Close Menu
    What's Hot

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  

    தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சாகச விளையாட்டில் பணியாளர்களின் அலட்சியம்!. 21 வயது இளம்பெண் பலியான சோகம்!
    Featured

    சாகச விளையாட்டில் பணியாளர்களின் அலட்சியம்!. 21 வயது இளம்பெண் பலியான சோகம்!

    Editor web3By Editor web3June 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bungee jumping dead Brazil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரேசிலில் நடைபெற்ற பங்கி ஜம்பிங் (Bungee Jumping) நிகழ்வில், பாதுகாப்பு உபகரணங்களை இணைக்காமல் இளம்பெண் ஒருவரைப் பாலத்திலிருந்து கீழே தள்ளிய பணியாளர்களின் கொடூர அலட்சியத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சாவ் பாலோ மாநிலத்தின் லிமெயிராவில் உள்ள “ஸ்கெலட்டன் பிரிட்ஜ்” (Skeleton Bridge) பகுதியில் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. மரிய எட்வார்டா ரோட்ரிக்ஸ் டி பிரேட்டாஸ் (21) என்ற இளம்பெண், பங்கி ஜம்பிங் செய்வதற்காகப் பாலத்தின் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த இருவர் அவரைத் தளத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு கயிறு எதையும் கட்டாமல் கீழே தள்ளியுள்ளனர். சுமார் 130 அடி (40 மீட்டர்) உயரத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

    https://x.com/RapidReport2025/status/2065862054552936513?

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில், அந்தப் பெண் கீழே விழுந்த பிறகு, அங்கிருந்தவர்கள் அவர் மீது கயிறு கட்டப்படவில்லை என்று அலறுவது பதிவாகியுள்ளது. பணியாளர்கள் பாதுகாப்பு கயிற்றைக் கட்ட மறந்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். நிகழ்வு நடந்த சிறிது நேரத்தில், சில அமைப்பாளர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். பின்னர், போலீஸ் ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் இருந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக பங்கி ஜம்பிங் நிகழ்வை நடத்திய “என்ட்ரே கார்டாஸ்” (Entre Cordas) நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்வது குறித்து சிவில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, தான் பாலத்தில் இருப்பதாகவும், நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்தப் பெண் பதிவிட்டிருந்தார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது வருங்கால கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்பற்ற முறையில் ஒருவரது உயிரைப் பறித்த இந்த நிகழ்வு, சாகச விளையாட்டுகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    21-Year-Old Brazilian Woman Dead Bungee Jump Staff negligence Without Safety Cord Workers Push Her Off Bridge
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக இரத்த தான தினம் 2026!. இந்த நாள் எப்படி உருவானது?. வரலாறும்.. முக்கியத்துவமும்!
    Next Article பல ஆண்டுகளுக்குப் பிறகு.. புதுச்சேரியில் லாரி வாடகை உயர்வு..!! நாளை முதல் அமல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    July 19, 2026

    தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    July 19, 2026

    விஜய்க்கு ஒரு ஆபத்துனா அது இவரால தான் வரும்..!! ஆதவ் அர்ஜுனாவை கைகாட்டிய ஆர்.எஸ்.பாரதி..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  

    தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    விஜய்க்கு ஒரு ஆபத்துனா அது இவரால தான் வரும்..!! ஆதவ் அர்ஜுனாவை கைகாட்டிய ஆர்.எஸ்.பாரதி..!!

    பரபரப்பான அனைத்துக்கட்சி கூட்டம்..!! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்..!! காரணம் என்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.