Author: Editor web3
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வருகை தந்தார். அப்போது, அவர் மழையூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தத் திடீர் ஆய்வின் போது, மருத்துவமனையின் வார்டுகளுக்கு நேரில் சென்ற அமைச்சர், அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், மருந்து மாத்திரைகளின் இருப்பு மற்றும் தடையற்ற மருத்துவ சேவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ், மருத்துவமனையில் தங்களுக்கு உரியச் சிகிச்சை கிடைக்கிறதா என்றும், ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மருத்துவமனையின் தூய்மை மற்றும்…
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்ட ‘கரீப் கல்யாண்’ (Garib Kalyan) திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். https://x.com/narendramodi/status/2063829392711897503? இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் இந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக ஏழைகளின் நலனே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் எப்போதும் ‘அந்த்யோதயா’ (கடைசி மனிதனின் எழுச்சி) என்ற கொள்கையால் உத்வேகம் பெற்றுள்ளோம். பல தசாப்தங்களாகப் பின்தங்கியிருந்தவர்களுக்கு வளர்ச்சியின் பலன்கள் சென்றடைவதை எங்களது அரசு உறுதி செய்துள்ளது,” என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேரடிப் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் உதவிகள் நேரடியாகவும், வெளிப்படையான முறையிலும் மக்களைச் சென்றடைவதாகவும், இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசின்…
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று (ஜூன் 8) காலை ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் போது பள்ளி மாணவர்கள் அலறியடித்தபடி ஓடும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிலிப்பைன்ஸில் இன்றுதான் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. தாவோ ஆக்ஸிடென்டல் (Davao Occidental) பகுதியில் உள்ள மகாயஹாய் ஆரம்பப் பள்ளியில் காலையில் மாணவர்கள் மைதானத்தில் ஒன்று கூடி, கொடியேற்றத்துடன் கூடிய பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் பூமி குலுங்கத் தொடங்கியது. நிலநடுக்கத்தின் வீரியம் தாங்காமல், மைதானத்தில் மாணவர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியின் அருகே இருந்த ராட்சத தகர நிழற்குடை கூடாரம் அப்படியே சரிந்து விழுந்தது. https://x.com/WeatherMonitors/status/2063806759958200467? திடீரென பூமி குலுங்கி, கூடாரமும் சரிந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.…
டெல்லியில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை, கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்துள்ளன. டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதியில் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கூடிய ராட்சத புயல் வீசியது. காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், தரைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரும் படிக்கட்டுகள் மற்றும் இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்குச் சொந்தமான தரைவழிச் சேவை உபகரணங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டை இழந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அவ்வாறு வேகமாக நகர்ந்து சென்ற உபகரணங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 ‘ஏ320’ (A320) ரக விமானங்கள் மீது பலமாக மோதின. காற்றின் வேகத்தில் ராட்சத படிக்கட்டுகள் தானாகவே தார்சாலையில் ஓடுவதும், விபத்தைத் தவிர்க்க விமான நிலைய ஊழியர்கள் புயல் காற்றையும் பொருட்படுத்தாமல் அதன் பின்னால்…
சண்டிகரின் முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான 23 வயது மானவ் சுதர், தனது அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை (22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் கொடுத்து) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் அறிமுக போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். மற்றொருபுறம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார். இந்தியா 412 ரன்கள் முன்னிலை: முன்னதாக, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, கேப்டன்…
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், வார இறுதி விடுமுறை காரணமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள கணினிகளில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டன. மே 20ஆம் தேதி இதனை கவனித்த உதவி பொறியாளர் மலர்விழி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னரே போலீசில் புகார் அளிக்கப்பட்டு, இந்த விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவர் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைதான கோபிநாத் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், மின்வாரிய அலுவலகத்தில்…
டெல்லியில் நடைபெறவிருக்கும் ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி அசோகா சாலை மற்றும் நகரின் முக்கிய சந்திப்புகளில் இன்று (திங்கள்கிழமை) காலை திடீரென இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. https://x.com/ANI/status/2063834755100295646? அந்த போஸ்டர்களில், ராகுல் காந்தியிடம் ஸ்திரத்தன்மை இல்லை என்ற வாசகங்கள் இந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சரத் பவார், மம்தா பானர்ஜி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பேசிய எதிர்மறையான கருத்துகள் இந்த போஸ்டர்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. https://x.com/ians_india/status/2063823697572700631? 20 ஆண்டுகளாக திமுக தோளில்…
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா? என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கவனித்தபடி, சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வ கணக்கை அன்ஃபாலோ செய்துள்ளார். மேலும், அவரது பயோவில் இருந்த ‘Mumbai Indians’ என்ற வார்த்தையை நீக்கியுள்ளதுடன், அந்த அணி தொடர்பான பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் நீக்கியுள்ளார். ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனியுடன் இருக்கும் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே அவரது பக்கத்தில் உள்ளன. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி மற்றும் செயல்பாடுகளில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகிய போது, சூர்யகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்தினார். எனினும், அணி நிர்வாகத்திற்கும் அவருக்குமான உறவில் சுமுகமான சூழல் இல்லை என்றும், ஹர்திக் பாண்டியா – சூர்யகுமார் இடையே கருத்து வேறுபாடுகள்…
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவியே, கணவரை கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத உடல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸார் சூட்கேஸில் கிடந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இது குறித்து, ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ஓட்டேரி போலீஸார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக் குமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீஸார் தலைமையில் 2 தனிப் படைகள் உட்பட 8 தனிப் படைகளை அமைத்து…
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். இந்த அபார சதத்தின் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக பல ஜாம்பவான்களின் சாதனைகளை கில் முறியடித்து வருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த இந்த சதத்தின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அடிக்கும் 6-வது சதம் இதுவாகும். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5 சதங்கள் அடித்திருந்த முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை கில் முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கில் தற்போது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்துள்ளார். மேலும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய டெஸ்ட் கேப்டனாக 7 சதங்கள் அடித்துள்ளார். தற்போது 6 சதங்களுடன் இருக்கும் சுப்மன் கில், இன்னும் ஒரே ஒரு சதம் அடித்தால் சச்சினின் சாதனையைச் சமன்…