Author: Editor web3
நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 2-வது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இருப்பினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்கு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. WTC புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்? ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025-27) சுழற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படவில்லை. எனவே,…
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவுப் பகுதியில் இன்று காலை நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 07:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவோ தீவின் சரங்கனி (Sarangani) மாகாணக் கடற்கரையை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் 33 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, இந்தோனேசியா வரை உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டது. எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் பல கட்டிடங்கள்…
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது நடைமுறையில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முன்பு இருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை. எனினும், தேசிய அளவில் உள்ள ‘இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த ‘இந்தியா’ கூட்டணியில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் தெரியவரும். அதன் பின்னரே இக்கூட்டணியில் வேறு புதிய கட்சிகள் இணையுமா என்பது குறித்துத் தெரியவரும். தமிழ்நாட்டில் கூட்டணி இல்லை என்றாலும், மக்கள் நலன் சார்ந்த மற்றும் ஒத்த கருத்துடைய பிரச்சினைகளுக்காக திமுகவோடு இணைந்து போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயாராகவே உள்ளது.” முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கம், அமித்ஷா மற்றும் மோடியின் ஆசியோடுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகப் பாரதிய ஜனதா கட்சியால்…
நெல்லை மாநகராட்சி மேயர் அறையில் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்ட விவகாரமும், மேயரின் இருக்கை மாற்றமும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு மேயர் ராமகிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படத்தை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் அறையில் புதிய முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. தற்போது இந்த சர்ச்சைகளுக்கு இடமின்றி, மேயர் அறையில் அவரது பிரதான இருக்கைக்கு பின்புறமாக தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரின் புகைப்படங்களும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மேயரின் மேசைக்கு முன்புறம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே, மேயர் ராமகிருஷ்ணன் தனது வழக்கமான பிரதான நாற்காலியில் அமராமல், பார்வையாளர்கள்…
இஸ்ரேல் – ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் அவசர காலங்களில் உதவி பெற ஏதுவாக பிரத்யேக உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஈரானில் உள்ள தமிழர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் எந்த நேரத்திலும் உதவி கோர பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 3793 (இந்தியாவிற்குள்) சர்வதேச தொலைபேசி எண்: +91 8069009901 மின்னஞ்சல் முகவரி: nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தற்காப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
டொமினிகன் குடியரசு நாட்டில் நிகழ்ந்த பயங்கரமான தனியார் விமான விபத்தின் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ‘கல்ப்ஸ்ட்ரீம் ஜி200’ (Gulfstream G200) ரகத்தைச் சேர்ந்த இந்தத் தனியார் விமானம், டெக்சாஸ் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதையடுத்து, விமானத்தை டொமினிகன் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்திற்குத் (La Romana International Airport) திருப்பி, அவசரமாகத் தரையிறக்க முயன்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தின் அருகே உள்ள புல்வெளியில் பயங்கரமாக மோதி சறுக்கிக் கொண்டே சென்று நொறுங்கியது. அடுத்த சில விநாடிகளில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி, கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒரு பெரிய நெருப்புப் பந்து போல பயங்கரமாக வெடித்துச் சிதறியது. வானுயரத்துக்குக் கரும்புகை சூழ்ந்ததை அடுத்து, விமான நிலையத் தீயணைப்பு…
தமிழகத்தில் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்குப் பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழகத்தில் ரீல்ஸ் மாடல் ஆட்சி நடத்தி வரும் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டிய யூடியூபர் மாரிதாஸ் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அந்த உரிமையை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல். கடந்த ஆட்சிக் காலத்திலும் அரசின் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டியவர்களை கைது செய்து, சமூக ஊடக விமர்சகர்களை அச்சுறுத்திய திமுக அரசின் பாணியையே தற்போது தவெக அரசும் பின்பற்றுகிறது. கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் மதிக்காமல் விமர்சன குரல்களை ஒடுக்க முயல்வது எந்த அரசுக்கும் ஏற்றதல்ல. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது…
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வருகை தந்தார். அப்போது, அவர் மழையூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தத் திடீர் ஆய்வின் போது, மருத்துவமனையின் வார்டுகளுக்கு நேரில் சென்ற அமைச்சர், அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், மருந்து மாத்திரைகளின் இருப்பு மற்றும் தடையற்ற மருத்துவ சேவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ், மருத்துவமனையில் தங்களுக்கு உரியச் சிகிச்சை கிடைக்கிறதா என்றும், ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மருத்துவமனையின் தூய்மை மற்றும்…
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்ட ‘கரீப் கல்யாண்’ (Garib Kalyan) திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். https://x.com/narendramodi/status/2063829392711897503? இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் இந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக ஏழைகளின் நலனே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் எப்போதும் ‘அந்த்யோதயா’ (கடைசி மனிதனின் எழுச்சி) என்ற கொள்கையால் உத்வேகம் பெற்றுள்ளோம். பல தசாப்தங்களாகப் பின்தங்கியிருந்தவர்களுக்கு வளர்ச்சியின் பலன்கள் சென்றடைவதை எங்களது அரசு உறுதி செய்துள்ளது,” என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேரடிப் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் உதவிகள் நேரடியாகவும், வெளிப்படையான முறையிலும் மக்களைச் சென்றடைவதாகவும், இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசின்…
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று (ஜூன் 8) காலை ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் போது பள்ளி மாணவர்கள் அலறியடித்தபடி ஓடும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிலிப்பைன்ஸில் இன்றுதான் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. தாவோ ஆக்ஸிடென்டல் (Davao Occidental) பகுதியில் உள்ள மகாயஹாய் ஆரம்பப் பள்ளியில் காலையில் மாணவர்கள் மைதானத்தில் ஒன்று கூடி, கொடியேற்றத்துடன் கூடிய பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் பூமி குலுங்கத் தொடங்கியது. நிலநடுக்கத்தின் வீரியம் தாங்காமல், மைதானத்தில் மாணவர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியின் அருகே இருந்த ராட்சத தகர நிழற்குடை கூடாரம் அப்படியே சரிந்து விழுந்தது. https://x.com/WeatherMonitors/status/2063806759958200467? திடீரென பூமி குலுங்கி, கூடாரமும் சரிந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.…