Author: Editor web3

ஐபிஎல் 2027 சீசனுக்கான வர்த்தகப் பரிமாற்றத்தில்  மும்பை இந்தியன்ஸ்  அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தங்களது அணிக்குக் கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியோ, தங்கள் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாகத் திறமையான இளம் தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரே  மற்றும் ரொக்கப் பணத்தைக் கோரியுள்ளது. ஆனால், 19 வயதான இளம் வீரரான ஆயுஷ் மத்ரேவை விட்டுக்கொடுக்கச் சென்னை அணி மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக, அதிரடி வீரர் சிவம் துபே, தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி ரொக்கப் பணம் ஆகியவற்றை மாற்று ஒப்பந்தமாகச் சென்னை அணி முன்வைத்துள்ளது. சிஎஸ்கே முன்வைத்துள்ள இந்த மாற்று ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 20 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரருக்கான இடத்தை ஆக்கிரமிக்காத வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என்ற முறையில் ஹர்திக் பாண்டியாவுக்கு இத்தகைய பெருமதிப்பு…

Read More

குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டனர். நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி, வழக்கு விசாரணை முடியும் வரை இருவரும் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும், காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் கையெழுத்திட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ள செங்கமலப்பட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராம்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு ஆலை, வனப்பகுதியில் எந்தவிதப் பாதுகாப்பு முறைகளும் இன்றித் தகரக் கொட்டகைகள் அமைத்துச் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் இன்றும் அங்குத் தொழிலாளர்கள் தங்களது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி வேலை செய்துகொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தி உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளர் மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துச் சிவகாசி கிழக்கு காவல் நிலைய…

Read More

1999 கார்கில் போரில் இந்தியா பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் 27வது ஆண்டு விழா இன்று (ஜூலை 26) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தருணத்தில், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த 527 வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது அஞ்சலியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். 27வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “கார்கில் வெற்றி தினத்தன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் தங்கள் அசாதாரணமான தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய வீரர்களுக்கு நமது தேசம் நன்றியைத் தெரிவிக்கிறது. மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அவர்களின் வீரம், என்றென்றும் தேசியப் பெருமையின் ஆதாரமாக நிலைத்திருக்கும். அவர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும் கடமையுணர்வும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். கார்கில் வெற்றி தினம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர்…

Read More

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் நாள் நாடு முழுவதும் ‘கார்கில் விஜய் திவஸ்’ (Kargil Vijay Diwas) தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு இதே நாளில்தான் கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்தப் போரில், இந்திய எல்லைக்குள் ஊடுருவி ரகசியமாக கைப்பற்றப்பட்ட பல உயரமான மலைச் சிகரங்களை இந்திய ராணுவம் மிகத் துணிச்சலாக மீட்டு வரலாறு படைத்தது. 27 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், நாட்டிற்காக இரத்தம் சிந்திய இராணுவ வீரர்களின் புகழ் இன்றும் உச்சத்தில் இருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின்னணியும், மீட்கப்பட்ட முக்கியச் சிகரங்கள் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்வோம். கார்கில் போர் ஏன் வெடித்தது? ஒருகாலத்தில் நட்பு நாடுகளாக இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று எதிரெதிர் துருவங்களில் நிற்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு இரு நாடுகளும் காஷ்மீரை தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டன. பாகிஸ்தான் பழங்குடியின இஸ்லாமியர்களின் உதவியோடு சில பகுதிகளைப் கைப்பற்றின. இதுதான்…

Read More

டெல்லி ஜந்தர்பந்தரில் வாரக் கணக்கில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சி  போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் டெல்லி நகராட்சி மன்றம் (NDMC) தீவிரமாக இறங்கியுள்ளது. போராட்டம் நடைபெற்ற இடத்தில் தேங்கியுள்ள குப்பைகள், இடிபாடுகள் மற்றும் தற்காலிகக் கட்டமைப்புகளை அகற்றுவதற்காக 500-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு முக்கிய கோரிக்கைகளை ஏற்றதுடன், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, சனிக்கிழமை மாலை போராட்டக்காரர்கள் அப்பகுதியைக் காலி செய்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக இந்தத் துப்புரவுப் பணிகள் தொடங்கின. என்.டி.எம்.சி அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜந்தர்பந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க துப்புரவுப் பணியாளர்கள் பல ஷிப்ட்களாகப் பிரிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் நடைபெற்ற இடத்தில் விடப்பட்டிருந்த குப்பைகள், கட்டுமானக் கழிவுகள், பதாகைகள், கூடாரங்கள் மற்றும் இதர பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. போராட்டத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்கி,…

Read More

இந்தியாவின் ஸ்குவாஷ் துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், இளம் வீராங்கனை அனாஹத் சிங் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், எகிப்து நாட்டின் ருக்கையா சலேமை (Ruqayya Salem) வீழ்த்தி 18 வயதான அனாஹத் சிங் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். இதன் மூலம் இத்தொடரில் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்த எகிப்தின் ஆதிக்கத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தொடரில் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்கிய அனாஹத் சிங், இறுதிப் போட்டியில் மிகுந்த கவனத்துடனும் நிதானமாகவும் விளையாடி ருக்கையா சலேமை வீழ்த்தினார். பெண்களுக்கான இந்தப் போட்டியில் கடந்த 13 ஆண்டுகளாக எகிப்து நாடே கோப்பையை வென்று வந்த நிலையில், அந்தச் சாதனையைத் தகர்த்து அனாஹத் சிங் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இந்திய ஸ்குவாஷ் வரலாட்டின் மிகப்பெரிய மைல்கல்லாகப்…

Read More

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர், தற்போது கல்வித்துறையையும் கூடுதலாகக் கவனிப்பார். பிரகலாத் ஜோஷியின் கல்வித் தகுதி என்று பார்க்கும்போது, அவர் கர்நாடக மாநிலம் தார்வார் கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஹப்பள்ளியில் உள்ள கே.எஸ். கலைக் கல்லூரியில் இளங்கலை கலைப் பட்டம் (B.A.) பெற்றுள்ளார். உயர் கல்விக்கு முன்பு, தனது ஆரம்பக் கல்வியை ரயில்வே பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை ஹப்பள்ளியில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளியிலும் அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார். கடந்த 1962ம் ஆண்டு நவம்பர்…

Read More

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் பரவலான போராட்டங்களுக்குப் பிறகு, வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கடுமையான சட்டப்பிரிவுகள் மற்றும் தண்டனைகளைக் கொண்ட புதிய திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நாளை (ஜூலை 27-ஆம் தேதி, திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களவையின் அலுவல் பட்டியலின்படி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ‘பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா, 2026’-ஐ (Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026) தாக்கல் செய்யவுள்ளார். மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்றுவதற்கான வழக்கமான தீர்மானத்தையும் அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டெல்லி ஜந்தர்பந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினரின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு…

Read More

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்துள்ள தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், “எனது இளம் நண்பர்களே, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தப் பணிகளுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்கு பார்வையைக் கொண்ட கல்வி முறைதான் ஒரு பலமான நாட்டின் மூலக்கல் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாட்டின் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், உணர்வுகள் மற்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நான் எப்போதுமே மதிப்பளித்து வருகிறேன். இந்தியாவின் இளைய தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது எங்கள் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் தார்மீக உறுதிப்பாடாகும். நாட்டின் பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் நாட்டுக்குச் சேவையாற்ற வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், கடந்த மே 3,…

Read More