Author: Editor web3
நியூசிலாந்து கிரிக்கெட்டின் மாபெரும் தூணான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒட்டுமொத்த விளையாட்டு உலகிற்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். 16 ஆண்டுகால அசாத்திய கிரிக்கெட் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள வில்லியம்சன், எளிதில் தகர்க்க முடியாத பல இமாலய சாதனைகளை நியூசிலாந்து மண்ணில் விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் முக்கியமான 5 மைல்கற்கள் இதோ. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள்: நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை வில்லியம்சன் தன்வசம் வைத்துள்ளார். 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.06 சராசரியுடன் 9,515 ரன்கள் குவித்துள்ளார். இதில் 33 சதங்களும், 38 அரைசதங்களும் அடங்கும். இவருக்கு அடுத்த இடத்தில் ராஸ் டெய்லர் (7,683 ரன்கள், 19 சதங்கள்) உள்ளார். தற்போதைய கேப்டன் டாம் லேதம் 16…
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த திடீர் முடிவின் காரணமாக, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது ஓய்வு குறித்துப் பேசியுள்ள வில்லியம்சன், “கடந்த சில நாட்களாகவே யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்; ஓய்வு பெற இதுவே சரியான தருணம். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. எனது சொந்த விருப்பத்தின் பேரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டே டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துள்ளார். 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 378 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன், 19,346 ரன்கள்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் சற்று தணிந்ததை அடுத்து, உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழலால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 12) அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான ராணுவத் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டதாக வெளியான தகவலாலும், இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டி வருவதாக கூறப்படுவதும் உலக சந்தைகளில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,695.40 புள்ளிகள் (2.30%) உயர்வை சந்தித்து 75,527.95 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 75,608.02 புள்ளிகள் வரை சென்று வர்த்தகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 461.30 புள்ளிகள் (1.99%)…
பள்ளிகள், மழலையர் காப்பகங்கள் மற்றும் வீடுகளில் சுகாதாரம் குறைவினால் குழந்தைகளிடம் வேகமாகப் பரவக்கூடிய ‘ஷிகெல்லா’ (Shigella) என்ற குடல் பாக்டீரியா தொற்று குறித்து குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். இந்தத் தொற்று ஏற்பட்ட 1 முதல் 3 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஆரம்பத்தில் சாதாரண வயிற்று உபாதையாகத் தோன்றும் இந்தத் தொற்றின் முக்கிய அறிகுறிகள் என்னவென்றால், கடுமையான வயிற்றுப்போக்கு , காய்ச்சல் மற்றும் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும் தொற்று பரவுவது எப்படி? பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக கைகள், உணவு, தண்ணீர் மற்றும் அடிக்கடி தொடும் பொருட்கள் வழியாக இந்த பாக்டீரியா மிக எளிதாகப் பரவுகிறது. குழந்தைகள் கழிவறைக்குச் சென்ற பின் கைகளைச் சரியாகக் கழுவாமல், விளையாட்டுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்வதால் பள்ளிகளில் இது வேகமாகப் பரவுகிறது. தடுக்கும் முறைகள்: கழிவறையைப் பயன்படுத்திய பின்பும், சாப்பிடுவதற்கு முன்னும் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதை உறுதி…
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மாநாட்டு நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், இன்று காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையை தற்காலிக சிபிஐ அலுவலகமாக மாற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வேலுச்சாமிபுரம் பகுதி மக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் தவெக நிர்வாகிகள் என பலரிடமும் அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டன. இடையில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த…
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா பேச்சுவார்த்தை’ என்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கும், தேசிய நலன்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்திய ஆயுதங்களைக் கொண்டு இதுவரை எந்த ஒரு ஐரோப்பிய நாடும் தாக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை என்னால் அப்படிச் சொல்ல முடியாது. ஐரோப்பா நாடுகள், விற்கும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக, குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளால் (பாகிஸ்தான்) பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார். மேலும், உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் பாரம்பரிய விநியோகஸ்தர்களான மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கின. இதனால் சந்தையில் ஏற்பட்ட விலை…
திருத்தணி அருகே ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை என்ற ஆத்திரத்தில், 15 வயது சிறுவனை அடித்துக் கொன்று பண்ணையிலேயே புதைத்த கொடூரச் சம்பவம் 4 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், முருகம்பட்டு கிராமத்தில் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் கோழி, ஆடு, வாத்து பண்ணை நடத்தி வந்தார். இங்கு வேலை செய்வதற்காக வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று மகன்களுடன் கடந்த 6 மாதங்களாக அங்கேயே தங்கிப் பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பண்ணை உரிமையாளர் பாலமுருகன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது பண்ணையில் கோழிகள் குறைந்திருந்ததாலும், ஆடுகள் பக்கத்துத் தோட்டத்தில் மேய்ந்து பிரச்சினை ஏற்பட்டதாலும் வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷுடன் (15) தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலமுருகனும், அவரது நண்பரான வினோத்தும் சேர்ந்து சிறுவன் சுரேஷை இரும்பு சுத்தியலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை…
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்றைய தினம் மேட்டூர் அணை திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “காவிரி டெல்டா பாசனத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான குறுவை சாகுபடிக்கு, ஜூன் 12-ல் மேட்டூர் அணை நீர் திறக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது. ஆனால், உரிய நேரத்தில் நீரைத் திறக்காமல் விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. ஏற்கனவே ரூ.10,000 கோடிக்கும் மேலாக உள்ள கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல், மிகக் குறைந்த தொகையை மட்டும் தள்ளுபடி செய்து விவசாயிகளை இந்த விடியா அரசு வீதிக்குத் தள்ளியுள்ளது. இப்போது நீரைத் திறக்காமல், ரூ.134 கோடிக்கு சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடுகிறது. கழக ஆட்சிக்…
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது சரக்கு வாகனம் மோதியதில், தாத்தாவும் அவரது இரண்டு பேரக்குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (60). தையல் தொழிலாளியான இவர், இன்று காலை தனது மகன் மற்றும் மகளின் குழந்தைகளான அஜய் (9), குணஸ்ரீ (7), அஸ்வந்த் (4) ஆகிய மூன்று பேரப்பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வழக்கம்போல அருகில் உள்ள தனியார் பள்ளிக்குக் கிளம்பியுள்ளார். இவர்கள் சித்தாஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக வேலுவின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாத்தா வேலு, பேத்தி குணஸ்ரீ மற்றும் 4 வயது பேரன் அஸ்வந்த் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே…
அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மீது ரசிகர்கள் தங்களின் பாசத்தை வெளிப்படுத்தப் பல வழிகளைக் கையாள்வது வழக்கம். ஆனால், புதுச்சேரியில் தவெக நிர்வாகி ஒருவரின் திருமணத்தில், தமிழக முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மேடையில் வைத்து தாலி கட்டிய சுவாரசியமான நிகழ்வு இப்போது இணையத்தில் பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான பிரபு என்பவரது குடும்பத் திருமணம் வில்லியனூரில் நடைபெற்றது. மணமகன் அருண்குமார் – மணமகள் சௌமியா ஆகியோரின் இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது திருமண மேடைதான். மணமக்கள் அமரும் மணமேடையின் அருகிலேயே, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயின் பிரம்மாண்டமான உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தின் முன்னிலையிலேயே அனைத்து திருமணச் சடங்குகளும் நடைபெற்று, மணமகன் அருண்குமார் மணமகள் சௌமியாவின் கழுத்தில் தாலி கட்டினார்.…