Author: Editor web3

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவி – நவமலை சாலையில் ‘குட்டிக் கொம்பன்’ என்ற ஒற்றைக்காட்டு யானை கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு உலா வருவதால், அந்தச் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வனத்துறை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் இந்த நவமலை சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இருசக்கர வாகனங்களிலேயே இப்பகுதி மக்கள் பயணிப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆழியார் கவியருவிக்கு அருகிலுள்ள நவமலை சாலையில் ‘குட்டிக் கொம்பன்’ என்று அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக உலா வந்து கொண்டிருக்கிறது. சாலையிலேயே முகாமிட்டிருக்கும் இந்த யானையை, யாராவது அச்சுறுத்தும் வகையிலோ அல்லது வம்புக்கு இழுக்கும் வகையிலோ நடந்துகொண்டால், அது கோபமடைந்து பயங்கர சத்தத்துடன்…

Read More

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) நடத்திய முதல் கட்டப் போராட்டம் ஒட்டுமொத்த தேசத் தலைநகரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் ஜந்தர் மந்தர் பகுதியில் குவியத் தொடங்கினர். குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. போராட்டக் களத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் டெல்லி காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜந்தர் மந்தரைச் சுற்றிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், நீட் விவகாரத்தால் ஆத்திரமடைந்திருந்த இளைஞர்கள், காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி அந்தப்…

Read More

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத், அன்னூர் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையம் கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக விடுதி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்துகொள்ள அமைச்சர் சம்பத் இரவு நேரத்தில் அங்கு திடீரெனச் சென்றார். விடுதிக்குள் சென்ற அமைச்சர், அங்குள்ள மாணவர்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுக்காகச் சமைக்கப்பட்டிருந்த இரவு உணவை அவரே நேரடியாகச் சாப்பிட்டுப் பார்த்து, அதன் தரத்தை உறுதி செய்தார். பின்னர், உணவு சமைக்கப்படும் சமையலறை மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, சுகாதாரமாக இருக்கிறதா என்பதையும் அங்ஙடி அங்ஙடியாகச் சென்று பார்வையிட்டார். ஆய்வுக்குப் பின் விடுதி…

Read More

“முறையான அனுமதி சீட்டு இல்லாமல் ஒரு செங்கல் கூட வெளியே போகக்கூடாது. மீறி சென்றால் பறிமுதல் செய்துவிடுவேன்” என செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு சேலம் கனிமவளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் அயோத்தியாபட்டினம் அடுத்த குள்ளம்பட்டி பகுதியில், எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகப் பாறைகள் உடைக்கப்பட்டு, மண்ணும் வெட்டி எடுக்கப்படுவதாகக் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதிக்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, அங்கு அனுமதியின்றி பல டன் கணக்கில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி மலை போலக் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணின் மதிப்பை அதிகாரிகள் அளவீடு செய்து ஆய்வு செய்தனர். இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையின் போது, அந்தப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த மூன்று செங்கல் சூளைகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உரிய பர்மிட்…

Read More

பல ஆண்டு கனவு நனவான தருணமாக, ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் மானவ் சுதர் இன்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ளார். நியூ சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கியுள்ள ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மானவ் சுதருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், மானவ் சுதருக்கு இந்திய அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டெஸ்ட் கேப்’பினை வழங்கி, அவரை இந்திய டெஸ்ட் குடும்பத்திற்குள் வரவேற்றார். யார் இந்த மானவ் சுதர்? ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான மானவ் சுதர், இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமாவார். இவர் ஒரு பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், லோயர்-ஆர்டரில் (Lower-order) களமிறங்கி அணியின் தேவைக்கேற்ப அதிரடியாகவும் பொறுப்பாகவும்…

Read More

ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் (முல்லன்பூர்) உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். வெயில் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், போட்டி செல்லச் செல்ல ஆடுகளம் மெதுவாக மாறும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்திய அணியில் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மானவ் சுதர் (Manav Suthar) இன்று தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட அறிமுகமாகியுள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவருக்கு டெஸ்ட் கேப்…

Read More

இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் தபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slumdog: 33 Temple Road). இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அத்துடன், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீட்டுத் தேதியையும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். https://www.instagram.com/p/DZM_wquJDth/?utm_source=ig_embed&ig_rid=3c32b784-6434-4969-9ba7-22a49659969f வெளியாகியுள்ள புதிய போஸ்டரில், விஜய் சேதுபதி பின்னால் இருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தில், கையில் இரத்தம் படிந்த நீண்ட கத்தியைப் பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக நிற்கிறார். அழுக்கடைந்த, கிழிந்த ஆடைகளுடன் தெருப்பின்னணியில் இருக்கும் அவரது இந்த லுக், படம் ஒரு பக்கா ரா (Raw) மற்றும் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. “ரா வீதிகள், உண்மையான வடுக்கள், இரக்கமற்ற உணர்வுகள்…” என்ற கேப்ஷனுடன் ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் அதிரடியான டீசர் வரும் ஜூன் 8-ஆம்…

Read More

நாடு முழுவதும் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கிலோமீட்டரிலிருந்து 130 கிலோமீட்டராக உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ரயில்களின் பயண நேரம் கணிசமாகக் குறைவதோடு, ஆண்டுக்கு சுமார் 40 முதல் 45 கோடி பயணிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக, நவீன ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி (LHB) பெட்டிகளுடன் இயங்கும் 350 முதல் 400 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த பெட்டிகள் 160 கி.மீ வேகம் வரை பாதுகாப்பாகச் செல்லும் திறன் கொண்டவை. தற்போது ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் மற்றும் துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் மட்டுமே 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. இனி சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த வேகத்தில் இயங்கவுள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு, இந்த வேக அதிகரிப்பு மூலம் பயண நேரத்தில்…

Read More

கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்  இன்று மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் ஜூன் 9 ஆம் தேதி வரை…

Read More

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையும், இலக்கிய வளமும் கொண்ட நம் தமிழ் மொழிக்கு, இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று (ஜூன் 6). உலகில் உள்ள மிகச்சில மொழிகளுக்கே உரித்தான இந்த உயரிய அங்கீகாரத்தை தமிழ் மொழி எப்படிப் பெற்றது? இந்த நாளில் என்ன நடந்தது? என்பது குறித்த செய்தித் தொகுப்புதான் இது. மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக பார்க்கப்படுகின்றன. இத்தகைய தகுதிகளை கொண்ட தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் இன்று நேற்று எழுந்ததல்ல. 1887-ஆம் ஆண்டிலேயே பரிதிமாற்கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரியார்) தமிழின் தனித்தன்மைகளை விளக்கி, அதைச் செம்மொழி என முதன்முதலில் பிரகடனப்படுத்தினார். அதன் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் அறிஞர்களும், மொழியியலாளர்களும் இதற்கான பல்வேறு ஆய்வுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து…

Read More