Author: Editor web3

இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, பல வரலாற்று சாதனைகளுக்குக் களம் அமைக்கப் போகிறது. ஆனால், இந்த முறை அரங்கேறப்போகும் ஒரு சுவாரசியம்… ரசிகர்களின் நெஞ்சங்களை நெகிழ வைக்கப் போகிறது; நெஞ்சை உலுக்கவும் போகிறது. ஆம்! ஒரே தாயின் வயிற்றில் பிறந்து, ஒரே முற்றத்தில் ஓடி விளையாடிய 7 ஜோடி சகோதரர்கள், இந்த உலகக் கோப்பைக் களத்தில் கால் பதிக்கிறார்கள். 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய எமோஷனல் அத்தியாயத்தை எழுதப்போகிறது. ஆம்! இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 7 ஜோடி சகோதரர்கள் களம் காண்கிறார்கள். இதில் 4 ஜோடிகள் எதிரெதிர் நாடுகளுக்காகவும், 3 ஜோடிகள் ஒரே நாட்டுக்காகவும் களம் இறங்குகிறார்கள். “விதியின் விசித்திர விளையாட்டு இது! பாசக் கயிற்றால் பிணைக்கப்பட்ட அண்ணன்-தம்பிகள், நாடென்று வரும்போது எதிரெதிர் துருவங்களாக களத்தில் மோத காத்திருக்கிறார்கள். அந்தவகையில், முதலாவதாக, வில்லியம்ஸ் சகோதரர்கள் வெவ்வேறு…

Read More

மே மாதத்திற்கான ஊதியம் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. வருகைப் பதிவேடு செயலி குளறுபடியைக் காரணம் காட்டி, பணியாளர்களின் சம்பளத்தில் பெருமளவில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.18,000 சம்பளம் வாங்கும் செவிலியர்களுக்கு இந்த மாதம் வெறும் ரூ.3,000 மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த திமுக ஆட்சிக் காலம் வரை தங்களுக்குச் சம்பளம் முறையாக வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போதைய தவெக ஆட்சித் தொடக்கத்திலேயே இந்தச் செயலிப் பிரச்சனையால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாகவே சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுகாதார நிலைய ஊழியர்களுக்குச் சம்பளக் குளறுபடிகள் நீடித்து வருகின்றன.…

Read More

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்குத் திரை உலகினரும், பொதுமக்களும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே ஏராளமான திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் வடிவேலு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்த பண்ணை வீட்டிற்கு வருகை தந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலைப் பார்த்த நடிகர் வடிவேலு, திரையுலகில் தனக்கு வாழ்வளித்த மாபெரும் இயக்குநரின் இழப்பைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார். கவிஞர் வைரமுத்துவும் பாரதிராஜாவின் உடலுக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

Read More

இளம் பருவத்தினரின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் அதிரடிச் சட்டத்தைக் கனடா அரசு கொண்டு வந்துள்ளது. உலகளவில் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கனடா இம்முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளை வைத்திருக்கத் தடை விதித்துள்ளன. இதேபோன்று பிரான்ஸ், டென்மார்க் மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள கனடா அரசு, ‘டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம்’ (Digital Safety Act) என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் யாரும் சமூக ஊடகங்களில் கணக்குகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. குறிப்பாக, சிறார்களின் அனுமதியின்றி எடுக்கப்படும் அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையத்தில்…

Read More

கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம், வரும் ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாதந்தோறும் நடைபெறும் இக்கூட்டம், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் தவெக வெற்றி பெற்று, ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசு அமைந்த பின்னரும், கடந்த மே மாதத்தில் மாமன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை. சென்னையிலுள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ தவெக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய ஆட்சி அமைந்த பிறகும் சென்னை மேயர், துணை மேயர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. மேலும், புதிய அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தினால்தான் மாமன்றக் கூட்டம் தள்ளிப்போகிறது என்ற பேச்சுகளும் உலா வந்தன. இத்தகைய அரசியல் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும்…

