Author: Editor web3

பிரேசிலில் நடைபெற்ற பங்கி ஜம்பிங் (Bungee Jumping) நிகழ்வில், பாதுகாப்பு உபகரணங்களை இணைக்காமல் இளம்பெண் ஒருவரைப் பாலத்திலிருந்து கீழே தள்ளிய பணியாளர்களின் கொடூர அலட்சியத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாவ் பாலோ மாநிலத்தின் லிமெயிராவில் உள்ள “ஸ்கெலட்டன் பிரிட்ஜ்” (Skeleton Bridge) பகுதியில் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. மரிய எட்வார்டா ரோட்ரிக்ஸ் டி பிரேட்டாஸ் (21) என்ற இளம்பெண், பங்கி ஜம்பிங் செய்வதற்காகப் பாலத்தின் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த இருவர் அவரைத் தளத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு கயிறு எதையும் கட்டாமல் கீழே தள்ளியுள்ளனர். சுமார் 130 அடி (40 மீட்டர்) உயரத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். https://x.com/RapidReport2025/status/2065862054552936513? சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில், அந்தப் பெண் கீழே விழுந்த பிறகு, அங்கிருந்தவர்கள் அவர் மீது கயிறு கட்டப்படவில்லை என்று அலறுவது பதிவாகியுள்ளது. பணியாளர்கள் பாதுகாப்பு கயிற்றைக் கட்ட…

Read More

“ஒரு துளி ரத்தம்… ஆனால், அது ஒரு உயிரின் துடிப்பு! உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு, இந்த உலகில் மறுபிறப்பு வழங்கும் அந்த அற்புதமான கொடைதான் ‘ரத்த தானம்’.” ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதியை, உலகம் முழுவதும் ‘உலக ரத்த தான தினமாக’ நாம் கடைபிடிக்கப்படுகிறது. ஏனென்றால், 1901ம் ஆண்டு ரத்த வகைப்பாட்டைக் கண்டறிந்து, மருத்துவ உலகிற்குப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கார்ல் லான்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) அவர்களின் பிறந்தநாளைக் கௌரவிக்கும் விதமாகவே இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவர் இரத்தக் குழு அமைப்பை (A, B, AB, O) கண்டுபிடித்தார். இது இரத்த தானம் மற்றும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இரத்தமாற்றம் துறையில் ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இந்தப் பங்களிப்புக்காக கார்ல் லேண்ட்ஸ்டெய்னருக்கு 1930 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டுக்கான கருப்பொருள்,  “One Drop of Humanity. Give Blood.…

Read More

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகள் சூடுபிடித்துள்ளன. இன்று நடைபெற்ற முக்கியமான இரண்டு லீக் ஆட்டங்களும் சமனில் முடிவடைந்தன. குரூப் சி பிரிவில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த பிரேசில் அணி, மொராக்கோ அணியை எதிர்கொண்டது. ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் உள்ள நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. மொராக்கோ அணியின் பலமான தற்காப்பு ஆட்டத்தை மீறி பிரேசில் அணி ஒரு கோல் அடித்தது. எனினும், மொராக்கோ அணியும் சளைக்காமல் பதிலுக்கு ஒரு கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. 100 நிமிடங்கள் நீடித்த ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்ததால், ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இரு அணிகளும்…

Read More

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின்  உச்சத்தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கு அடுத்த மாதம் ஜூலையில் டெஹ்ரானில் நடைபெறும் என ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. சுமார் ஆறு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் அஞ்சலி நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி பிரார்த்தனை மைதானத்தில் அலி காமெனிக்கான பிரியாவிடை மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். ஜூலை 6-ல் மாபெரும் இறுதி ஊர்வலம் டெஹ்ரானில் நடைபெறும். ஜூலை 7-ல் புனித நகரமான கோம் (Qom) நகரில் சிறப்பு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். ஜூலை 9 -ல் அலி காமெனியின் சொந்த ஊரான மஷாத்தில் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். இறுதிச்சடங்கு தாமதத்திற்கான காரணம் என்ன? முன்னதாக, இஸ்லாமிய…

