Author: Editor web3

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்திடம் தொடரை இழந்ததன் காரணமாக தனது முதலிடத்தை இழந்திருந்த இந்திய அணி, தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நடப்பு டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. குறிப்பாக, இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் தரவரிசையில் முதலிடத்திற்கான தேவையான புள்ளிளைப் பெற்றுள்ளது. அதாவது, இதுவரை 60 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 16,088 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரின் வெற்றிகரமான நிறைவை எட்டுகின்ற வகையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரைக்…

Read More

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்து ஆட்சியர் பிரதீப் குமார் உடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர், சமயபுரம் கோவிலில் மணியகாரராகப் பணியாற்றியவர் அதிகளவில் சொத்து சேர்த்த புகாரில் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் எலி நடமாட்டம் குறித்த புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள உட்கட்டமைப்புப் பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பழனி நிலம் தொடர்பான சர்ச்சை குறித்துப் பேசிய அமைச்சர், “எதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றுகூடத் தெரியாமல் சிலர் இப்போது பழனி நிலத்தை வைத்து அரசியல்…

Read More

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமனின் நினைவாக தேசிய நெல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க, ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் உழவர் சந்தையிலிருந்து மாட்டு வண்டி ஊர்வலமாகவும் மயிலாட்டத்துடனும் உற்சாகமாகப் பேரணியாக வந்தனர். இந்த விழாவில் மாப்பிள்ளைச்சம்பா, கருப்புகாவணி, காட்டுயானம், தூயமல்லி, கருங்குருவை மற்றும் சீரகசம்பா உள்ளிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட 174 பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி இடம்பெற்றது. இதனை வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் ரிப்பனுடன் திறந்து வைக்க, வெளிமாவட்ட விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மறைந்த நெல் ஜெயராமன் மற்றும் நம்மாழ்வார் வழியில் அரிய வகை பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்துப் பாதுகாக்கும் நோக்கில் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல்…

Read More

1997-ல் மாணவர் போராட்டத்தில் காவல்துறையின் தடியடியால் ரத்தக் காயங்களுடன் போராடிய தர்மேந்திர பிரதான், இன்று அதே வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராடும் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சராகக் கேள்விகளை எதிர்கொண்டு வருவது மிகப்பெரிய வரலாற்று முரணாக மாறியுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, காவல்துறையின் தடியடிக்கு ஆளானவர்களில் ஒருவராக தர்மேந்திர பிரதான் இருந்தார். 1997-ல், ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராக இருந்த அவர், ஒடிசாவில் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாநிலச் செயலகத்திற்கு வெளியே 1,500 மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். அப்போது காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டு, எலும்பு முறிவுகளுக்கு ஆளானார். காயங்களுடனும் ரத்தக் கறையுடனும் அவர் இருந்த புகைப்படம், மாணவர் போராட்டத்தின் அடையாளமாக மாறியது. இன்று, தேசிய அளவிலான தேர்வில் வினாத்தாள் கசிவு என்ற அதே போன்றதொரு விவகாரத்திற்காக, அவரது ராஜினாமாவை வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தில்…

Read More

மாணவர்கள் போராட்டத்தை முடக்குவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மெட்ரோ நிலையங்கள், சாலைகள், கடைகள், இணையம் மற்றும் உணவு கிடைப்பதை அரசு முடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மெட்ரோவை மூடுங்கள், சாலைகளை மூடுங்கள், கடைகளை மூடுங்கள், இன்டர்நெட்டை மூடுங்கள், உணவைக்கூடத் தடுத்து நிறுத்துங்கள். உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீது இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்; ஆனால், மோடி அவர்களே, உங்களால் தடுத்து நிறுத்த முடியாத ஒரே விஷயம் வினாத்தாள் கசிவு மட்டும்தான்” என்று விமர்சித்துள்ளார். இதற்கிடையில், நீட் வினாத்தாள் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் போராடும் சி.ஜே.பி அமைப்புக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) மாலையில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என்றும், அது குறித்து அரசாங்கம் சம்மதிக்கவில்லை என்றால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில்…

