Author: Editor web3
ஆட்சி என்றால் தனக்கு, அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு என்று சுயநலத்தோடு செயல்படும் தீய சக்தி நாங்கள் அல்ல” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மக்களின் பேராதரவோடு தனிப்பெரும் கட்சியாக நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஜனநாயகச் சக்திகளின் துணையோடு, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்குத் துணையாக நிற்கும் ஜனநாயக சக்திகளை மதித்து, அவர்களுக்கு முழு மனதுடன் ஆட்சியில் பங்கையும், அதிகாரப் பகிர்வையும் நாங்கள்தான் வழங்கியுள்ளோம்” என்று தவெக குறிப்பிட்டுள்ளது. ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே, அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கும் சம உரிமை கொடுத்துள்ளோம். கூட்டணி என்ற பெயரில் உடன் இருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, சுயநல அரசியல் ஆதாயங்களை மட்டும் தேடும்…
சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், சட்டப்படி சமர்ப்பிக்க வேண்டிய தங்களது சொத்து விவரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளிவந்துள்ளது. மாநகராட்சியின் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில், வெறும் 43 பேர் மட்டுமே தங்களது பதவியேற்புக் காலத்திலிருந்து 90 நாட்களுக்குள் சொத்து மற்றும் கடன் விவரங்களைச் சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 157 பேரில், 4 பேர் உயிரிழந்துவிட்டனர், 2 பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து, மேயர் ஆர். பிரியா மற்றும் துணை மேயர் எம். மகேஷ்குமார் உள்ளிட்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது சொத்து விவரங்களை இதுவரை அறிவிக்கவில்லை என்று ஜூன் 2-ஆம் தேதி பெறப்பட்ட RTI பதில் மூலம் தெரியவந்துள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்க இரு முக்கிய சட்ட விதிகள் உள்ளன. இதன் படி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்களின்…
இன்று ஜூன் 7. கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வரலாற்றுத் தினம். சரியாக 1975-ஆம் ஆண்டு இதே நாளில் தான், கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் (Prudential World Cup) இங்கிலாந்தில் முறைப்படி தொடங்கியது. டெஸ்ட் போட்டிகளை மட்டுமே கொண்டாடி வந்த கிரிக்கெட் உலகிற்கு, வெள்ளை உடையில் ஒருநாள் போட்டிகளை அறிமுகம் செய்து, ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய தொடர் இது. புருடென்ஷியல் கப் (Prudential Cup) என்ற இத்தொடருக்கு, புருடென்ஷியல் அஷ்யூரன்ஸ் நிறுவனம் நிதியுதவி செய்ததால் இப்பெயர் பெற்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 6 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுடன், இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அசோசியேட் அணிகளும் இதில் களம் கண்டன. இன்றைய ஒருநாள் போட்டிகளைப் போல 50 ஓவர்கள் கிடையாது. அப்போது ஒரு அணிக்கு 60 ஓவர்கள்…
இந்தியாவில் ஒரே நேரத்தில் இருவேறு முரணான வானிலை சூழல் நிலவி வருகிறது. தென் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்கள் கடுமையான கோடை வெயிலின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு வேகமாக நகர்ந்துள்ளது. வாரக்கணக்கில் நீடித்த வறண்ட, வெப்பமான வானிலைக்குப் பிறகு இந்த மழை அப்பகுதி மக்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தெற்கே மழை பெய்து வரும் அதே வேளையில், வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் வெயிலின்…
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைத் தற்போதைய தவெக அரசு கைவிட முடிவு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அரசியல் மற்றும் மின்வாரிய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று மின் நுகர்வைக் கணக்கெடுக்கும் முறைக்கு மாற்றாக, ஆளில்லாமல் தானியங்கி முறையில் கணக்கெடுக்க ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோருக்கு 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.20,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த திட்டம் மொத்தம் 6 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. அதேசமயம் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இந்த திட்டத்திற்கான விலைப்புள்ளிகளை திறந்து இறுதி செய்ய மின்வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றது. இதனை தொடர்ந்து தமிழக…
மத்திய அரசு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு காரணமாக, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை தற்பொழுது ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. கடந்த மூன்று மாத கால இடைவெளியில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செல்வப்பெருந்தகை, மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.29 உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி…
ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, சமூக வலைதளங்களில் அவர் குறித்த மீம்கள் வைரலாகி வருகின்றன. ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட், எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். ஆனால், முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய பண்ட், தனது அதிரடியான ஆட்டத்தால் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். நிதானமாகவும் அதே சமயம் தனக்கே உரிய பாணியில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டும் 70 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த போட்டி ரிஷப் பண்ட்டின் 50-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் எம்.எஸ்.தோனி, சையத் கிர்மானி ஆகியோருக்குப் பிறகு 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 3-வது…
ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி 732 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 163+) குவித்து அசத்தியிருந்தாலும், கில் T20 அணியில் சேர்க்கப்படாததற்கு தேர்வுக் குழுவின் நீண்டகால திட்டமிடலே முக்கியக் காரணம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்மன் கில் தற்போது இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். அடுத்த 18 மாதங்களில் இந்தியா 9 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக சுமார் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடினால் அவருக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வு ஏற்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு கில்லிடம் முன்கூட்டியே விரிவாக விவாதித்துள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு முக்கிய ஐசிசி தொடர்களுக்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதே அணியின் இப்போதைய…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில், நீண்டகாலமாக நிலவி வந்ததாகக் கூறப்படும் சாதிய பாகுபாட்டிற்கு தீர்வு காணும் வகையில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு இன்று முதல் அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. காந்திபுரத்திலிருந்து கெம்பனூர் வரை இயக்கப்படும் அரசு நகர பேருந்து (எண்: 21), பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அண்ணா நகர் பகுதிக்குள் செல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இது மறைமுகமான தீண்டாமை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களிடம், அண்ணா நகர் பகுதி மக்கள் தங்களுக்கு நேரும் இந்த சமூகப் பாகுபாடு குறித்து நேரில் மனு அளித்தனர். தங்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பேருந்து சேவையை தங்களது பகுதி வரை…
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். தொடக்க முதலே நிதானமாக விளையாடி வந்த நிலையில் ஜெய்வால் 32 பந்துகளி 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சனும் 104 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, நிதானத்துடன் விளையாடி வந்த கே.எல். ராகுலுடன் கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடிய அவர், 164 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகளுடன் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டெஸ்ட்…