Author: Editor web3
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த அத்தங்கிகாவனூர் கிராமத்தில், வயதான தம்பதியினரைக் குறிவைத்து நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தங்கிகாவனூர் பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான விவசாயி கோபால் நாயுடு. இவருடைய மனைவி கௌசல்யம்மாள் (68). இவர்களது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்குத் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால், இந்த முதிய தம்பதியினர் மட்டும் கிராமத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். வழக்கம்போல நேற்று இரவும் கோபால் நாயுடுவும், அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மக் கும்பல், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும், பூஜை அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகளையும் திருடியுள்ளனர். பீரோ மற்றும் பூஜை அறையைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், தூங்கிக் கொண்டிருந்த…
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் நடைபெற்றது. 26 வருடங்கள் இணைந்து வாழ்ந்த தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், விஜய்யிடம் இருந்து விவகாரத்து வழங்க கோரி அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2021 ஏப்ரல் முதல் நடிகர் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் உறவில் இருந்ததை அறிந்து மனமுடைந்ததாகவும், அதுகுறித்து 2022 வரை பேசியும் பலனில்லை என்றும், கடந்த 4 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும் கணவன்-மனைவியாக வாழாமல் பிரிந்தே இருப்பதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார். தமக்கும், தன் இரு பிள்ளைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் முதல்வர் விஜய் முழுமையாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக சங்கீதா தன் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். தங்களுடைய திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும்; நிரந்தர ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்; வழக்கு…
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும். வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் – பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார். சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது – ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர்…
தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு மதபோதகரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, தற்போதைய தவெக அரசை, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவில், தூத்துக்குடி ஆனந்த நகர் தேவாலயத்தில் மதபோதகர் அருள்ராஜ் என்பவரால் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் கனிமொழி தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எங்குமே பாதுகாப்பில்லை என்னும் அச்சம் கலந்த சூழல் உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தவெக அரசு தங்களின் சுய விளம்பரத்திற்காக மட்டுமே செயல்படுவதாக அவர் சாடியுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்பு கொள்ள தனியாக எந்தவொரு அவசர உதவி எண்ணும் கூட இல்லாத ஒரு…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த கடுமையான போர் மற்றும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி ஒப்பந்தத் திட்டம் எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய ஒப்பந்தம் வரும் ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் இடைத்தரகர் முயற்சிகளுக்குப் பிறகு, ஈரானின் ‘மெஹர் செய்தி நிறுவனம்’ இந்த 14 அம்ச வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் போரை நிறுத்துதல். ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்றும், ஈரானின் இறையாண்மையை மதிக்கும் என்றும் அமெரிக்கா உறுதியளிப்பது. ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை 30 நாட்களுக்குள் முழுமையாக அகற்றுதல். ஈரானைச் சுற்றியுள்ள…
FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டங்கள் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தமது பிரிவுகளில் வெற்றியைப் பதிவு செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்களில் துருக்கி அணி பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தது. களத்தில் துருக்கியின் கை ஓங்கியிருந்த அந்தத் தருணத்தில், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. பால் ஒகான்-எங்ஸ்ட்லர் (Paul Okon-Engstler) மிகச் சரியாகக் கணக்கிட்டு வழங்கிய அந்தத் துல்லியமான பாஸை, நெஸ்டோரி இரான்குண்டா (Nestory Irankunda) மின்னல் வேகத்தில் கைப்பற்றினார். துருக்கி ஆட்டத்தை லாவகமாக முறியடித்த அவர், பந்தை லாவகமாக வலைக்குள் செலுத்த, மைதானமே அதிர்ந்தது. துருக்கியின் ஆதிக்கத்தை ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்த இந்த அபார கோல், ஆஸ்திரேலியாவை 1-0 என முன்னிலை பெறச் செய்தது.…
FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் தனது தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி மொராக்கோவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. நட்சத்திர வீரர் நெய்மர் உடல் தகுதி குறைவு காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில், ஐந்து முறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணியைப் பார்க்க சுமார் 80,663 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சபாயிரி, முதல் கோலை அடித்து தன் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி 11 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 32-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினி ஜூனியர் , கோல் அடித்து அணியைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார். முதல் பாதியின் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமமாக இருந்தன. இரண்டாம் பாதியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடியும், கோல்…
கால்பந்து திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்திற்குள், பாதுகாப்பு காரணங்களுக்காக மது பானங்களைக் கொண்டு செல்ல கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை முறியடிக்க ரசிகர் ஒருவர் கையாண்ட வினோதமான வழிமுறை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் தனது செல்போனை மது பாட்டில் போல மிகத் துல்லியமாக வடிவமைத்து வைத்திருந்தார். பார்ப்பதற்கு சாதாரண செல்போன் போல காட்சியளித்த அந்தப் பொருளுக்குள் மதுவை மறைத்து வைத்திருந்த அவர், மைதானத்தில் போட்டியைக் கண்டு ரசித்தபடியே, மிகவும் சாதாரணமாக அதைத் திறந்து கிளாஸில் மதுவை ஊற்றி அருந்தினார். https://www.instagram.com/reel/DZjOnOsgAga/ இந்தக் காட்சிகள் அருகில் இருந்தவர்களின் கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மைதானத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும், இத்தனை நூதனமாக யோசித்து ரசிகர் ஒருவர் மது அருந்திய விதம் பலரையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.…
ஆறுகளில் விளையாடி, நீரில் மூழ்கித் தத்தளிக்கும் உயிர்களைப் பார்க்கும்போது, ஒரு சிறுமியின் மனதுக்குள் எழுந்த தீப்பொறிதான், இன்று மாநிலத்தையே சிந்திக்க வைத்திருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ரனா பாத்திமா! மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடும் வயதில், மற்ற குழந்தைகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகப் போராடி வருகிறாள். மூன்று வயதிலேயே ஆற்றில் துணிச்சலாக நீந்தி சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் சிறுமிக்கு, நீர்நிலை என்பது அச்சம் அல்ல, அது ஒரு திறன். ஆனால், தன் கண் முன்னால் பல குழந்தைகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழப்பதைக் கண்டு துடித்த ரனா, அமைதியாக இருக்க விரும்பவில்லை. ‘எந்தக் குழந்தையும் நீரில் மூழ்கி இறக்கக்கூடாது’ என்ற உறுதியோடு, கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, தனது கோரிக்கையை முன்வைத்தது ஒட்டுமொத்த கேரளாவையும் வியக்க வைத்தது. ஒரு நீச்சல் குளம் கேட்டுத்…
பிரான்சில் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஜூன் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேச உள்ளனர். பிப்ரவரி 2025-க்குப் பிறகு நடக்கும் இந்த முக்கியச் சந்திப்பில், வர்த்தகம், எச்-1பி (H-1B) விசா கொள்கைகள், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசிக்க உள்ளனர். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மாநாட்டிலேயே ஒப்பந்தம் இறுதி செய்யப்படாது என்றும், அடுத்தகட்ட தொழில்நுட்ப விவாதங்கள் தொடர வேண்டியுள்ளதால், இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான அடித்தளமாகவே இந்தச் சந்திப்பு அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான தனது பயணத்தைத் தொடங்கியுள்ள பிரதமர் மோடி, ஜி7 மாநாட்டின் வாயிலாக இந்தியா தனது சொந்தக் கருத்துகளை முன்னிலைப்படுத்துவதுடன், ‘குளோபல் சவுத்’…