Author: Editor web3

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய வியூகத்தைக் கையாளத் தயாராகி வருகின்றன. வழக்கமாகப் பெரிய திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுவரும் இடதுசாரிகள், இந்த முறை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் செயல்படும் எல்.டி.எஃப் (LDF) கூட்டணியைப் போல, தமிழ்நாட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)), மற்றும் சிபிஐ (எம்.எல்) விடுதலை ஆகிய மூன்று முக்கிய இடதுசாரி அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் பிற கட்சிகளின் கூட்டணியில் இருந்ததால், தங்களின் தனித்துவத்தையும் மக்கள் செல்வாக்கையும் வெளிப்படுத்த இடதுசாரிகள் தவறிவிட்டதாகக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களின் உண்மையான அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில், இந்த இடதுசாரி…

Read More

கேன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குக் காரணமான லியோனல் மெஸ்ஸியின் ஆட்டம், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் செய்த தியாகங்களும், பயணங்களும் மெஸ்ஸியின் மீதான அவர்களின் எல்லையற்ற அன்பைப் பறைசாற்றுகின்றன. இந்த ஆட்டத்தைக் காண்பதற்காகத் தென் அமெரிக்காவிலிருந்து மூன்று ரசிகர்கள் சுமார் 17,700 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்து கேன்சாஸ் சிட்டியை வந்தடைந்தனர். கையில் டிக்கெட் இல்லாவிட்டாலும், மெஸ்ஸியைக் காண வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் அவர்கள் மேற்கொண்ட இந்த பயணம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அவர்களின் ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த உள்ளூர் மக்கள், அவர்களுக்குப் போட்டிக்குச் செல்ல வழிவகை செய்துகொடுத்தது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. டேனியல் ஒடெரோ என்பவர் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிரமான மற்றும் மிகவும்…

Read More

பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர், அண்மைக்காலமாக கடல்சார் வணிகப் பாதைகளில் ஏற்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது வலுவான கருத்துகளைப் பதிவு செய்தார். https://x.com/MEAIndia/status/2066903017266331905? ஓமன் வளைகுடா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க ராணுவத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், “கடல்சார் வணிகப் பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கடல் பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் கடமைகளைச் செய்ய அனைத்து நாடுகளும் உறுதி அளிக்க வேண்டும்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மோதல்களுக்கான தீர்வு போர் அல்ல, மாறாக பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மட்டுமே என்று அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். https://x.com/narendramodi/status/2066915355910660353? தற்போதைய…

Read More

தமிழக சட்டமன்றத்தில் நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது. இச்சூழலில், சம்பந்தப்பட்ட நான்கு எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலகாமல் பதவியை மட்டும் ராஜினாமா செய்துவிட்டு, உடனே தவெகவில் இணைந்துள்ளனர். குதிரை பேரம் நடந்திருக்க வாய்ப்புள்ள நிலையில், ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உரிய விசாரணை நடத்தவில்லை,” என்று வாதிட்டனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “ராஜினாமா…

Read More

கால்பந்து உலகின் ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி, 2026 பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியதன் மூலம் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.   கால்பந்து வரலாற்றில் 6 உலகக் கோப்பைகளில் விளையாடிய முதல் வீரர் என்ற தனித்துவமான பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். முன்னதாக, உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் (27) விளையாடிய வீரர் என்ற சாதனையைத் தன் வசம் வைத்திருந்த மெஸ்ஸி, தற்போது இந்த 6-வது உலகக் கோப்பை பங்கேற்பின் மூலம் தனது சாதனையை மேலும் உயர்த்தியுள்ளார். மேலும், இந்தத் தொடரின் தொடக்க ஆட்டம் மெஸ்ஸியின் 200-வது சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கிய மெஸ்ஸி, தற்போது 38 வயதிலும் தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையில், மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக 5 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்று காங்கோ ஜனநாயகக் குடியரசு…

Read More

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வரும்  நிலையில், இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைவது தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்ற, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மீதுள்ள நம்பகத்தன்மையின்மையா? அல்லது அவர்களது தொடர்பை துண்டித்து விட்டு ஒன்றிய அரசிடம் தற்போது வைத்திருக்கின்ற மறைமுக உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுவதற்காகவா? அதிமுகவின் 25 MLA-க்கள் இந்த அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக அவர்களில் 8 பேர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்ததாக நம்பியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? MLA பதவியை ராஜினாமா செய்து கொண்டு இருப்பது அமைச்சர் பதவிக்காகவா? எம்.எல்.ஏ பதவியை…

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத்  சாமி தரிசனம் செய்தார். உலகப் பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலத்திற்கு வருகை தந்த அனிருத், முதலில் சம்பந்த விநாயகரை மனமுருகி வழிப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதிகளுக்குச் சென்று சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். வைகுந்த வாயில் பகுதியில் தீபமாலை தரிசனம் செய்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான மரியாதை செய்யப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும், அவரைச் சூழ்ந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ரசிகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, அனிருத்தும் புன்னகையோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Read More

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, பத்தடி நீள மலைப்பாம்பு ஒன்று டூவீலர் மீது ஏறி தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேத்துவண்டை கிராமத்தின் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே, விளைநிலங்களை விட்டு வெளியேறிய பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அப்போது, கூட்டத்தைக் கண்டு மிரண்ட அந்தப் பாம்பு, அருகில் நின்றிருந்த டூவீலரின் சீட் மீது சரசரவென ஏறி படுத்துக்கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினரும், வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினரும், வாகனத்தில் இருந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து மீட்டனர். பின்னர் பிடிபட்ட அந்தப் பாம்பு பத்திரமாக அடர்ந்த காப்புக் காட்டுப் பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. இந்த திக் திக் சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Read More

திருப்பூரின் மையப் பகுதியான பூச்சக்காடு மாஸ் பேக்கரி சந்திப்பு அருகே, கஞ்சா போதையில் பத்துப்பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரையொருவர் நடுரோட்டில் பயங்கரமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு ரயில் மூலம் திருப்பூர் திரும்பும்போது, ரகசியமாக கஞ்சா, குட்கா மற்றும் போதை சாக்லேட்டுகளைக் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றை அவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பிறருக்கும் விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்க திருப்பூர் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில்வழி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பூச்சக்காடு போன்ற உட்புறப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணி போதிய அளவில் இல்லை என சமூக…

Read More

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய திடீர் தாக்குதலுடன் தொடங்கிய போர், ஜூன் 15 அன்று (அதாவது இன்று) எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையின் மூலம் 107 நாட்களுக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக உலகையே உலுக்கிய இந்தப் போரில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளின் தொகுப்பு இதோ. இந்தப் போரில் மிகக் கொடூரமான பாதிப்பைச் சந்தித்தது அப்பாவிப் பொதுமக்கள் தான். போரின் தொடக்கத்திலேயே ஹார்முஸ்கான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 175 பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். ஈரானிய ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின்படி, இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் மற்றும் 1,508 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போரின் கோரத்தாண்டவத்தால் ஈரானுக்குள் மட்டும் சுமார் 39 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக…

Read More