Author: Editor web3

தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிக்கும் நோக்கில், தமிழ் திரையுலகில் ‘டிராமா கம்பனி’ (Drama Company) என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர் பாலமுருகன் தயாரிப்பில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில், ‘ஜெயிலர்’ படம் மூலம் தமிழக ரசிகர்களைக் கவர்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கிறார். அவருடன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய, ‘வித் லவ்’ படம் மூலம் நடிகராகக் கவனம் ஈர்த்தவருமான திறமையான இளம் கலைஞர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கிறார். தெலுங்குத் திரையுலகில் பிரபலமான ஷிவானி நாகாரம் இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ‘ஹார்ட் பீட்’ பிரபலம் யோகலட்சுமி, பிக் பாஸ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…

Read More

நடிகர் மாதவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜி டி என்’ திரைப்படத்தின் புதிய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் மாதவன் இன்று தனது 56 அவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாதவனின் பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜி.டி.என் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. யார் இந்த ஜி.டி.நாயுடு?: ‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் கோபாலசுவாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பிறகு மாதவன் நடிக்கும் மற்றொரு பிரம்மாண்ட பயோபிக் இதுவாகும். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் இப்படத்தில் சத்யராஜ், துஷாரா விஜயன், ஜெயராம், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள ‘G.D.N’ திரைப்படம், வரும் ஜூலை…

Read More

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது அடுத்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படம் இதுவாகும். இதுவரை சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் பணியாற்றிய மாரி செல்வராஜ், முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். ‘மஞ்சணத்தி’ படத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இளையராஜாவின் ஆன்மீக மற்றும் எமோஷனல் பின்னணி இசையுடன் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு வீடியோ, ரசிகர்களை மெய்மறக்கச் செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜின் முந்தைய படமான ‘கர்ணன்’ திரைப்படத்தில் ‘மஞ்சணத்தி புராணம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=rVvhhfhjxds அந்த வீடியோவில் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் செல்லும் மாரி செல்வராஜ், ராஜாவை சந்திக்கும் காட்சிகள், ராஜா…

Read More

அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்” என உருக்கமாக வீடியோ வெளியிட்டு, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காவல் எல்லைக்குட்பட்ட பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவர் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணியின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்ததுடன், திருப்பனந்தாள் கடைவீதியில் பூக்கடையும் நடத்தி வந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், நித்யஸ்ரீ என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக மகேந்திரன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தீக்குளிப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரண்டு…

Read More

தமிழக ஆளுநர் மாளிகையில் மே 30-ம் தேதி திருவள்ளுவர் திருநாள் கழகம்’ சார்பில் வைகாசி அனுஷம் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த படம் பயன்படுத்தப்பட்டது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவியும் அதே காவி உடை படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். https://x.com/lokbhavan_wb/status/2060959548534575492 முன்னாள் தமிழக ஆளுநரும், தற்போதைய மேற்கு வங்க ஆளுநருமான ஆர்.என். ரவி விடுத்துள்ள எக்ஸ் பதிவில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “திருக்குறளில் தர்மமும், அறமும் மிக ஆழமாகச் சங்கமிக்கிறது. அது மனிதர்களுக்குத் தனிமனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு அறநெறி சார்ந்த ஆட்சி முறைக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறது. பாரதத்தின் ஆன்மீகப் பரிணாமத்தை வளப்படுத்துவதில் திருக்குறளின்…

Read More

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, புதிய மாதத்தின் தொடக்க நாளான இன்று அதிரடியாகக் குறைந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஜூன் 1) ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகச் சரிந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.130 குறைந்து, ரூ.14,500-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் விலை, ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்றே சரிவைச் சந்தித்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.வெள்ளி  1 கிராம் ரூ. 290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ரூ. 2,90,000-க்கும் விற்பனையாகிறது.

Read More

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் நிபந்தனைகளின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், தவெக ஆட்சியில், ரிசர்வ் வங்கியின்  வழிகாட்டுதல்களின்படியே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடியின்போது இதுபோன்ற ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. கடந்த 2021-ஆம் ஆண்டின் இறுதியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பொறுப்பேற்ற திமுக அரசு, அடுத்த ஐந்தாண்டுகளில் அதனைப் படிப்படியாக, தவணை முறையிலேயே அமல்படுத்தியது. ஆனால், கடந்த 2024-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.…

Read More

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக இரும்பு ஷெட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக நூற்றுக்கணக்கான வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஷெட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ஷெட்டில் அமர்ந்து, தொலைக்காட்சியில்  ஐபிஎல் இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த தற்காலிக குடியிருப்பின் இரும்பு மேற்கூரை பலத்த சப்தத்துடன் முற்றிலும் இடிந்து தொழிலாளர்கள் மீது கீழே விழுந்தது. இடிபாடுகளில் சிக்கித் தவித்த தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் நந்தம்பாக்கம் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில்…

Read More

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றதுடன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனைப் பக்கத்தையும் எழுதியுள்ளார். அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்: ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் வென்ற விருதையும் சேர்த்து அவர் 22 முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் இந்திய வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா – 21 விருதுகள், எம்.எஸ். தோனி – 18 விருதுகள் பெற்றுள்ளனர். அதுமட்டுமன்றி, ஐபிஎல்…

Read More

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வரும் சூழலில், நேபாளப் பிரதமர் பாலன் ஷா நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நேபாள நாடாளுமன்றத்தில்  உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், எல்லைப் விவகாரம் ஒருதலைப்பட்சமானது அல்ல என்று குறிப்பிட்டார். நான் பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான் இந்த அதிர்ச்சிகரமான உண்மை எனக்குத் தெரியவந்தது. இந்திய நிலப்பரப்பை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் புகார்களும் இதில் அடங்கும். இந்தியா மட்டும் நேபாளத்தின் எல்லையை ஆக்கிரமிக்கவில்லை; நேபாளமும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளைப் பல இடங்களில் ஆக்கிரமித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் எல்லைப் பிரச்சனைகள் குறித்த உண்மைகளைத் தீர ஆராய்ந்து, நண்பர்களாக அமர்ந்து பேசி சுமூகமாகத் தீர்க்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியாவுக்கு நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக…

Read More