Author: Editor web3
போர் பதற்றங்கள் சற்று தணிந்துள்ள நிலையில் ஈரான் கால்பந்து அணி, 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் குரூப் ஜி பிரிவில் தனது முதல் ஆட்டத்தை நியூசிலாந்துக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் எதிர்கொள்கிறது. விசா சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தனது பயிற்சி முகாமை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றியிருந்த ஈரான் அணி, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தடைந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈரான் அணி அமெரிக்காவில் உள்ள போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. குரூப் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான், நியூசிலாந்துக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, ஜூன் 21 அன்று பெல்ஜியத்தையும், ஜூன் 26 அன்று எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளது. அணியின் கேப்டன் மெஹ்தி தரேமி மற்றும் பயிற்சியாளர் அமீர் கலினோயி ஆகியோர், அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு,…
ஃபிஃபா உலகக்கோப்பை 2026-ன் குரூப் எஃப் பிரிவில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணி எளிதாக வீழ்த்தியது. இந்த போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ‘ஸ்னிக்கோ’ (Snicko) போன்ற ஒரு அதிநவீன தொழில்நுட்பம், ஸ்வீடன் வீரர் மத்தியாஸ் ஸ்வன்பெர்க்கின் (Mattias Svanberg) கோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகக்கோப்பையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இந்த மாஸ் வெற்றியின் மூலம் ஸ்வீடன் அணி தனது பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டியின் 84-வது நிமிடத்தில் ஒரு சுவாரசியமான திருப்பம் ஏற்பட்டது. ஸ்வீடன் வீரர் அயாரி கொடுத்த பாஸை, மாற்று வீரராக களம் புகுந்த மத்தியாஸ் ஸ்வன்பெர்க், துனிசிய தற்காப்பு வீரர்களை ஏமாற்றி கோலாக மாற்றினார். ஆனால், அவர் ‘ஆஃப்சைடு’ பகுதியில் இருந்ததாகக் கூறி நடுவர் அந்த கோலை மறுத்தார். இதையடுத்து, நடுவர்கள் நீண்ட வீடியோ சோதனையை (VAR) மேற்கொண்டனர். அப்போது கிரிக்கெட்டில் பேட்டில் பந்து பட்டதா…
அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்புரையாற்றத் தொடங்கிய போது, நூற்றுக்கணக்கான மாணவர்கள் திடீரென வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்டான்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சுந்தர் பிச்சை மேடையில் பேசத் தொடங்கியதும், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர். அவர்கள் கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி, “பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளிப்போம்” என முழக்கமிட்டனர். https://x.com/RT_com/status/2066351924522184843? ‘பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் அமைப்பு மற்றும் ‘பாகுபாட்டிற்கு தொழில்நுட்பம் இல்லை’ ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘புராஜெக்ட் நிம்பஸ்’ (Project Nimbus) என்ற கிளவுட்-கம்ப்யூட்டிங் மற்றும்…
இந்திய ராணுவம் தனது சீருடை விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்து மரபுகள் மற்றும் அடையாளங்களை முழுமையாக அகற்றி, இந்திய கலாச்சாரம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் “ராணுவ சீருடைகள்-2026” (Army Uniforms-2026) என்ற புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கையேடு, மொத்தம் 174 பக்கங்களைக் கொண்டுள்ளது. இது குறித்து ராணுவத்தின் அட்ஜூட்டன்ட் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் வி.பி.எஸ். கௌஷிக் கூறுகையில், “பழைய காலனித்துவ கால நடைமுறைகள், ஆபரணங்கள் மற்றும் வார்த்தைகளை படிப்படியாக நீக்கி, தற்கால இந்திய மரபுகளுக்கு ஏற்ப ராணுவ சீருடை விதிகளை மாற்றுவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கை இது” என்று தெரிவித்துள்ளார். ராணுவ அதிகாரிகள் முறையான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூடிய கழுத்து உடைய ‘பண்டி’ ஜாக்கெட்டுகளை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் சோபர் (Sober) நிற சேலைகள் அல்லது குர்தா-சல்வாருடன், கணுக்கால்…
காலங்கள் மாறலாம்… தலைமுறைகள் கடக்கலாம்… ஆனால், ஒரு சில பெயர்கள் மட்டும்தான் சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக செதுக்கப்படும். 2024 யூரோ தொடரோடு சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார். ‘அவர் கதை முடிந்தது’ என்றார்கள் பலர். ஆனால், சிங்கம் எப்போதும் நிரந்தரமாக ஓய்வெடுப்பதில்லை! இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஜெர்மனி ஜெர்சியில் வலம் வந்து, உலகக் கோப்பை வரலாற்றையே மாற்றி எழுதியிருக்கிறார் மானுவல் நோயர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனின் NRG மைதானத்தில் குராசாவ் அணிக்கு எதிரான போட்டியில் , 40 வயதான நோயர், ஜெர்மனியின் தொடக்க லெவனில் களமிறங்கிய அந்த நிமிடம்… உலகமே எழுந்து நின்று கைதட்டியது. 