையாடு, கொடியாடு, கருப்பு கிடா போன்ற வகைகளும் அதிக அளவில் காணப்பட்டன. குறைந்தபட்சமாக ஒரு கிடா ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விற்கப்பட்டது. அதிகபட்சமாக தரமான ஒரு செம்மறிக் கிடா ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை அதிக விலைக்கு விற்பனையானது. குர்பானிக்காக ஆடுகளை வாங்குவதற்காக நெல்லை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான தென்காசி மற்றும் தூத்துக்குடியில் இருந்தும் மக்கள் அதிக அளவில் சந்தையில் திரண்டனர். அதேபோல, ஆடுகளை விற்பனை செய்வதற்காக நெல்லை,…

Read More