Read More

மோட்டார் ரேசிங் உலகில் மிக உயரிய மற்றும் உலகப் புகழ்பெற்ற ’24 ஹவர்ஸ் ஆஃப் லெ மான்ஸ்’ (24 Hours of Le Mans)  கார் பந்தயத் தொடரில் பங்கேற்க தேர்வாகி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் ‘அஜித்குமார் ரேசிங்’ அணி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய அணி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் லெ மான்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘சர்க்யூட் டி லா சார்த்தே’ (Circuit de la Sarthe) ஓடுதளத்தில் இந்த பந்தயம் நடைபெறுகிறது. கார் பந்தய உலகிலேயே மிகவும் சவாலான, கடினமான எண்டூரன்ஸ் பந்தயமாக இது கருதப்படுகிறது. இந்த பந்தயம் இடைவிடாமல் தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெறும். இவ்வளவு நீண்ட நேரத்தில், எந்தவொரு காரும் தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது விபத்தோ இல்லாமல், மிக அதிக தூரத்தை கடக்கிறதோ, அந்த அணியே வெற்றியாளராக அறிவிக்கப்படும். வீரர்களின் வேகம் மட்டுமன்றி,…

Read More

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பாரம்பரிய நடனத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரான்ஸின் நைஸ்  நகரத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, தான் தங்கியிருந்த ‘ஹோட்டல் நெக்ரெஸ்கோ’ (Hotel Negresco) வந்தடைந்தபோது இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரைக் காண ஏராளமான இந்தியர்கள் அங்கு குழுமியிருந்தனர். கைகளில் மூவர்ணக் கொடிகளை ஏந்தியபடி “பாரத் மாதா கி ஜே”, “வந்தே மாதரம்” என கோஷங்களை எழுப்பி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கூடியிருந்த அனைவரையும் சிரித்த முகத்துடன் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கைகுலுக்கியும், செல்ஃபிக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார். வீட்டிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்தியர்களுடனான இந்த பிணைப்பு வலுவாகவே உள்ளது” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பிரதமரின் வருகையைச்…

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோகித் சர்மா, ஒருநாள்  கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை நேற்று படைத்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘அதிக வயதில் விளையாடிய வீரர்’ என்ற பெருமையை அவர் தற்போது பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்கிய போது இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். நேற்று களமிறங்கும் போது அவரது வயது 39 ஆண்டுகள் 79 நாள்கள் ஆகும். இதன் மூலம், இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் அதிக வயதில் ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் தனதாக்கிக் கொண்டார். இதற்கு முன்பு, இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் இந்த சாதனை முன்னாள் ஜாம்பவான் மோகிந்தர் அமர்நாத் வசம் இருந்தது. 37 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த அவரது இந்த சாதனையை, நேற்று ரோகித் சர்மா அதிகாரப்பூர்வமாகத் தட்டிப்பறித்துள்ளார். இந்திய ஆண்கள்…

Read More

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தர்மசாலாவில் நேற்று தொடங்கிய போட்டியில் தொடர் மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின்னர், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 102 ரன்கள் குவித்தார். இருந்தபோதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு சுருண்டது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கமே அதிரடியாக அமைந்தது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சுப்மன் கில், ஆப்கன் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை…

Read More

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய கடல் வழியாக விளங்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’  உடனடியாக திறக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பல வாரங்களாக நிலவி வந்த மோதலால் இந்த வழித்தடம் மூடப்பட்டு சர்வதேச கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானுடனான நமது உறவு முந்தைய காலங்களை விட இப்போது மிகவும் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. அவர்கள் இனி அணு ஆயுதங்களை விரும்பவில்லை, அதைப் பெறவும் மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப் பேசிய…

Read More

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டத்தில் இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இதுவே நடப்பு தொடரின் முதல் போட்டியாகும். எந்தவொரு உலகக்கோப்பை தொடரிலும் முதல் வெற்றி என்பது அணிக்கு பெரும் நம்பிக்கையைத் தரும் என்பதால், இந்த ஆட்டத்தில் வெற்றியுடன் கணக்கைத் தொடங்க இரு அணிகளும் முனைப்புடன் களம் காண உள்ளன. சமீபத்தில் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற முழு உத்வேகத்துடன் இந்திய மகளிர் அணி இன்று களம் காண்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக உள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தி பாகிஸ்தானை எளிதில் திணறடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எப்போதுமே ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதிய…

Read More