Author: Editor web3
உக்ரைன் போரில் உயிரிழந்த, காயமடைந்த அல்லது மாயமான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போருக்குச் சென்று உயிரிழந்த, மாயமான அல்லது காயமடைந்த இந்தியர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு சிறப்பு அலுவலரை நியமிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையைத் கோர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை உதவ வேண்டும். மேலும், அவர்களது உறவினர்களின் உடல்களை மீட்கவும், இழப்பீடு பெறவும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவும் மாநில சட்டப் பணிகளும் உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தகவல்களைப் புரிந்துகொள்வதில் மொழித் தடை ஏற்படாத வகையில், உரிய விவரங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. போரில்…
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளதை எதிர்த்து கர்நாடகாவில் தீவிர போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் போதிய மழையின்மை மற்றும் நீர்ப்பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், தமிழகத்திற்கு தினமும் 3,500 கியூபிக் அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் கூடுதல் அவகாசக் கோரிக்கையை ஆணையம் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைக் கண்டித்து பெங்களூருவின் தெற்குப் பகுதி மற்றும் ராமநகரா (Ramanagara) மாவட்டத்தில் பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரட்சண வேதிகை அமைப்பினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என்றும், இது குறித்துப் பெங்களூரில் இன்று கன்னட அமைப்புகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். மாண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் சாலை…
கால்பந்து உலகின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவரான இத்தாலி மற்றும் ஏசி மிலன் அணியின் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி தனது 66வது வயதில் காலமானார். கடந்த 2025ஆம் ஆண்டு நுரையீரல் கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது காலமானது கால்பந்து உலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவைத் தொடர்ந்து, ஏசி மிலன் அணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஃபிராங்கோ பரேசியின் மறைவால் ஏசி மிலன் அணியின் வரலாறே துயரத்தில் மூழ்கியுள்ளது. அவரது முன்மாதிரியான பண்பும் நேர்மையும் எங்களது கிளப்பின் ரத்தத்திலும், அவரது புகழ்பெற்ற 6-ம் எண் ஜெர்சியிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது. பரேசி தனது ஒட்டுமொத்த கால்பந்து வாழ்க்கையில் ஏசி மிலன் அணிக்காக 716 போட்டிகளில் விளையாடியுள்ளார். மார்கோ வான் பாஸ்டன், ஃபிராங்க் ரிகார்ட், ரூட் குல்லிட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து களமாடிய அவர், 1989…
Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் PM மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது என ராகுல் தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் ஆதரவாளர்களான மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை மக்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன் வைத்தார். இருப்பினும், இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படாமல் உள்ளது. இந்தநிலையில், இன்று காலை தனது X பதிவில் ராகுல்காந்தி, முதலில் அவர்களது எலும்புகளை உடைத்தீர்கள். தற்போது வழக்குப்பதிவு செய்து, அவர்களது SM கணக்குகளை முடக்குகிறீர்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார். நீங்கள் இருவரும் இந்தியாவின் கடந்த காலம் ஆகிவிட்டீர்கள். எனவே, இந்தியாவின் எதிர்கால தலைமுறையை கவனத்துடன் கையாளுங்கள்…
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில், நிலத்தை அளவீடு செய்யச் சென்றபோது பெண் ஒருவரை தாக்கிய வட்டார வளர்ச்சி அலுவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பூசாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் நிலத்தை அளக்க வந்ததை செல்வராணி தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, செல்வராணியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரைப் பெண் என்றும் பாராமல் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதில் அதிகாரியும் நிலை தடுமாறி கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், தனது தாயாரைக் தாக்க முயன்றதைத் தடுக்கச் சென்ற செல்வராணியின் மகனையும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அதிகாரியின் இந்த அத்துமீறல்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்கண்டேயன், சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட மார்கண்டேயன், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, அவர் தரப்பில் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்…
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு தாரைவார்த்துட்டு, அதில் 50% மீள கிடைக்கும் என்ற தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தவெக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை முன்வைக்கக்கூட தவறியுள்ளது தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமையாகும். தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, நீட்…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி ஆற்றில் நிகழ்ந்த சட்டவிரோத செயலைத் தடுத்த போலீசார், மணல் கடத்தலுக்காக தனியாக கட்டப்பட்டிருந்த கான்கிரீட் பாலத்தை அதிரடியாக இடித்து தள்ளியுள்ளனர். அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, வெங்கரை, பொத்தனூர் உள்ளிட்ட காவிரிப் படுகைகளில் நீண்ட காலமாகவே மணல் திருட்டு நடைபெறுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி வரையிலான நேரங்களில், பைக் மற்றும் மினி ஆட்டோக்களைப் பயன்படுத்தி ஆற்றுக்குள் சென்று மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு திருடப்படும் மணல் ஒரு மூட்டை 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில், நன்செய் இடையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 15 அடி நீளத்தில் கான்கிரீட்டைக் கொண்டு தற்காலிகப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆற்றுக்குள் வாகனங்கள் எளிதாகச் சென்று வர…
நீட்’ தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக இரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும். ‘நீட்’ தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை…
இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களின் வசூல் வேட்டையில் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. டாம் ஹாலண்ட் (Tom Holland) நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. மார்வெல் ரசிகர்களின் அமோக ஆதரவோடு வெளியான இப்படம், முந்தைய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி ஹாலிவுட் படங்களுக்கான புதிய மைல்கல்லை இந்தியாவில் எட்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில், மார்வெல்லின் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame) படமே முதல் நாள் வசூலில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருந்தது. அந்தப் படம் தனது வெளியீட்டு நாளில் சுமார் ரூ. 63 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருந்தது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த அந்தப் பிரம்மாண்டமான சாதனையை தற்போது ‘ஸ்பைடர் மேன்’ முறியடித்துள்ளது. நேற்றைய முதல் நாள் முடிவில் இப்படம்…