Author: Editor web3

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவருக்கு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் அவரது மறுவருகையைத் தடுத்துள்ளது. கடந்த ஜூன் 2 முதல் பெங்களூரு CoE மையத்தில் ஹர்திக் பாண்டியா தீவிர உடற்தகுதிப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 10 ஓவர்கள் முழுமையாக வீசி மேட்ச் சிமுலேஷன் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்திருந்தார். இதனால் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜூன் 11 அன்று தர்மசாலாவில் உள்ள இந்திய அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி கட்டப் பயிற்சியின் போது அவருக்கு குவாட்ரைசெப்ஸ் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ அதிகாரியின் அறிக்கை, மிகவும் தாமதமாக இந்த…

Read More

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியேயான ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சோமாலியாவைச் சேர்ந்த பிரபல நடுவர் ஓமர் அர்தானுக்கு (Omar Artan) அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர். உலகக் கோப்பைக்கான இறுதித் தயாரிப்புகளில் பங்கேற்பதற்காக, ஃபிபா (FIFA) அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 நடுவர்களுடன் இணைவதற்காக ஓமர் அர்தான் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். தன்னிடம் முறையான விசா மற்றும் தேவையான அனைத்து பயண ஆவணங்களும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரிடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் முடிவில், அவர் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர் எனக் கூறி, வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். அமெரிக்காவின் இந்த அதிரடி…

Read More

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 3 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் அங்கீகரித்ததற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகுதி நீக்கப் புகார்கள் நிலுவையில் இருந்தபோது எடுக்கப்பட்ட இந்த முடிவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி இந்த சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், பேரவையின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பிரதான கட்சிகளான திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் பெற்றன. இதையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் அமைப்புகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு தவெக புதிய அரசை அமைத்தது. இதற்கிடையே, கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை பெரும்பான்மை வாக்கெடுப்பின்…

Read More

தமிழ் சினிமாவின் திசையையே கிராமங்களை நோக்கித் திருப்பி, ‘இயக்குநர் இமயம்’ என்று ஒட்டுமொத்த திரையுலகாலும் கொண்டாடப்பட்ட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த கலை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நேரில் வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பாரதிராஜா அவர்களின் திறமையைப் பற்றியும், அவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகளைப் பற்றியும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, அதை ஒட்டுமொத்த உலகமே நன்கு அறியும். ஆனால், சினிமாவுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். இயக்குநர், தயாரிப்பாளர் எனத் திரையுலகில் யாருக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், அங்கே முதல் ஆளாக வந்து, முதலில் குரல் கொடுக்கும் உன்னத குணம் படைத்தவர் அவர். திரையுலகம் இருக்கும் வரை அவரது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்றார். அவருடனான தனிப்பட்ட நட்பு குறித்துப் பகிர்ந்த ரஜினிகாந்த், “தனிப்பட்ட முறையில் பார்த்தால் அவர் ஒரு…

Read More

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் விதமாக, நாளை (ஜூன் 11) தமிழகம் முழுவதும் அனைத்துத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய மாபெரும் கலைக் குறியீடான இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும், ரசிகர்களையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நாளை ஒருநாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு இரங்கல் செலுத்தும் விதமாக, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளும் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகளும் முழுமையாக…

Read More

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார். 16…

Read More

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் மற்றும் அதில் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து, தொகுதி வாரியாக விரிவான கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்காக திமுக தலைமை அமைத்த சிறப்புக் குழு, தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இன்று (ஜூன் 10) கடைசி நாளாகும். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுகவின் வாக்கு வங்கி சரிந்தது மற்றும் முக்கியத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 38 பேர் கொண்ட இந்த உயர்மட்ட கள ஆய்வு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கடந்த சில வாரங்களாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து (234) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களை நேரில் சந்தித்து, தோல்விக்கான உண்மையான காரணங்கள்…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் – ஈரான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஓமன் கடற்பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற ‘எம்.டி மரைவெக்ஸ்’ (MT Marivex) என்ற வெளிநாட்டு எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தீப்பற்றியதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இந்திய மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் (MoPSW) முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் ஓமன் நாட்டின் கடற்பகுதியில், ஹார்முஸ் ஜலசந்திக்குத் தெற்கே சென்றுகொண்டிருந்த போது இந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் எந்தவித காயமுமின்றி தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்று அமைச்சகத்தின் இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.  https://x.com/PTI_News/status/2063937743106048172? இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கு நடுவே, இந்த எண்ணெய் கப்பல்…

Read More

அயோத்தி ராமர் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வாரி வழங்கி வரும் நிலையில், இதுவரை வந்துள்ள மொத்த நன்கொடை ரூ.3,000 கோடியைத் தாண்டியுள்ளது. கோவில் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் நிர்வாகம் குறித்த நிதி விவரங்களை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தற்போது வெளியிட்டுள்ளது. நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? வரி எவ்வளவு?  ராமர் கோவில் வளாக கட்டுமானப் பணிகளுக்கான மொத்த திட்ட மதிப்பு சுமார் ரூ.1,800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை கிட்டத்தட்ட ரூ.1,600 கோடி கட்டுமானப் பணிகளுக்காகச் செலுத்தப்பட்டுவிட்டது. இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மூலம் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. கோவில் அறக்கட்டளை சார்பில் இதுவரை சுமார் ரூ.396 கோடி வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி கோவில் வளாகப் பராமரிப்பு, அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், பிரசாதம் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தங்கம், வெள்ளிப் பொருட்கள் என்ன செய்யப்படுகின்றன? பக்தர்கள் பணமாக மட்டுமின்றி…

Read More

சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களின் உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் புகழ்பெற்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) எச்சரித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் அணு ஆயுத பலம் அதிகரித்திருப்பதுடன், சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளும் தங்களது அணு ஆயுதக் குவியலை வேகமாக உயர்த்தி வருகின்றன. SIPRI அமைப்பின் 2026 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 180-லிருந்து 190-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அணு ஆயுத நவீனமயமாக்கல் திட்டம், தற்போது சீனா முழுவதையும் குறிவைக்கும் வகையிலான நீண்டதூர ஏவுகணைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதேநேரம், அண்டை நாடான பாகிஸ்தானின் அணு ஆயுத எண்ணிக்கை மாற்றமின்றி 170 என்ற அளவில் நீடிக்கிறது. இதனால் அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தானை விட இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. சீனா,…

Read More