Author: Editor web3
ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ஆக்ஸியோஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டார். ஈரான் நாட்டுடன் தற்போது மிக தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் விரிவான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஓமன் நாட்டின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கத்தார், பாகிஸ்தான், எகிப்து நாடுகளுடன் டிரம்ப்பின் சிறப்புத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தைகளுக்கு எவ்வளவு காலம் அவகாசம் அளிக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அதிக நேரமில்லை, பேச்சுவார்த்தை விரைவில் சுமுகமாக முடிய வேண்டும் அல்லது முற்றிலும் முறிய வேண்டும் என்று கூறி, ராஜதந்திரத்திற்கு குறைந்த அளவே…
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரப் போராட்டங்களை அடுத்து, மத்தியக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தபோது காங்கிரஸாரை விமர்சித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தின் நடைபாதையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷை சந்தித்துப் பேசியபோது, அவரது பதவி விலகல் குறித்து ஜெய்ராம் ரமேஷ் “இதுபோன்று நடப்பது வழக்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான், “எதுவும் நடக்கவில்லை. நான் ஒரு வீதிச் சண்டைக்காரன், ஏசி அறையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தும் போராளி அல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னதாக, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைக் கருத்தில்கொண்டு, தன் மீது எந்தத் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையிலும் தாமாக முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பதவியிலிருந்து விலகிய போதிலும், தன் அரசியல் மீதான நம்பிக்கையும் உறுதியும் குறையவில்லை…
இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வி முறை மீது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கில், மத்திய அரசு மக்களவையில் புதிய ‘கடும் தேர்வுத் தாள் கசிவு (திருத்த) மசோதா – 2026’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இதில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் மற்றும் துரித நீதி வழங்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்: 2024 சட்டத்தின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருந்த சிறைத்தண்டனை, புதிய மசோதாவில் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.10 லட்சமாக இருந்த அதிகபட்ச அபராதம், தற்போது அதிரடியாக ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வினாத்தாள் கசிவு வழக்குகள் மீதான விசாரணைகள், நியமிக்கப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்பால் கையாளப்பட்டன. புதிய மசோதாவானது, வினாத்தாள் கசிவு வழக்குகள் மற்றும் தேர்வு தொடர்பான முறைகேடுகளை…
பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய ராணுவத் தாக்குதல்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை திடீரெனக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம் என்ற உடனடி அச்சம் தணிந்துள்ளதால், கடந்த வாரம் இரண்டு மாத உச்சத்தை எட்டியிருந்த விலையில் இருந்து வர்த்தகர்கள் லாபத்தை ஈட்டத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடங்கியவுடன் 4.9 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 92.02 டாலராகக் குறைந்தது. வெள்ளிக்கிழமையன்று இதன் விலை 3.9 சதவீதம் சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், மத்திய கிழக்கின் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 102 டாலரைக் கடந்து மே மாதத்திற்குப் பிறகு இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தது. மத்திய கிழக்கில் நிலவி வரும் ராணுவ மோதல்களால் இந்த மாதம் முழுவதும் கச்சா எண்ணெய்…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் அமைப்பு ரீதியிலான 85 மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றுவது தொடர்பாகவும் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதற்கிடையே, கட்சியில் தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவரும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகளின் பதவிகளைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்தவும், எதிர்ப்புகளைச் சமாளிக்கவும் அதிருப்தியாளர்களின் பதவிகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை முடித்த பின்பு, வரும் ஆகஸ்ட் மாதத்தில் அதிமுக செயற்குழுவைக் கூட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கமான காய்கறி மற்றும் பாரம்பரியப் பயிர்கள் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால், தற்போது விவசாயிகள் அரபு நாடுகளைச் சேர்ந்த பேரிச்சை சாகுபடி மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகிலுள்ள தவளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், முன்பு தக்காளி, நெல், வாழை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்த நிலையில், எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் நண்பரின் ஆலோசனையைப் பெற்று அரபு நாட்டிலிருந்து பேரிச்சை செடிகளை வாங்கி தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்தார். மூன்றாவது ஆண்டில் இருந்து அறுவடை செய்யப்பட்டு வரும் இந்தப் பேரிச்சை மரங்களில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொத்து கொத்தாக விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு குலையிலும் 10 முதல் 20 கிலோ வரை பழங்கள் காய்த்துள்ளன. தற்போது பழங்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், பல்வேறு இடங்களிலிருந்து வரும் வியாபாரிகள் நேரில் வந்து…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், அரசு அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அங்குள்ள ஒரு தகர செட்டில் வழக்கம்போல் அதிக சப்தம் எழுப்பும் காகித வெடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், குடோன் உரிமையாளர் ராம்பிரகாஷ் (32), பாண்டிதுறை (35), இன்னாசிமுத்து (42), அவரது சகோதரர் ஐயப்பராஜா (38 ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குடோன் உரிமையாளரின் அண்ணன் ராமச்சந்திரன் (40) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் இந்த கோர விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதுடன்,…
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டியின் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையைத் தூக்கி (ஸ்நாட்ச் 126 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 160 கிலோ) இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைச் சேர்த்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தனது முதல் முயற்சியிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் கோவில்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயதான ராஜா முத்துப்பாண்டி, தனது கடுமையான உழைப்பால் பளுதூக்குதல் துறையில் உயர்ந்துள்ளார். இளமைப் பருவத்திலிருந்தே பளுதூக்குதலில் தீவிர ஆர்வம் செலுத்தி வந்த இவர், உள்ளூர் அளவில் கடின பயிற்சி மேற்கொண்டு படிப்படியாக முன்னேறினார். தற்போது இவர் இந்திய ரயில்வே துறையில் விளையாட்டு வீரராகப் பணிபுரிந்து வருகிறார். உள்நாட்டுப் போட்டிகளில்…
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பளுதூக்குதல் வீரர்களின் சிறப்பான ஆட்டம் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில், தமிழ்நாட்டின் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பளுதூக்குதலில் இருந்து நேற்று மட்டுமே இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெற்றியும் இணைந்தது. 26 வயதான இவர், ஸ்நாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் தூக்கி, ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மலேசியாவைச் சேர்ந்த அஸ்னில் பின் பிடின் முகம்மது, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாதனையுடன் (299 கிலோ) தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கோல்டு கோஸ்ட் 2018 மற்றும் பர்மிங்காம் 2022-க்குப் பிறகு, அவர் வெல்லும் மூன்றாவது தொடர்ச்சியான தங்கப் பதக்கம் இதுவாகும். ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெள்ளிப் பதக்க…
கருங்கடல் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள வணிகக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியக் குடிமக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ரஷ்ய கடற்பரப்பு மற்றும் கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருங்கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் நிலவும் மோதல் சூழல் காரணமாகப் பாதுகாப்பு நிலை மிகவும் நிலையற்றதாக உள்ளதாகவும், அப்பகுதியில் இயங்கும் கப்பல்கள் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களின் தீவிர அபாயங்களை எதிர்கொள்வதாகவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது. மோதல் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் கப்பல்களில் வேலை செய்ய விரும்புபவர்கள், தங்களது பணிகளை ஏற்கும் முன் தற்போதைய பாதுகாப்பு அபாயங்களை முறையாக மதிப்பிட வேண்டும் என்றும், கப்பலின் வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களைப் பெற வேண்டும் என்றும்…