Author: Editor web3

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும். எனவே, இக்கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுமாறு, மாநில பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை சந்தித்து சபாநாயகர் JCD பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, கூட்டத்தொடருக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழை சபாநாயகர் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது, அரசின் நிதிநிலை அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடுவது குறித்தும் ஆளுநருடன் சபாநாயகர் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நிகழ்வாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களின் இக்கேள்விக்கு மறைமுகமாகப் பதிலளித்த சபாநாயகர் JCD பிரபாகர், “கூட்டத்தொடர் தொடங்கும் நாளன்று என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள் என்று சுருக்கமாகக் கூறி…

Read More

பெண்களுக்கு எதிரான குற்றங்களை அறவே ஒழித்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசால் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ தொடங்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த நிலையில், இப்படையின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து ஐ.ஜி. பவானீஸ்வரி சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நேற்று டிஜிபி அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ஆபத்தான சூழலில் இருக்கும் பெண்களை உடனடியாக மீட்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதுமே இப்படையின் முதன்மைப் பணி. பேருந்து நிலையங்கள், பொது இடங்கள் மற்றும் அலுவலகப் பகுதிகள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, சீருடையிலும் சாதாரண உடைகளிலும் போலீஸார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வர். பட்ஜெட் மற்றும் ஆள்சேர்ப்பு: இத்திட்டத்திற்காக ரூ. 357 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், புதிதாக 2,545 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குழுக்கள்…

Read More

சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் எல்லைகளைத் தாண்டி, சாதி, மத பேதமின்றி ஒட்டுமொத்த உலகையும் ஒரே பந்திற்குப் பின்னால் ஓட வைக்கும் அசாத்திய சக்தி கால்பந்து விளையாட்டுக்கு மட்டுமே உண்டு. இன்று உலகின் மிகக் கூடுதலான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்ற சிம்மாசனத்தில் கால்பந்து அமர்ந்திருப்பதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான சரித்திரம் ஒளிந்துள்ளது. ஒலிம்பிக்கில் விதைக்கப்பட்ட உலகக் திருவிழா: 1904-ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டை முறைப்படுத்த ‘ஃபிஃபா’ (FIFA) எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1908-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் கால்பந்து ஒரு அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகாரம் பெற்றது. ஒலிம்பிக் களத்தில் இந்த விளையாட்டுக்குக் கிடைத்த அசுர வரவேற்பைக் கண்ட ஃபிஃபா நிர்வாகம், கால்பந்திற்காக மட்டுமே பிரத்யேகமாக ஒரு சர்வதேசத் தொடரை நடத்த திட்டமிட்டது. அதன் விளைவாக, 1930-ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் உலகின் முதல் ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் வெற்றிகரமாக அரங்கேறியது. அன்று முதல், ஒலிம்பிக்கைப்…

Read More

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் நீடித்து வந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தனது முதலிடத்தை இழக்க, சக நாட்டு வீரரான ஹாரி ப்ரூக் முதல்முறையாக நம்பர்-1 இடத்திற்கு மகுடம் சூடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சொற்ப ரன்களுக்கு (1 மற்றும் 8 ரன்கள்) ஆட்டமிழந்ததால், அவர் முதலிடத்திலிருந்து இரண்டு இடங்கள் சறுக்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மறுபுறம், நியூசிலாந்துக்கு எதிரான கடினமான ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டன் ஹாரி ப்ரூக், 2024-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மீண்டும் உலகின் நம்பர்-1 டெஸ்ட் பேட்ஸ்மேன் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள்…

Read More

கடந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதலாவது கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது. முன்னதாக நடைபெற்ற, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான   வாழ்வா-சாவா அரையிறுதி போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து இந்தியாவை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்தார். இதேபோல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அதிரடியாக 87 ரன்கள் குவித்தார். பின்னர் பந்துவீச்சிலும் அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் வரும் ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை) பர்மிங்காமில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தநிலையில், ஜெமீமா ரோட்ரிக்ஸ், கடந்த ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த அட்வைஸ் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.…

