Author: Editor web3

சென்னை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் கடற்கரையும், பரபரப்பான சாலைகளும் தான். ஆனால், தென் தமிழகத்து மக்கள் பலரின் சென்னை கனவு முதன்முதலில் காலடி எடுத்து வைத்த இடம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தான். வெறும் செங்கல், மணலை கொண்டு கட்டப்பட்ட ஒரு சாதாரணக் கட்டிடமாகவோ அல்லது வெறும் போக்குவரத்து மையமாகவோ இதனை நம்மால் கடந்து போய்விட முடியாது. இது நூற்றாண்டு கடந்த சென்னையின் இதயம்; கோடிக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும், புன்னகைக்கும், பிரிவிற்கும், சேர்க்கைக்கும் சாட்சியாகத் திகழும் உணர்வுகளின் சங்கமம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எழும்பூர் ரயில் நிலையம் கடந்த 11ம் தேதியுடன் தனது 118-வது ஆண்டை நிறைவு செய்து, இன்றும் தன் கம்பீரம் குறையாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. பழைய மெட்ராஸ் மாகாணத்தின் தெற்குப் பகுதிப் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்காக, 1906-ஆம் ஆண்டு தொடங்கி 1908-ஆம் ஆண்டு ஜூன்  மாதம் 11ம் தேதி எழும்பூர் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு,…

Read More

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகனும், சமூக ஊடகப் பிரபலருமான ஹர்ஷவர்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ, தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘#IOIO’ என்ற புதிய பாடலின் துடிப்பான ஹூக் ஸ்டெப் (Hook Step) நடனத்தை அவர் வெளியிட்டுள்ளார். “இந்த ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்பை கற்றுக்கொண்டு, உங்களின் சொந்த பாணியில் ரீல்ஸ் செய்து அசத்துங்கள். உங்களின் நடனப் பதிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ரசிகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://www.instagram.com/reel/DZehBSjyKNb/?igsh=MTd0cTU5NTA1cXhzaQ%3D%3D இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப் நடன வீடியோவின் பின்னால் இருந்து உழைத்த முக்கியப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த நடன வீடியோவை ‘பிராண்ட் மேஸ்காட்ஸ்’ (@wearebrandmascots) நிறுவனம் தயாரித்துள்ளது.  ராகுல் கிருஷ்ணா (@ragulkrishnaa) இந்த வீடியோவை இயக்கியுள்ளார். பிரதீப் முருகன் (@pradeep.murugan) இப்பாடலைத் தயாரித்துள்ளார். ரசிகர்களைக் கவர்ந்த இந்த ‘#IOIO’ ஹூக்…

Read More

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, நாட்டில் உள்ளூர் அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, சில்லறை எரிபொருள் நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு அல்லது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலை நேரடியாக வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளிலோ அல்லது பிஇஎஸ்ஓ (PESO) அங்கீகாரம் பெற்ற கொள்கலன்களிலோ மட்டுமே நிரப்ப வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற மொத்தமாக எரிபொருள் வாங்கும் நுகர்வோர், இனி சில்லறை பெட்ரோல் பங்குகளில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு என அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக நுகர்வோர் பங்குகள் மூலமாகவே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.…

Read More

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் அவசரக் கால இருப்பு திட்டத்தின் கீழ் வெங்காயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை இன்று (ஜூன் 13) முதல் உயர்த்தப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். அதன்படி, இதுவரை கிலோவுக்கு ரூ.15.80 ஆக இருந்த குறைந்தபட்ச கொள்முதல் விலை, இன்று முதல் ரூ.16.50 ஆக (குவிண்டாலுக்கு ரூ.1,650) உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள், சாகுபடிச் செலவு அதிகரித்துள்ளதைக் சுட்டிக்காட்டி, கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.30 ஆக (குவிண்டாலுக்கு ரூ.3,000) உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய உயர்வு போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர். விலை நிலைநிறுத்த நிதியத்தின் (PSF) கீழ், கடந்த 2025-26 நிதியாண்டில் 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய…

