Author: Editor web3
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பேரணாம்பட்டு அடுத்த பொகலூர் காப்புக்காடு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கையில் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிவதாக மேல்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் காட்டில் நடமாடிய இரண்டு பேரை மடக்கிப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் வரதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் (24), ஊனை மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வேட்டையாடி வந்துள்ளனர். பின்னர்,…
திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் குற்றங்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. முதலியார் சத்திரம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த விவகாரத்தில் 7 சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் செல்ல அடம் பிடித்து மறுத்ததால், அவர் தற்காலிகமாக அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். காப்பகத்தில் இருந்த போது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்தச் சிறுமி அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவினர் கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் விரிவான விசாரணை நடத்தக் கோரி புகார் அளித்தனர்.…
தமிழக அரசியல் களத்தில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிமுக-விற்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான ‘எக்ஸ்’ போர் வெடித்துள்ளது. “விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, தவெக ஐடி விங் விமர்சனம் செய்ய, அதற்கு அதிமுக ஐடி விங் கொடுத்துள்ள பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “தீர்ந்துபோன சக்தி” என மறைமுகமாகக் குறிப்பிட்டு தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டது. அந்த பதிவில், “திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ? வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர்…
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் பீட்சா டெலிவரி செய்யச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிலடெல்பியாவின் நார்த் பகுதியில் உள்ள ‘ரேமண்ட் ரோசன் ஹோம்ஸ்’ குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டரை டெலிவரி செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றபோது, அங்கு மறைந்திருந்த கும்பல் அந்த இளைஞரின் தலையில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், பாதிக்கப்பட்ட இளைஞர் பீட்சா பையை எடுத்துச் செல்வதும், அவரைத் தொடர்ந்து கறுப்பு உடை அணிந்த இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்வதும் பதிவாகியுள்ளது. நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட போலீஸார், டெம்பிள் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.…
உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வீரர்களில் இந்திய வீரர்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள். ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட அதிக உடல் உழைப்பையும் சகிப்புத்தன்மையையும் கோருபவை. எனவே, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எவ்வளவு சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறது என்ற சுவாரசியமான விவரங்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வீரர்கள் எந்தப் பிரிவில் இருந்தாலும், அவர்களுக்குப் போட்டிகளின் அடிப்படையில் தனியாகக் கட்டணம் வழங்கப்படுகிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரருக்கு போட்டி கட்டணமாக மட்டும் ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. இது தவிர, ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் கட்டணமாக வழங்கப்படுகிறது. இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் பக்கமாக கவனம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக, பிசிசிஐ ஒரு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு சீசனில் ஒரு வீரர் எத்தனை சதவீத…
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் பயணம் குறித்து ஹிட்மேன் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டியின் இடையே பேசிய ரோஹித் சர்மா, சூர்யகுமாரின் விடாமுயற்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். சூர்யகுமார் யாதவுக்கு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அவர் தனது 30 அல்லது 31 வயதில்தான் இந்திய அணிக்காக அறிமுகமானார். இவ்வளவு தாமதமாக வாய்ப்பு கிடைத்த போதிலும், அவர் எப்போதும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. எப்போதும் போராடத் தயாராக இருந்தார்” என்று ரோஹித் குறிப்பிட்டார். தனக்குக் கிடைத்த சர்வதேச வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் இரு கரங்களால் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரது தலைமையில் இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்ததையும்…
டெல்லியில் ஜூன் 8-ம் தேதி ‘இண்டியா’ கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக்குள் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சிபிஎம் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதற்கு விளக்கம் கேட்டு, சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள், சிபிஎம் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் உடன்பாடு இருப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே ரகசியப் புரிந்துணர்வு இருப்பதாக காங்கிரஸ் பிரசாரம் செய்தது. இதற்கு அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என்று எம்.ஏ.பேபி வலியுறுத்தியுள்ளார். பாசிச மற்றும் வகுப்புவாத பாஜகவை அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து வீழ்த்துவதற்காகவே ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது. தேசிய அளவில்…
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே இதுவரை எவரும் எட்டாத புதிய உச்சத்தைத் தொடவுள்ளார். மனித வரலாற்றின் முதல் ‘ட்ரில்லியனர்’ (ஒரு லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடையவர்) என்ற பெருமையை நோக்கி அவர் மிக வேகமாக நகர்ந்து வருகிறார். மஸ்க்கின் இந்த அசாத்தியமான பொருளாதாரப் பாய்ச்சலுக்குப் பின்னால், அவரது வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ் பொதுப் பங்குச்சந்தையில் தடம் பதிக்கவிருப்பதுதான் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ (IPO) மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 1.77 ட்ரில்லியன் டாலரை எட்டும் என்று நிதித்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தரவுகளின்படி, ஜூன் மாதத் தொடக்கத்திலேயே எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து…
‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “நூறு சாமி” (Nooru Saami). ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ‘நூறு சாமி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நாளை (ஜூன் 8)வெளியிடுகிறார். இதற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி, வசூலிலும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி ஜோடி மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பு மற்றும் இயக்குநர்…
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மேல்நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அந்தச் சமயத்தில், போக்குவரத்து கழகங்களில் பல்வேறு பணிகளைப் பெற்றுத் தருவதற்காகப் பெருமளவில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒருவர் மீதான புகாரை முழுமையாக விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமானால், அதற்கு மாநில ஆளுநரின் அனுமதி அவசியமாகும். அதனடிப்படையில், செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் இந்த…