Author: Editor web3

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று அதிவேகமாகப் பரவி வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகளுக்கு இந்தத் தொற்று பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனைகள் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சொந்த வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் இளம் தலைமுறையினரிடம் நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் தாக்கம், துரிதமாக மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் எச்.ஐ.வி. நோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை இளைஞர்கள் மத்தியில் இந்நோய் பரவ வழிவகுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, சில குறிப்பிட்ட கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களிடையே இந்தத் தொற்றின் தாக்கம் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து…

Read More

பொருளாதார மந்தநிலை மற்றும் ஆசியச் சந்தைகளில் குறிப்பாகச் சீன பிராண்டுகளின் கடுமையான போட்டி காரணமாக, முன்னணி ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) தனது செலவினங்களைக் பெருமளவு குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் உள்ள தனது அலுவலகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் போவதாக அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. மின் வாகனத் தயாரிப்புச் செலவுகள் தாறுமாறாக உயர்ந்து வருவதுடன், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிகளும் ஆட்டோமொபைல் துறைக்குச் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. இதற்கிடையில், சீனச் சந்தையில் உள்ளூர் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்ததால் பிஎம்டபிள்யூ கார்களின் விற்பனையும் லாபமும் சரிவைக் கண்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்கவும் நிறுவனத்தின் நிதிச் சுமையைக் குறைக்கவும் இந்த ஆள்தேவைக் குறைப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தொழிற்சாலைகளில் உற்பத்திப் பணிகளில் நேரடியாக ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்தப் பணிநீக்கம்…

Read More

மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே? என்று தவெக கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல. ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே. யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது. மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும்…

Read More

தமிழகத்திலுள்ள அனைத்துத் திருக்கோவில்களிலும் முறைகேடுகளைத் தடுத்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் புதிய மற்றும் பொதுவான டெண்டர் முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோவில்களில் உள்ள பூக்கடை, பழக்கடை, முடிகாணிக்கை செலுத்துமிடம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் போன்ற  டெண்டர்களில் ஒரே நபர் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நடைமுறைகளை மாற்றியமைக்க இந்த புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ஆன்லைன் முறையின்படி, டெண்டருக்கான அனைத்துப் படிவங்களும் ஒரே மாதிரியானதாக வடிவமைக்கப்பட்டு, முழுமையாக இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படும். முன்பு குறைந்த தொகையைக் கொட்டேஷனாக தருபவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்ட விதியை மாற்றி, கொட்டேஷன்கள் பெறப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதன்பின் மிகக் குறைந்த விலையைக் கோருபவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ரீ-பிட் மீட்டிங் (Pre-bid…

Read More

புதுச்சேரி வம்புப்பட்டு ஏரிப் பகுதியில் உணவு தேடி வந்த வெளிநாட்டுப் பறவையான அரிவாள் மூக்கன், காலில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் பறக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளது. அந்தவழியாகச் சென்ற சில உள்ளூர் இளைஞர்கள் இதைக் கவனித்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பறவையைப் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அதற்கு முதற்கட்டமாகத் தண்ணீர் கொடுத்துப் பாதுகாத்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள், அந்த அரிய வகை பறவையை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். காயமடைந்த பறவைக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், முழுமையாகக் குணம் அடைந்தவுடன் அது மீண்டும் அதன் இயற்கை வாழிடத்திலேயே சுதந்திரமாக விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த வெளிநாட்டுப் பறவையை காப்பாற்றிய இந்த இளைஞர்களின் மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புத்தூர் ஊராட்சி மும்மாட்சி ரெட்டிபட்டி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவரது மனைவி பாப்பம்மாள் (80). இவர்களுக்கு மூன்று மகன்கள்,  மூன்று மகள் உள்ளன. இவர்களுக்கு சொந்தமாக சுமார் 13 ஏக்கர் விவசாயம் தோட்டம் உள்ளது. இந்தநிலையில், இவர்களுடன் மகன் ராஜசேகரும், கணவரை இழந்த மூத்த மகள் மஞ்சுளாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று நச்சலூருக்குச் சென்றுவிட்டு ராஜசேகர் வீடு திரும்பியபோது, தாயும் சகோதரியும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பாப்பம்மாளை கத்தியால் குத்தியுள்ளனர்; அதனைத் தடுத்த மகள் மஞ்சுளாவிற்கும் சரமாரியாகக் கத்திக்குத்து விழுந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பாப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மஞ்சுளா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கரூர் எஸ்பி ஹரிஹிரன்…

Read More

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கயல்விழி என்ற திருநங்கையும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி திருச்செங்கோடு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தங்களது வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தி வந்த இவர்களைப் பிரிக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குச் சென்ற பிரவீன்ராஜை, அவரது பெற்றோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் பலவந்தமாகச் சேர்த்து அடைத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு பல்வேறு சிரமங்களைச் சந்தித்த அவர், கடந்த மே மாதம் அங்கிருந்து வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் பிரவீன்ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்…

Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருவதால் பொதுமக்களின் நிம்மதி கேள்விக் குறியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு இளைஞர் வீடுகள் மற்றும் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரும்புப் பொருட்களைத் துணிச்சலாகத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தொடரும் இந்த திருட்டுச் சம்பவங்களால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், சிசிடிவி காட்சிகளுடன் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரும்புப் பொருட்களைத் திருடும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அரங்கேறிய கார் குண்டுவெடிப்பு வழக்கில், நிதி திரட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை 15 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இச்சம்பவத்திற்கு நிதி வசூல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பெரோஸ், நவாஸ், அப்பாஸ், யூசுப் ஆகியோரது வீடுகளிலும், இவர்களுக்குக் கேரள சிறையில் இருந்து கொண்டு சதித்திட்டங்களுக்கு வழிகாட்டியதாகக் கூறப்படும் அசாருதீனின் இல்லத்திலும் இன்று காலை முதல் அதிரடிச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசாருதீன் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுடன் ஆன்லைன் மூலம் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன், ஐந்து தனித்தனி குழுக்களாகப் பிரிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளில்…

Read More

கிரிக்கெட் வரலாற்றில் தேனீக்கள் மொய்த்தது, சூரிய கிரகணம் நிகழ்வது போன்ற பல்வேறு விசித்திரமான காரணங்களால் ஆட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சம்பவங்களைப் பார்த்திருப்போம். ஆனால், தற்போது அதைவிடவும் ஒரு அதீத சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் விட்டில்சி (Whittlesey) மற்றும் வெரிங்டன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்கு அருகில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதனால் சுமார் 90 நிமிடங்கள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதுடன், கிரிக்கெட் வீரர்களே களத்திலிருந்து ஓடிச்சென்று மக்களைப் பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விட்டில்சியில் உள்ள அலிவால் சாலைக்கு அருகிலுள்ள மைதானத்தில் மாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட தீவைப்புச் சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீயை அணைக்க களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்: விட்டில்சி அணியைச் சேர்ந்த ஆண்ட்ரூ வார்ட் மற்றும் அவரது சக வீரர்களான டேவிட் டிராட், ஆண்ட்ரூ பிலிப்ஸ், பிரையன் வார்விக் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தபோது,…

Read More