Author: Editor web3
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க (HPCA) மைதானத்தில் இன்று தொடங்கவிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முழுவதும் பெய்த பலத்த மழை மற்றும் சனிக்கிழமை காலையிலும் நீடித்த தூரல் காரணமாக மைதானத்தின் முக்கிய ஆடுகளப் பகுதி முழுவதும் தார்ப்பாய்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கின்ற போதிலும், மைதானத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற ‘சூப்பர் சோப்பர்’ இயந்திரங்கள் தீவிரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நாள் முழுவதும் தர்மசாலாவில் 60 முதல் 70 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை கூறுவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் மைதானத்தின் வானிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழையின் தீவிரம் குறைந்தவுடன், போட்டி தொடங்குவது குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
மென்பொருள் நிறுவனங்களின் மையமான ஹைதராபாத்தின் மாதப்பூர் ஐடி காரிடாரில், வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை இயக்கிக்கொண்டே, பெட்ரோல் டேங்க் மீது லேப்டாப்பைத் திறந்து வைத்து வேலை செய்துகொண்டே பயணித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹைடெக் காமன் (Hitex Kaman) பகுதி அருகே காரில் சென்ற பயணி ஒருவர் இந்த ஆபத்தான காட்சியைத் தன் மொபைலில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாலிபர் ஒருவர் பைக் ஓட்டுகிறார். அவரது பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது லேப்டாப் திறந்த நிலையில் உள்ளது, டிராஃபிக்கை கவனித்துக் கொண்டே அவர் லேப்டாப்பிலும் வேலை பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://x.com/NishadIndra1/status/2065459553450577963? இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இதனை ‘வொர்க் ஃபிரம் பைக்’ என்றும், ‘கார்ப்பரேட் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம்’ என்றும் சாடி வருகின்றனர். இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான காரசாரமான கமெண்டுகள் குவிந்து வருகின்றன. அவர்…
ஆஸ்திரேலிய ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். இத்தொடரில் சிந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது. சனிக்கிழமை இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில், உலகின் தரம் வாய்ந்த முதன்மை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை (Akane Yamaguchi) பி.வி.சிந்து எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு வீராங்கனைகளும் புள்ளிகளைப் பெற கடுமையாகப் போராடினர். முதல் கேமில் சிந்து அதிரடியாக விளையாடி யமகுச்சிக்கு ஈடுகொடுத்த போதிலும், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் யமகுச்சி 22-20 என்ற கணக்கில் முதல் ஆட்டத்தை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். சிந்துவின் தவறுகளைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், 21-12 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது ஆட்டத்தையும் மிக எளிதாக வென்றார். இறுதியில் 20-22, 12-21…
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு சிந்து நதி நீர் கிடையாது” என்றும், அமைதியின் மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்” என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலங்கானா மாநில பாஜக சார்பில் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அறிஞர்கள் கூட்டத்தில்’ கலந்துகொண்டு பேசிய அவர், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. பாஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்துார் மூலம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு எப்படிப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது” என்றார். மேலும், “எங்கள் நாட்டு மக்களின் கண்ணீரை வரவழைப்பவர்கள், எங்களிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது. பயங்கரவாதத்தின் பாதுகாவலர்களுக்கும், மனிதகுலத்தின் எதிரிகளுக்கும் சிந்து நதியின் ஒரு துளி நீர் கூடச் சென்றடைவதை என்டிஏ…
டெல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து பேப்பரை கிழித்தெறிந்துவிட்டு மீண்டும் கணவருடன் சேர்ந்த மனைவியின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. ஷிகா சிங் என்ற பெண்ணுக்கும், சௌரப் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் காரணமாக, ஷிகா தன் கணவரைப் பிரிந்தார். மேலும், சௌரப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கையும் தொடர்ந்து, விவாகரத்துக்கும் விண்ணப்பித்திருந்தார். தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று ஷிகாவின் தந்தை மனமுடைந்து போனார். நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வழக்கை நடத்தியதில், அவரது உடல்நிலையும் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஒரு கட்டத்தில், கடுமையான பண நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. போதிய பண வசதி இல்லாததால், அவர் ஒரு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.…
