Author: Editor web3
தேர்தலில் யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது” என்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பெருமிதத்தோடு பேசியிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் முரணாக அக்கட்சியின் வேட்பாளரே பேசியுள்ள வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி, கூட்டணிக்கட்சி ஆதரவுடன் ஆட்சியைமைத்துள்ளது. ஆட்சியமைக்க உரிமைக்கோரிய நாள் முதலே பல விமர்சனங்களை சந்தித்து வந்தது. அதாவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், தற்போது ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்ததால் தான் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார் என்று தவெகவை சேர்ந்த ஓமலூர் தொகுதி வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதாவது, சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்குத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு லட்சுமணன் வெற்றி…
கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 1-ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்கி உள்ளனர். கடந்த கல்வியாண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் நிலவியதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதி சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அறிவித்தபடி இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய வகுப்புகள், புதிய ஆசிரியர்கள் மற்றும் புதிய நண்பர்களை சந்திக்க மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றனர், இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக…
மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஊரக உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (ஜூன் 4) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உயர்நிலைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் என். ஆனந்த், தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை சார்ந்த முக்கிய செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததாலும், அணைக்கு வரும் நீரின் வரத்து குறைவாக உள்ளதாலும், திட்டமிட்டபடி ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணை திறப்பு தள்ளிப்போகும் பட்சத்தில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமும், குறுவை…
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலின் போது மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி. சண்முகம் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது ராஜ்யசபா எம்பி பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்தார். சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் அந்த ஒரு ராஜ்யசபா இடம் காலியானதாகவும், ஜுன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கி ஜுன் 8ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் ஜூன் 11ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், அந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தமிழக…
கேரள மாநிலம் கழக்கூட்டம் தொகுதியின் புதிய பாஜக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முரளிதரன், பள்ளித் திறப்பு விழாவின் போது பழங்குடியின மாணவர்களின் மேஜை மீது மிட்டாய்களை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஒழிக்கப்பட்ட சாதியப் பாகுபாட்டுச் சடங்குகளை இந்தச் செயல் நினைவூட்டுவதாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் மாவட்டம் கட்டேலாவில் உள்ள அரசு டாக்டர் அம்பேத்கர் நினைவு மாதிரி குடியிருப்புப் பள்ளியில் கடந்த ஜூன் 1 அன்று பள்ளித் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ வி.முரளிதரன் மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/ST) நலத்துறை அமைச்சர் கே.ஏ.துளசி ஆகியோர் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாஜக எம்.எல்.ஏ வி.முரளிதரன் மாணவர்களின் கைகளில் நேரடியாக மிட்டாய்களைக் கொடுக்காமல், அவர்களின் மேஜைகளில் மிட்டாய்க் கொத்துக்களை வீசிச் செல்வது போன்ற…
முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழறிஞருமான கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்தவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர். உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.
பிரிட்டனில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் ‘குரூமிங் கேங்க்ஸ்’ (Grooming Gangs) எனப்படும் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை கும்பல்களின் அட்டூழியங்கள் குறித்த சாட்சியங்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. பிரிட்டன் நாடாளுமன்ற சுயேச்சை எம்பியான ருபெர்ட் லோவ், இங்கிலாந்தின் 85-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தனியார் புலனாய்வு விசாரணையின் மூலம் திரட்டப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை நாடாளுமன்றத்தில் வாசித்தார். பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களில் உள்ள சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தனக்கு 13 வயது இருக்கும்போது இந்த சித்திரவதை தொடங்கியதாகக் கூறிய ஒரு பெண், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 600 முதல் 700 வெவ்வேறு ஆண்களால் நான் வன்கொடுமை செய்யப்பட்டேன்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தங்களை நாய்களைப் போலக் கூண்டில் அடைத்து வைத்ததாகவும், சில பெண்களை விலங்குகளை விட்டும் வன்கொடுமை செய்ததாகவும், அதை அங்கிருந்த ஆண்கள்…
உலகெங்கும் நிலவும் பருவநிலை மாற்றங்களைக் கண்காணிக்கும் உலக வானிலை அமைப்பு (WMO), வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை உருவாவதற்கு 80% வாய்ப்புகள் உள்ளதாகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் 90%-க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், அதன் வழக்கமான வெப்பநிலையை விட மிக அதிகமாக வெப்பமடைவதையே விஞ்ஞானிகள் ‘எல் நினோ’ என்று அழைக்கின்றனர். பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு சுழற்சியைப் தலைகீழாக மாற்றி, கடுமையான இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, ‘எல் நினோ’வின் வருகையானது தென்மேற்குப் பருவமழையைப் பலவீனப்படுத்தி, கடுமையான கோடை வறட்சியை ஏற்படுத்தும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தெற்காசியப் பருவமழைக்காலத்தில், இந்தியாவின்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, கலைஞருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, தன் மீது விமர்சனம் வைத்த திண்டுக்கல் ஐ. லியோனிக்குத் தன் பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்ட சிலை எழுப்பியவர் கலைஞர். தந்தை பெரியாரின் சமூகநீதிக் கனவுகளைத் தன் ஆட்சிக் காலத்தில் நினைவாக்கியவர் அவர். முப்பது ஆண்டுகாலம் அவரால் வளர்க்கப்பட்டவன் நான்; இன்றளவும் எனது நெஞ்சில் இருந்து கலைஞரின் நினைவுகளை யாராலும் அகற்ற முடியாது. அவரது புகழ் என்றும் வளரட்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக ஆதரவளிக்கப் போகிறது என்று திண்டுக்கல் ஐ. லியோனி பேசியுள்ளார். தவெக-விற்கு ஆதரவளிப்பது தொடர்பாக…
டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஐந்து மாடி தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், தீயில் சிக்கிய 47 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாளவியா நகரின் ஹவுஸ் ராணி (Hauz Rani) பகுதியின் குறுகலான தெருவில் அமைந்துள்ள ‘மிகாசா இன்’ (Micasa Inn) என்ற ஐந்து மாடி ஹோட்டலின் அடித்தளத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை சுமார் 8.50 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் ஹோட்டலில் இருந்த பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக் கொண்டிருந்ததால், புகை மூட்டம் மற்றும் தீயின் வீரியத்தை அவர்களால் உடனடியாக உணர முடியாமல் போயுள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, சுமார் 25 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் 40-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் என்று கூறப்படுகிறது. தீயின்…