Close Menu
    What's Hot

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»போலி மருந்து விவகாரம்: புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 திமுக எம்எல்ஏக்கள் கைது
    அரசியல்

    போலி மருந்து விவகாரம்: புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 திமுக எம்எல்ஏக்கள் கைது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    poli marunthu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போலி மருந்து தயாரித்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற 4 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த மூன்று தொழிற்சாலைகள் மற்றும் 10 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ராஜா என்ற வள்ளியப்பன் உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் போலி மருந்துகளின் கேந்திரமாக புதுவையை மாற்றியதாக பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் அரசை கண்டித்தும், மக்களின் உயிரோடு விடியாடிய குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர்வலம் – சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (டிச.8) நடத்துவதாக திமுக அறிவித்தது.

    அதன்படி புதுவை காமராஜர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் நேரு வீதி வழியாக சட்டப்பேரவை நோக்கி சென்றது.

    ஊர்வலத்தில் வந்தவர்கள் போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சென்றனர். அவர்களை சம்பா கோயில் எதிரில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். தொடர்ந்து போலீஸாரின் தடுப்புகளை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறியதாவது: புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களை, பதுக்கியவர்களை, ஏஜெண்டாக இருந்தவர்களையும் காப்பாற்றி வருகிறது என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரூ.1000 கோடி-க்கும் மேல் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு பெயர் அளவுக்கு கைது நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதில் முக்கியக் குற்றவாளிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளது. பல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த மருந்து இந்தியாவில் எந்தக் கடைகளுக்கு சென்றுள்ளது, இதனை பயன்படுத்தி யாரேனும் உயிரிழந்துள்ளார்களா என்பது தெரியவில்லை?. இதுகுறித்து ஆய்வு நடத்த அரசு மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை.

    அதனால் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும். போலி மருந்து தயாரிப்பில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. மருந்து குடோன்கள் இருந்த இடம் இக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு உரிமையானது. இதற்கு பல மடங்கு வாடகை அளித்துள்ளனர்.

    பல அரசியல்வாதிகளுக்கு வீடு உட்பட பல சலுகைகள் வழங்கியுள்ளனர். இதுவரை 10 ஆண்டுகளாக நிறுவனம் எப்படி நடந்தது? யாருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது? மருந்துகளை சாப்பிட்டு இறந்தவர்கள் எத்தனை பேர்?. என அரசு அறிக்கை வெளியிட வேண்டும். புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்கப்பட்டு ஏழை மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இதுவரை ஆய்வுக் கூட்டம் கூட நடத்தவில்லை. முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் என தனித்தனி பாதையில் பயணிக்கின்றனர்.

    புதுச்சேரி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமூளையை உண்ணும் அமீபா!. ஒரே ஆண்டில் 42 பேர் மரணம்; 170 பேர் பாதிப்பு!. மத்திய அரசு தகவல்!.
    Next Article “என் திரை வாழ்வை அழிக்க நடந்த சதி” – தீர்ப்புக்குப் பின் நடிகர் திலீப் எதிர்வினை!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.