Read More

கடந்த 2022-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்கினார்.  லண்டனில் நடைபெறும் ‘குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்’ (Queen’s Club Championships) தொடரின் மூலம் அவர் தனது அதிரடி கம்பேக்கை பதிவு செய்துள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய செரீனா வில்லியம்ஸ், 19 வயதான கனடா நாட்டின் இளம் வீராங்கனை விக்டோரியா எம்போகோ  உடன் ஜோடி சேர்ந்தார். இந்தத் தொடரின் முதல் சுற்றில், தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த நிக்கோல் மெலிச்சர்-மார்டினெஸ் மற்றும் எரின் ரவுட்லிஃப் ஆகியோரை 7-6(2), 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி செரீனா-விக்டோரியா ஜோடி குவார்ட்டர் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. 44 வயதிலும் செரீனா வில்லியம்ஸ் மணிக்கு 193 கி.மீ வேகத்தில் சர்வீஸ் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். லண்டன் புல்வெளி மைதானத்தில் செரீனா வெற்றி…

Read More

அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2026 ஃபீஃபா உலகக் கோப்பைத் தொடருக்காக, சர்வதேச கால்பந்து சங்க வாரியம் (IFAB) பல புதிய விதிமுறைகளை அங்கீகரித்து அறிவித்துள்ளது. அதன்படி, வீரர்களின் நடத்தை, நேர வீணாவதை தடுத்தல், மாற்று வீரர்கள் மற்றும் VAR தொழில்நுட்பத்தின் பொறுப்புகள் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாயை மூடிக்கொண்டு பேசினால் ரெட் கார்டு: மைதானத்தில் எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடும்போதோ அல்லது வாக்குவாதம் செய்யும்போதோ, கைகளாலோ அல்லது தங்களது ஜெர்சியாலோ வாயை மூடிக்கொண்டு பேசும் வீரர்களுக்கு இனி நேரடியாக ‘ரெட் கார்டு’ வழங்கப்படும். அதாவது, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர் மற்றும் பென்ஃபிகா அணியின் ஜியான்லுகா ப்ரெஸ்டியானி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, வாயை மூடிக்கொண்டு இனவெறி வார்த்தைகள் பேசப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தே இந்த கடுமையான விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், சாதாரண நேரங்களில்…

Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமராகப் பதவியில் நீடித்து, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லுக்காக உலகத் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில், அண்மையில் ரோமில் நடைபெற்ற சந்திப்பை நினைவு கூர்ந்தார். இந்தியா – இத்தாலி இடையிலான புதிய ‘சிறப்பு வியூகக் கூட்டாண்மை’ இரு நாட்டு மக்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் குறிப்பிட்டார். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தனது வாழ்த்து செய்தியில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்கள் தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்தச் சாதனை ஒரு சான்றாகும்” என்று…

Read More

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவருக்கு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் அவரது மறுவருகையைத் தடுத்துள்ளது. கடந்த ஜூன் 2 முதல் பெங்களூரு CoE மையத்தில் ஹர்திக் பாண்டியா தீவிர உடற்தகுதிப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 10 ஓவர்கள் முழுமையாக வீசி மேட்ச் சிமுலேஷன் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்திருந்தார். இதனால் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜூன் 11 அன்று தர்மசாலாவில் உள்ள இந்திய அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி கட்டப் பயிற்சியின் போது அவருக்கு குவாட்ரைசெப்ஸ் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ அதிகாரியின் அறிக்கை, மிகவும் தாமதமாக இந்த…

Read More

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியேயான ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சோமாலியாவைச் சேர்ந்த பிரபல நடுவர் ஓமர் அர்தானுக்கு (Omar Artan) அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர். உலகக் கோப்பைக்கான இறுதித் தயாரிப்புகளில் பங்கேற்பதற்காக, ஃபிபா (FIFA) அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 நடுவர்களுடன் இணைவதற்காக ஓமர் அர்தான் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். தன்னிடம் முறையான விசா மற்றும் தேவையான அனைத்து பயண ஆவணங்களும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரிடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் முடிவில், அவர் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர் எனக் கூறி, வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். அமெரிக்காவின் இந்த அதிரடி…

Read More