Read More

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், வெற்றிகரமான நடிகர் மற்றும் பாடகர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டு விளங்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இன்று (ஜூன் 13) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது அசாத்திய திறமையால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முத்திரை பதித்துள்ள அவரது இசை மற்றும் கலைப் பயணம் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு இதோ. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி.பிரகாஷ், சிறு வயதிலேயே இசைச் சூழலில் வளர்ந்தவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடலில் சிறுவனாகத் தனது குரலைப் பதிவு செய்தவர், பின்னர் ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களிலும் பாடினார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அந்நியன்’ படத்தில் பாடிய “காதல் யானை வருகிற ரெமோ” பாடல் இவருக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.  அதாவது, அந்நியன்  திரைப்படத்தில் இசைமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான “காதல் யானை” பாடலின் தொடக்கத்தில் வரும் “ஹை…

Read More

இந்தியாவில் எல் நினோ (El Nino) காலநிலை மாற்றம் தற்பொழுது நுழைந்துவிட்டதாகவும், வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அது மேலும் தீவிரமடைந்து வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம்  எச்சரித்துள்ளது. “தற்போது, ​​பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் நிலவுகின்றன, மேலும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இவை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ,”  பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த வெப்பமயமாதல் மாற்றம் காரணமாக, வரும் மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எல் நினோ தீவிரமடைவதன் நேரடி விளைவாக, நடப்பு பருவமழை பொழிவின் அளவு கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. போதிய மழை இல்லாததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக வற்றுவதற்கும், கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் பாதிக்கப்பட்டு, நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வறட்சி…

Read More

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, இன்று (ஜூன் 13) இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள  ஹெச்பிசிஏ (HPCA) மைதானத்தில் மதியம் 1:30 மணிக்குத் தொடங்குகிறது. சமீபத்தில் நடந்த ஒரே ஒரு போட்டி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், அதே உத்வேகத்துடன் ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்க தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டுள்ளது. மறுபுறம், டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்விக்கு ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்து பழிவாங்க ஆப்கானிஸ்தான் அணி வியூகங்களை வகுத்து வருவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக விலகியுள்ளார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அனுபவ வீரர் ரோஹித் சர்மா அணியில் நீடிப்பது பலம் சேர்க்கிறது. இளம் அதிரடி…

Read More

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதின. இலங்கைக்கு எதிரான இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டேனி வயட் ஹாட்ஜ் அபாரமாக விளையாடி 105 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். இதன்மூலம், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, 2023-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த 213 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையையும் இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 220 ரன்கள் என்ற…

Read More

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் ஜூன் 18-ம் தேதி வரை 5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்குப் புறப்படுகிறார். இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரை பிரான்ஸில் தங்கியிருக்கும் அவர், அதன் பின்னர் ஸ்லோவாக்கியா நாட்டிற்குச் சென்று முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். தொடர்ந்து ஜூன் 16-ம் தேதி மீண்டும் பிரான்ஸ் திரும்பும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் புகழ்பெற்ற G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டின் போது பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்து, இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் உலகளாவிய முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா G7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், இந்த சர்வதேச மாநாட்டில் இந்தியா மிக முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரான்ஸ் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜூன் 15 முதல் ஜூன் 17 வரை…

Read More

உலகளாவிய கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2026 ஃபிஃபா உலகக்கோப்பை திருவிழா, மெக்ஸிகோவில் பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுடன் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டங்கள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், மைதானத்தில் காணப்பட்ட காலி இருக்கைகளும், மெக்ஸிகோ நகர வீதிகளில் வெடித்த வன்முறையும் உலகக்கோப்பையின் முதல் நாளைக் கவலையளிக்கும் விதமாக மாற்றியுள்ளன. மெக்ஸிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில், மெக்ஸிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். ஆனால், குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடந்த தென்கொரியா மற்றும் செக்கியா (Czechia) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் நிலைமை தலைகீழாக இருந்தது.  இப்போட்டியில் தென்கொரியா 2-1 என வெற்றி பெற்றாலும், மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் காலியாகவே காட்சியளித்தன. 45,664 கொள்ளளவு கொண்ட இம்மாநிலத்தில் 44,958 பேர் வந்திருந்ததாக வர்ணனையாளர்கள் கூறினாலும், கேமராக்கள் காலி இருக்கைகளைக்…

Read More