Author: Editor web3

உலகளவில் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 50 நகரங்களின் பட்டியலை இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள 205 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வின் முடிவுகள், இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகளவில் அதிக வெப்ப அபாயத்தைக் கொண்டுள்ள முதல் 50 நகரங்களின் பட்டியலில், வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு இந்தியாவில் இருந்து மட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் சென்னை நகரங்கள் இடம்பெற்றுள்ளன. வெப்பத்தின் தாக்கம், அதைத் தாங்கும் மக்களின் வாழ்வாதார நிலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், உலகளவில் மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் மூன்று நகரங்கள் முன்னணியில் உள்ளன. அந்தவகையில்,…

Read More

அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் மற்றும் அவரது அமைச்சரவை பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இந்த அரசு விழாவில், வழக்கத்திற்கு மாறாக முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாக ‘தேசிய கீதமும்’ பாடப்பட்டு, அதன்பின்னரே மூன்றாவதாக ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த மரபு மாற்றப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்த மரபு மீறலுக்கு எதிராக, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவரது மனுவில், கடந்த 1891-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடலைக்கொண்டே தமிழக அரசு விழாக்கள் தொடங்குவதும்,…

Read More

சுற்றுலாப் பயணிகள் காலி மதுபாட்டில்களை வனம் மற்றும் மலைப் பிரதேசங்களில் வீசுவதால், வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதைத் தடுக்க மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான இந்த வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “தமிழகத்தில் மூன்று மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இனிவரும் காலங்களில், இந்த நடைமுறையை முழுமையாக மாற்றியமைக்க…

Read More

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்யவே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் இக்கூட்டத்தில் முதலமைச்சரிடம் விளக்கினர். இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எந்தவொரு பேரிடர் காலத்திலும் பொதுமக்களின் உயிர்ச் சேதத்தைத் தடுப்பதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்களும், அவசர காலச் செயல்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் முழு விழிப்புடன் செயல்பட வேண்டும். மீட்புக் குழுவினர் மற்றும் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  தேவைப்படும் இடங்களில் முகாம்களைத் தூய்மையாகப்…

Read More

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் APR என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, ஆலையில் தேங்கியிருந்த பட்டாசு கழிவுகளைச் சேகரித்து எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாகப் பட்டாசு கழிவுகள் திடீரென வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த கருப்பசாமி என்ற பட்டாசு தொழிலாளி தீப்பொறி பட்டு நிலைகுலைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதில் அவர் படுகாயமடைந்தார். ஆலையில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு, உடனடியாகச் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 100% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துப் புகாரின் பேரில் வழக்குப்…

Read More

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியதில், சாலையில் நின்று கொண்டிருந்த 5 பேர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிங்கம்புணரி மேல தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கார், மேலத்தெரு பகுதியிலிருந்து சந்திவீரன் கூடம் நோக்கி அதிவேகமாக வந்துள்ளது. மேலூர் சாலைக்குத் திரும்ப முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சுமதிபுரத்தைச் சேர்ந்த வடிவேல், மனப்பட்டியைச் சேர்ந்த ஜீவா, அங்குள்ள தேநீர்க்கடைக்கு வெளியே நின்றிருந்த கீழத்தெருவைச் சேர்ந்த தையல் கலைஞர் வடிவேல், அவரிடம் பேசிக்கொண்டிருந்த வேளார் தெருவைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் அவரது மகன் நவீன் ஆகிய 5 பேர் மீது கார் பலமாக மோதி, அவர்களைத் தூக்கி வீசியது. அத்துடன் நிறுத்தாமல்,…

Read More

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அவரது முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், லஞ்ச ஊழல்களுக்குத் தனது அரசில் துளியும் இடமில்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களோ அல்லது அவர்களுக்குக் கீழ் இயங்கும் அதிகாரிகளோ ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று அவர் எச்சரித்துள்ளார். நிர்வாகத்தில் எவ்விதக் கறையும் இல்லாத ஒரு ‘சுத்தமான அரசை’ வழங்குவதே தங்களது முக்கிய இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள்…

Read More

கண்ணியமிக்க காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷமிட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இரண்டு நாட்களுக்கு முன்புதான் செல்வப்பெருந்தகை கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களை மதிப்பதே தமிழர் பண்பாடு என்று கூறியுள்ளார். காயிதே மில்லத் நினைவிடத்தில்கூட கண்ணியத்தை கடைப்பிடிக்க முடியாத நிலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குழுவிற்கு உருவாகியுள்ளது வருத்தமளிப்பதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இந்த நிகழ்வு திமுகவின் புதிய அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும், உதயநிதியைச் சுற்றியுள்ள குழுவினர் எதிர்க்கட்சிகளை மதிக்காமல் தேவையற்ற மோதல்களை உருவாக்குவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், பாஜக மற்றும் அதிமுகவுடன் உதயநிதிக்கு மறைமுக புரிந்துணர்வு இருப்பதாக எழுந்துள்ள அரசியல் கேள்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே…

Read More

காயிதேமில்லத் பெயரிலும் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 5. கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாள். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்! கண்ணியத்தமிழர் காயிதேமில்லத் அவர்கள் இந்திய அரசமைப்புப் பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர். மேலவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியாற்றியவர். அதன்மூலம் தேசியத் தலைவராக உயர்ந்தவர். இஸ்லாம் எனது மதம்: தமிழ் எனது தாய்மொழி என முழங்கிய காயிதேமில்லத் அவர்கள் அன்னைதமிழ் மீதும் ஆருயிர்த் தமிழினத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். இசுலாமியர்களுக்கும் இன்னபிற சமூகத்தினருக்கும் இடையில் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்தவர். தமிழ்நாடு இன்று மதவெறி அரசியலுக்கு இடம்கொடுக்காத ஒரு சகோரத்துவ மண்ணாக விளங்குவதற்கு அவருடைய முதிர்ச்சிநிறைந்த பக்குவமான அரசியல் அணுகுமுறைகள் குறிப்பிடத்தகுந்த காரணமாகும். அத்தகைய மாமனிதர் காயிதேமில்லத் அவர்களின்…

Read More

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு, சமீபத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்தது. முன்னதாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் சிலரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. இந்தநிலையில், ஒன்றிணைந்த பிறகும் பறிக்கப்பட்ட முக்கிய கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படாததால், வேலுமணி தரப்பினர் கடும் குழப்பத்திலும் அதிருப்தியிலும் இருந்து வந்தனர். இதன் காரணமாகவே, மூத்த தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த சில நாட்களாக இபிஎஸ்-ஐ நேரில் சந்திப்பதைத் தவிர்த்து, தங்களது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஜூன் 4-ஆம்…

Read More