2010, 2014, 2018, 2022… இப்போது 2026 என முழுமையாக ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் களம் கண்ட உலகின் இரண்டாவது கோல்கீப்பர் என்ற அசாத்திய சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் நோயர். மெக்சிகோவின் ஆண்டோனியோ கபர்ஜாலுக்குப் பிறகு, சரியாக 60 ஆண்டுகள் கழித்து…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றி வரும் வேளையில், சென்னையைச் சேர்ந்த 25 வயது இல்லத்தரசி ஒருவர், தனது அன்றாட வீட்டு வேலைகளை வீடியோவாகப் பதிவு செய்து AI நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் கைநிறைய சம்பாதித்து வருகிறார். இந்த விசித்திரமான பகுதிநேர வேலை இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மனிதர்களைப் போலவே செயல்படும் ‘ஹியூமனாய்டு’ (Humanoid) ரோபோக்களை உருவாக்குவதற்காக AI நிறுவனங்கள் மனிதர்களின் நிஜ உலகத் தரவுகளை தேடி வருகின்றன. இதனைப் பயன்படுத்திச் சென்னையைச் சேர்ந்த நாகிரெட்டி ஸ்ரீரம்யாசந்திரா என்ற 25 வயதுடைய இல்லத்தரசி ஒரு புதிய வருமான வழியைக் கண்டறிந்துள்ளார். https://x.com/VaibhavSisinty/status/2065387149915299939? இவர் தனது தலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை மாட்டிக்கொண்டு, காலையில் காபி போடுவது, பழங்களை நறுக்குவது, துணிகளை மடிப்பது போன்ற தனது அன்றாட வீட்டு வேலைகளை வீடியோவாகப் பதிவு செய்கிறார். ஒரு நாளைக்குச் சுமார் 90-க்கும் மேற்பட்ட சிறிய வீடியோக்களைப் பதிவு செய்யும் இவருக்கு, இந்த வேலைக்காக மணிக்கு…
கேரளாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத மாதாந்திர பூஜைகளுக்காக நேற்று மாலை திருநடை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதை அடுத்து, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனைத் தரிசித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ், தனது மனைவி சௌமியா மற்றும் தங்களது பேரக்குழந்தைகளுடன் சபரிமலைக்கு வருகை தந்தார். இன்று அதிகாலையில் பம்பை நதிக்கரையில் இருந்து பாரம்பரிய முறைப்படி படியேறி, சந்நிதானம் நோக்கி மலையேறினார். பின்னர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து, நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடித்து அகற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மொத்தம் 337 கட்டடங்கள் முற்றிலும் பாதுகாப்பற்றவை என மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பாதுகாப்பற்றவை எனப் பட்டியலிடப்பட்டவைகளில் 130 கட்டடங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானவை ஆகும். இதில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 105 கட்டடங்கள் உடனடியாக இடித்து அகற்றப்பட வேண்டியவையாகக் குறிக்கப்பட்டுள்ளன. இதேபோல், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் உள்ள 128 தனியார் கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 69 கட்டடங்கள் இடிக்கத்தக்க நிலையில் உள்ளன. அரசின் இதர துறைகளுக்குச் சொந்தமான 79 கட்டடங்களும் பாதுகாப்பற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.…
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள் பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் மற்றும் 1.20 லட்சம் சிகரெட்டுகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டாரஸ் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடல் எல்லையைப் பயன்படுத்தி இலங்கைக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பீடி இலைகள், சிகரெட்டுகள், மருந்து பொருட்கள், வலி நிவாரண மாத்திரைகள், மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பட்டாசுகள் மற்றும் வாசனை சோப்புகள் எனப் பல பொருட்கள் படகுகள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கடற்பகுதியில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு கடத்தலை முறியடித்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை ஓரமாக படகு மூலம் இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கடலோர காவல்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பாறைகளை பிடித்து உயிருக்கு போராடிய மூதாட்டியை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அதிரடியாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று ஆற்று வெள்ளத்தின் சுழலில் மூதாட்டி ஒருவர் எதிர்பாராதவிதமாக சிக்கி, தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப் பார்த்த கரையில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துள்ளனர். தண்ணீரில் அடித்து வரப்பட்ட அந்த மூதாட்டி, நல்வாய்ப்பாக ஆற்றின் மையப்பகுதியில் இருந்த பெரிய பாறைகளுக்கு இடையே சாய்ந்து நின்றார். வெள்ளத்தின் வேகம் அவரை இழுத்துச் செல்ல முயன்றபோதிலும், பாறைகளைத் தன் கைகளால் பலமாகப் பற்றிக்கொண்டு, காப்பாற்றுமாறு சத்தமிட்டு குரல் எழுப்பியுள்ளார். இதனைப் பார்த்த மக்கள் உடனடியாக பாகலூர் காவல் நிலையத்திற்கும், ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கும் அவசரத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குப் பாய்ந்து வந்த மீட்புக்…