Read More

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ, 24 மணி நேரத்தில் 30.3 கோடி (303 மில்லியன்) பார்வைகளைக் கடந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்தச் சாதனை, இதற்கு முந்தைய 30 கோடி பார்வைகள் என்ற சாதனையை முறியடித்துள்ளது; இதன் மூலம், ஒரே நாளில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற இன்ஸ்டாகிராம் ரீல் என்ற பெருமையை பிரதமர் மோடியின் இந்த வீடியோ பெற்றுள்ளது. நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு பிரதமர் மோடி இந்த வீடியோவை வெளியிட்டார். வினாத்தாள் கசிவைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் மற்றும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது குறித்த மத்திய அரசின் நடவடிக்கைகளை விளக்கும் இந்த ரீல்ஸ் வீடியோ, ஒரே இரவில் 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும், 1.5 மில்லியன் கமெண்ட்களையும் பெற்றதுடன், ஒரு மில்லியன் புதிய ஃபாலோயர்களை ஈர்த்துள்ளது. குறிப்பிடத்தக்க…

Read More

திருவள்ளூர் அருகே குறைந்த மின்னழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாத மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து, நடிகர் வடிவேலின் புகைப்படத்துடன் டிரான்ஸ்பார்மரில் வைக்கப்பட்ட நூதன பிளக்ஸ் பேனர் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் தணிகாசலம் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களாகக் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனை நிலவி வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இதனால் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த டிவி, பிரிட்ஜ், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடம்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகப் பதிலளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவள்ளூர் – பேரம்பாக்கம் சாலையில் உள்ள கடம்பத்தூர் மின் டிரான்ஸ்பார்மரில் பிளக்ஸ் பேனர் ஒன்றைக் கட்டி…

Read More

கோவையில், சாமியார் வேடமணிந்து தொழிலதிபர்களை மிரட்டியும், அலுவலகங்களில் புகுந்து பணத்தைத் திருடியும் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மர்மக் கும்பலை பொதுமக்களால் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடமணிந்து உலா வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மர்மக் கும்பல் ஒன்று, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதையும், நிறுவனங்களில் புகுந்து திருடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தது. வெங்கிட்டாபுரம் பகுதியில் இயங்கிவரும் ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் சாமியார் போல் நுழைந்த அந்த நபர்கள், அலுவலகத்தில் ஆள் இல்லாத நேரத்தைப் பார்த்து மேஜையில் இருந்த ஐயாயிரம் ரூபாய்  பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடினர். வேலை முடிந்து அலுவலகத்திற்கு வந்து பார்த்த உரிமையாளர் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது சாமியார் உடையில் வந்தவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்ததும், உடனடியாக அந்த வீடியோ ஆதாரத்தை உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து அனைவரையும் உஷார்படுத்தியதுடன் நீலாம்பூர் காவல் நிலையத்திலும்…

Read More

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக மதுபானங்களை விற்றால், ரூ.10,000 வரை அபராதம் மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் புகார்கள் அல்லது திடீர் ஆய்வுகளின் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டால், வசூலிக்கும் கூடுதல் தொகைக்கேற்ப அபராதம் நிர்ணயிக்கப்படும். அதன்படி, கூடுதலாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தலா ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 வரையிலும், ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் வசூல் செய்யப்பட்டால் நேரடியாக ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையில் 60 சதவீதத்தை விற்பனையாளரும், 40 சதவீதத்தை அன்றைய தினத்திற்கான மேற்பார்வையாளரும் கட்டாயம் செலுத்த வேண்டும்; மேற்பார்வையாளர் இல்லாத பட்சத்தில் முழுத் தொகையையும் விற்பனையாளரே செலுத்த நேரிடும். மேலும், கூடுதல் விலைக்கு…

Read More

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்ட இடத்தைச் சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள முக அங்கீகார அமைப்பின் (FRS) மூலம், குற்றப் பின்னணி கொண்ட 2,500-க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்ட இடத்தைச் சுற்றியுள்ள முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நான்கு FRS கருவிகள் நிறுவப்பட்டு, அவை டெல்லி காவல் துறையின் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. “இந்தத் தொழில்நுட்பம் இதுவரை குற்றப் பின்னணி கொண்ட 2,500-க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் காண உதவியுள்ளது. இது ஒரு வலுவான தடுப்பு நடவடிக்கையாகச் செயல்படுவதோடு, போராட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்க முயலும் நபர்கள் மீது தீவிரமாகக் கண்காணிக்கவும் உதவுகிறது” என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. மூத்த காவல் துறை அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, தொலைவிலிருந்தும் முகப் படங்களைப் படம்பிடிக்கும் திறன் கொண்ட உயர்-தெளிவுத்திறன் (high-resolution) கொண்ட கேமராக்களை இந்த FRS அமைப்பு கொண்டுள்ளது. “ஒரு முகம் படம்பிடிக்கப்பட்டதும்,…

Read More