Read More

பிரதமர் நரேந்திர மோடி 4,399 நாட்கள் பதவியில் நீடித்து சாதனை படைத்துள்ளதாக பாஜக மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, நரேந்திர மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் நாட்டின் பிரதமராக நீடிப்பது பாராட்டுக்குரிய ஒரு சாதனைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது ஜவாஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துவிட்டது என்று கூறுவது முற்றிலும் தவறான தகவல். 1947 முதல் 1952 வரையிலான காலகட்டத்தில் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்ற வரலாற்று உண்மையை யாரும் மறந்துவிடவோ அல்லது வரலாற்றிலிருந்து நீக்கிவிடவோ முடியாது. பாஜக தனது அரசியல் லாபத்திற்காக இப்படி ஒரு கணக்கைக் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஊடகங்கள் எந்தவிதமான விளக்கமும் தராமல், பாஜகவின் இந்த வாதத்தை அப்படியே செய்தியாக வெளியிடுவதுதான் ஆச்சரியமளிக்கிறது. தற்போதைய பிரதமர் மோடியின்…

Read More

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சசிமோகன், “பொதுமக்கள் மற்றும் விஐபிக்கள் எவ்வித சிரமமுமின்றி அஞ்சலி செலுத்துவதற்காக தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு போக்குவரத்து மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இரண்டு மாவட்ட எஸ்பிக்களின் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Read More

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. நேற்றுடன் (ஜூன் 10) பிரதமர் மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் இருந்து, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன், 1952 முதல் 1964 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேரு தொடர்ந்து 4,398 நாட்கள் பதவியில் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி   தலைவர்களின் கூட்டத்தில், இந்த வரலாற்றுச் சாதனையைக் பாராட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த இத்தீர்மானத்தை நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ வழிமொழிந்தார். இந்த பாராட்டு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இதை நான் ஒரு…

Read More

கால்பந்து வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய 48 அணிகள் பங்கேற்கும் 2026 ஃபீஃபா உலகக் கோப்பை தொடர் இன்று ஜூன் 11 முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இத்தொடரில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இரு ஜாம்பவான்களும் தங்களது 6-ஆவது உலகக் கோப்பையில் விளையாடி வரலாற்று சாதனை படைக்கவுள்ளனர். இருப்பினும், இதுவரை உலகக் கோப்பை மேடையில் இவர்கள் இருவரும் ஒருவருக்குக் களத்தில் ஒருவர் நேருக்கு நேர் மோதியதே இல்லை. நடப்புத் தொடரில் அர்ஜென்டினா குரூப் J பிரிவிலும், போர்ச்சுகல் குரூப் K பிரிவிலும் இடம்பெற்றுள்ளதால், லீக் சுற்றில் இவர்கள் மோத வாய்ப்பில்லை. ஆனால், நாக்-அவுட் சுற்றுகளில் இவர்கள் மோதக்கூடிய 3 சாத்தியமான வழிகளும் உள்ளன. அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அணிகளும் தமது பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதல் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இரு அணிகளும் தங்களது பிரிவுகளில்…

Read More

சர்வதேச ஃபார்முலா 1 (F1) பந்தயங்களை நிர்வகிக்கும் சர்வதேச வாகன கூட்டமைப்பு (FIA), ஃபார்முலா ஒன் மேனேஜ்மென்ட் (FOM), பந்தய அணிகள் மற்றும் இன்ஜின் தயாரிப்பாளர்கள் இணைந்து, 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்கான புதிய இன்ஜின் விதிமுறை மாற்றங்களுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போதுள்ள விதிகளின்படி, காரின் எரிபொருள் இன்ஜின் மற்றும் மின்சார பேட்டரி திறன் ஆகியவற்றின் ஆற்றல் பகிர்வு 53/47 என்ற விகிதத்தில் இருந்தது. இது பந்தயங்களின் வேகத்தைக் குறைப்பதாக மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டனர். மேலும், ஜப்பானிய கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் ஓலி பியர்மன் பேட்டரி கோளாறு காரணமாக 50G அளவிலான பயங்கர விபத்தைச் சந்தித்ததும் இந்த மாற்றத்திற்கான முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தநிலையில், வீரர்களின் கோரிக்கையை ஏற்று, காரின் வேகத்தை அதிகரிக்கவும், தகுதிச் சுற்றுப் போட்டிகளை இன்னும் விறுவிறுப்பாக்கவும் இன்ஜின் மற்றும் பேட்டரி ஆற்றல் பகிர்வில்  இரண்டு கட்டங்களாக மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதன்படி,…

Read More