Author: Editor web3
திருப்பத்தூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால் தூய்மைப் பணியாளர் ஒருவர் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு குனிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்துள்ளது. காயத்திற்கு மருந்திட்டு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அந்த முதியவர் குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முதியவருக்கு, அங்கிருந்த தூய்மைப் பணியாளர்…
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று பிரம்மாண்டப் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. ஓசூர் தர்கா பகுதியில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திரளாகத் திரண்டு கர்நாடக எல்லையை நோக்கி நடைபயணமாகப் புறப்பட்டனர். பெங்களூரு சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை சென்ற அவர்கள், “கர்நாடகாவில் நுழைவோம்… மேகதாட்டைத் தடுப்போம்!” “மேகதாட்டு அணை கட்டினால் தமிழகம் சுடுகாடாகும்!” என்ற அதிரடி முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏதும் ஏற்படாத வண்ணம் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது சுய அரசியல் ஆதாயத்திற்காகவே…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் பாலதண்டாயுதத்தின் 53-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்துகொண்டு, மறைந்த தலைவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு வீரபாண்டியன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். திருவள்ளுவருக்கு காவி ஆடை உடுத்துவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் சட்டத்தின் ஆட்சி முறையையே நிலைகுலையச் செய்யும் வகையில் அமைந்துள்ளன. ஆளுநர் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். வள்ளுவரைத் தங்களுக்குச் சாதகமாக வலது பக்கம் திருப்ப அவர் முயலக் கூடாது; அப்படிச் செய்தால் வரலாறு அவரை ஒருபோதும் மன்னிக்காது. கூட்டணி மற்றும் அரசியல் பேரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், குதிரை பேரம்…
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள் மீது பைக்கில் வந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் நெட்டூரைச் சேர்ந்த அய்யப்பன் மீது ஏற்கனவே ஆலங்குளத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் தாக்குதல் சம்பவங்களுக்குப் பிறகு, அவர் வடக்கு அரியநாயகிபுரம் அரசங்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அதிகாலையில் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற அய்யப்பன், தன்னை நெருங்கிய காவலரை திடீரென தன் கைவசமிருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டினார். ரவுடியின் இந்த விபரீத தாக்குதலால் சுதாரித்துக் கொண்ட தனிப்படையினர், தற்காப்பு நடவடிக்கையாக அய்யப்பனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. சினிமா காட்சியைப் போல பரபரப்பாக…
ஐபிஎல் வரலாற்றில் ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற ரசிகர்களின் நீண்ட கால ஏக்கம் கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு நிறைவேறியது. ஆனால் இந்த முறையும் நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தொடரும் ஒரு சுவாரசியமான புள்ளிவிவர ட்ரெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ஐபிஎல் தொடரில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ‘பிளே-ஆஃப்ஸ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பிளே-ஆஃப்ஸ் அறிமுகமான பிறகு நடந்து முடிந்த 15 சீசன்களில், சுமார் 12 முறை குவாலிபையர் 1 போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்ற அணியே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த 8 சீசன்களாக இந்த ‘குவாலிபையர் 1’ சென்டிமென்ட் ஒரு முறை கூட மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது. குவாலிபையர் 1-ல் வெல்லும் அணியே கோப்பையைத் தட்டிச்செல்கிறது. இந்த ஆதிக்கம்…
21-ம் நூற்றாண்டின் உலகளாவிய தலைசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பிரபல விளையாட்டு ஊடகமான ESPN வெளியிட்டுள்ளது. இதில் உலகின் முன்னணி ஜாம்பவான்கள் பலரை பின்னுக்குத் தள்ளி, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் (Jacques Kallis) முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான ரேஸில் முதல் ஐந்து இடங்களில் முதலிடத்தில், ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா), 2வது இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிடித்துள்ளார். 3வது இடத்தில் விராட் கோலி, 4வது இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், 5வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளார். உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட டாப் 25 சிறந்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. சச்சின், கோலியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் தூண்களாக விளங்கிய மேலும் 5 நட்சத்திர வீரர்கள் இப்பட்டியலில் இணைந்துள்ளனர். அதாவது, ராகுல்…
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் அடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தின வெளியீடாக திரைக்கு வரவிருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யாவின் அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகளுக்கு வழிவகுக்கும் வகையில் அவரது 47-வது படம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய மலையாள பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 47’ திரைப்படத்தை, இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வெளியீடாக திரைக்குக் கொண்டு வர தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சூர்யா அதிரடியான மற்றும் விசித்திரமான ஒரு போலீஸ் அதிகாரி…
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் (UEFA Champions League) கால்பந்து தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், இங்கிலாந்தின் ஆர்சனல் அணியை வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து பாரிஸ் நகர வீதிகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நள்ளிரவில் இந்த கொண்டாட்டம் திடீரென வன்முறையாக மாறியதால் பாரிஸ் மாநகரமே போர்க்களமாக காட்சியளித்தது. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒருதரப்பு ரசிகர்கள், பாரிஸின் முக்கிய சாலைகளில் நின்றிருந்த கார்கள் மற்றும் இதர வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதனால் நகரின் பல பகுதிகள் கவலர பூமியாக மாறி, புகைமண்டலமாக காட்சியளித்தன. பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த வந்த போலீஸார் மீது பட்டாசுகள் மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர். வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரிஸ் நகரின் முக்கிய மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் பேருந்து போக்குவரத்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.…
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் அணி நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், தனது 1,000-வது ஒருநாள் போட்டியில் விளையாடி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவரில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். மேட் ரென்ஷா நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் வெளியேறினார். பாகிஸ்தான் சார்பில் அராபத் மினாஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார அகமது 2 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராப், சல்மான் ஆகா ஆகியோர் தலா…
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனையுமான ஹர்மன்ப்ரீத் கவுர், டி20 சர்வதேச போட்டிகளில் 4,000 ரன்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார். https://x.com/BCCIWomen/status/2060754329754370092? நேற்று நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது, தனது 4,000 ஆவது ரன்னை எடுத்ததன் மூலம், சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் 3-வது வீராங்கனை மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 4-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நியூசிலாந்தின் சூசி பெயிட்ஸ் (4,720 ரன்கள்) இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்க, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (4,325 ரன்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்), டி20 போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரராக ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி…