Author: Editor web3

காயிதேமில்லத் பெயரிலும் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 5. கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாள். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்! கண்ணியத்தமிழர் காயிதேமில்லத் அவர்கள் இந்திய அரசமைப்புப் பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர். மேலவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியாற்றியவர். அதன்மூலம் தேசியத் தலைவராக உயர்ந்தவர். இஸ்லாம் எனது மதம்: தமிழ் எனது தாய்மொழி என முழங்கிய காயிதேமில்லத் அவர்கள் அன்னைதமிழ் மீதும் ஆருயிர்த் தமிழினத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். இசுலாமியர்களுக்கும் இன்னபிற சமூகத்தினருக்கும் இடையில் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்தவர். தமிழ்நாடு இன்று மதவெறி அரசியலுக்கு இடம்கொடுக்காத ஒரு சகோரத்துவ மண்ணாக விளங்குவதற்கு அவருடைய முதிர்ச்சிநிறைந்த பக்குவமான அரசியல் அணுகுமுறைகள் குறிப்பிடத்தகுந்த காரணமாகும். அத்தகைய மாமனிதர் காயிதேமில்லத் அவர்களின்…

Read More

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு, சமீபத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்தது. முன்னதாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் சிலரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. இந்தநிலையில், ஒன்றிணைந்த பிறகும் பறிக்கப்பட்ட முக்கிய கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படாததால், வேலுமணி தரப்பினர் கடும் குழப்பத்திலும் அதிருப்தியிலும் இருந்து வந்தனர். இதன் காரணமாகவே, மூத்த தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த சில நாட்களாக இபிஎஸ்-ஐ நேரில் சந்திப்பதைத் தவிர்த்து, தங்களது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஜூன் 4-ஆம்…

Read More

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் நாள் (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரின் முதல் நாளில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். இதுதொடர்பாக சட்டமன்றப் பேரவைச் செயலாளர் இரா. சாந்தி, வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்குப் பிறகு, இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். 2026-ஆம் ஆண்டின் முக்கிய அரசியல் சூழல்களுக்கு இடையே இக்கூட்டத்தொடர் கூடுவதால், இதில் பல முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆட்டம் அடியோடு தலைகீழாக மாறியுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓலே ராபின்சன் வீசிய ஒரு அசாத்தியமான ஓவர், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி லண்டனின் பழமையான லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 39.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 61…

Read More

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நாளை மீண்டும் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திரா சிங் மைதானத்தில் நாளை (ஜூன் 6) தொடங்கும் இந்த ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய பிறகு, கடந்த 6 மாதங்களாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 2026-ஆம் ஆண்டில் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். எனினும், இப்போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இன்னிங்ஸை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துணை கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடங்கவுள்ளனர். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளில் 539 ரன்கள் குவித்த ராகுல், சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 593 ரன்கள் குவித்து…

Read More

டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் வரும் 11-ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மாதம் 27-ஆம் தேதி விஜய் முதன்முறையாக டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழகத்தின் முக்கியத் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார். குறிப்பாக, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதே நாளில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசினார். இந்த டெல்லி பயணத்தின் போது, கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி…

Read More

தென்காசி அருகே குழந்தையை சாக்குப்பையில் கட்டி கொடூரமாக துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய ஊழியரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் கலைச்செல்வி என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அங்கு வந்த ஒரு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, குழந்தையை மிரட்டும் நோக்கில், ஒரு சாக்குப்பையினுள் போட்டு அதன் வாயை இறுக்கமாகக் கட்டியுள்ளார். பைக்குள் இருந்த குழந்தை மூச்சுவிட முடியாமலும், பயத்தினாலும் அலறித் துடித்து அழுதுள்ளது. ஆனால், அதைக் கண்டும் இரக்கமின்றி கலைச்செல்வி குழந்தையை மிரட்டியுள்ளார். இந்தக் கொடூரமான செயலை அங்கிருந்த யாரோ ஒருவர் தங்களது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.…

Read More

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சிக்னல் கோளாறு காரணமாக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் மற்றும் செமி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் முக்கிய ரயில் வழித்தடத்தில் இன்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, தாம்பரம் ரயில் நிலையத்திற்குள் ரயில்கள் வர முடியாத சூழல் உருவானது. இதன் விளைவாக, பின்னால் வந்த மின்சார ரயில்கள் மற்றும் செமி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களிலேயே அவசர அவசரமாக நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களில் பயணித்துக் கொண்டிருந்தனர்.”கடந்த அரை மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நகராமல்…

Read More

டிஆர்எஸ்-ஸில் 100% தோல்வி!. LSG கேப்டன் பதவியிலிருந்து விலகினார் ரிஷப் பண்ட்! சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரிஷப் பண்ட், டிஆர்எஸ் முடிவுகளை எடுப்பதில் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இத்தொடரில் அவர் எடுத்த 9 டிஆர்எஸ் முடிவுகளும் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளன. ஃபீல்டிங்கின் போது 8 முறையும், பேட்டிங்கின் போது ஒரு முறையும் அவர் எடுத்த ரிவ்யூ முடிவுகள் அனைத்தும் அணிக்கு ஏமாற்றத்தையே தந்தன. கடந்த 2025 ஐபிஎல் சீசனிலும் அவர் எடுத்த 9 டிஆர்எஸ் முடிவுகளில் 8 தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததுடன், பண்ட்டின் பேட்டிங் ஃபார்மும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் கேப்டனாகவும் வீரராகவும் கடும் விமர்சனங்களைச் சந்தித்த ரிஷப் பண்ட்,  லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து  விலகினார். இதை லக்னோ நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு…

Read More

இலங்கையின் கொழும்பு அருகே உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி  12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கழுதாரா மாவட்டத்தின் அங்குருவாதொட்ட  பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற முதியவர்கள் தங்கியிருக்கும் இந்த இல்லத்தில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் ஒரு பகுதியில் பிடித்த தீ, அடுத்தடுத்து மற்ற அறைகளுக்கும் அதிவேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. இதில் தீக்காயங்கள் ஏற்பட்டு 11 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புத்துறையினர் கட்டடத்திற்குள் அதிரடியாகப் புகுந்து, தீயில் சிக்கியிருந்த 51 பேரைப் பாதுகாப்பாக மீட்டனர்.…

Read More