இந்திய கால்பந்து அணி இதுவரை உலகக் கோப்பையின் பிரதான சுற்றில் ஒருமுறை கூட விளையாடியது இல்லை. இருப்பினும், வரலாறு ஒரு முக்கிய வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்கியது. அதாவது, 1950-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய அணியுடன் விளையாட வேண்டிய பர்மா (மியான்மர்) மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகள் தொடரிலிருந்து விலகின. இதனால் இந்தியா தானாகவே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றும், போதிய நிதி வசதி இல்லாதது, நீண்ட தூரப் பயணம் மற்றும் வெறும் காலில் விளையாட ஃபிஃபா தடை விதித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய அணி அப்போது பிரேசில் செல்லவில்லை. அதுவே இந்தியா உலகக் கோப்பைக்கு மிக அருகில் சென்ற முதல் மற்றும் கடைசி தருணமாகும். 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறாதது ஏன்? இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 32-லிருந்து 48 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஆசிய கண்டத்திற்கான…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் குரூப் ‘டி’ பிரிவின் தொடக்க ஆட்டத்தில், தொடரை நடத்தும் அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் அமெரிக்கா பதிவு செய்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே அமெரிக்க அணிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது. பராகுவே வீரர் டாமியன் பொபாடிலா பந்தைத் தடுத்தபோது அது எதிர்பாராதவிதமாக அவர்களின் சொந்த கோல் போஸ்ட்டிற்குள் சென்றது. இதனால் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. அமெரிக்காவின் நட்சத்திர வீரர் ஃபோலரின் பலோகன் (Folarin Balogun) ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் ஒரு கோலும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+4′) மற்றொரு கோலும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியிலேயே அமெரிக்கா 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் பாதியில் அமெரிக்கா பெற்ற மிகப்பெரிய…
மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகளைக் கொண்ட வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் 3 இந்திய மாலுமிகள் பலியான விவகாரம், தற்போது சர்வதேச அளவில் பெரும் போராக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைத் தொடர்பு கொண்டு இந்தியாவின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். https://x.com/DrSJaishankar/status/2065518118802461072? இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், “வளைகுடா பகுதியில் 3 இந்திய மாலுமிகள் பலியாவதற்குக் காரணமான அமெரிக்க கடற்படையின் தாக்குதல்களுக்கு இந்தியாவின் வலுவான எதிர்ப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மீண்டும் வலியுறுத்தினேன். வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய கொடிய தாக்குதல்கள் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார். வளைகுடாப் பகுதியில் இந்த வாரம் முழுவதும் இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டன. கடந்த 8 ம் தேதி பலாவ் நாட்டு கொடியுடன்…
அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இத்தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதோடு, பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கட்சியின் இந்த எதிர்பாராத தேர்தல் தோல்வி குறித்து விரிவான ஆய்வு நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சென்னை எம்ஜிஆர் மாளிகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் இந்த ஆலோசனையில் தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் வாக்கு வங்கி சரிந்ததற்கான காரணங்கள் மற்றும் பல…
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக கனடா மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில், போஸ்னியா-ஹெர்சகோவினா (Bosnia-Herzegovina) அணியை எதிர்த்து விளையாடிய கனடா 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை டிரா செய்து தனது முதல் புள்ளியைப் பெற்றுள்ளது. டொராண்டோ நகரில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில், ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் போஸ்னியா அணியின் ஜோவோ லுகிக் (Jovo Lukic) தலையால் முட்டி ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் போஸ்னியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராகக் களம் புகுந்த கனடாவின் கைல் லாரின் (Cyle Larin), உள்ளே வந்த இரண்டே நிமிடங்களில் (78-வது நிமிடம்) பிராமிஸ் டேவிட் கொடுத்த பாஸை மிகச்சிறப்பாக கோலாக மாற்றினார். இதனால் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான கனடா ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். உலகக் கோப்பை வரலாற்றில் கனடா அணி…