Close Menu
    What's Hot

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேர்தல் களம்!. இன்று நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ!
    தமிழ்நாடு

    தேர்தல் களம்!. இன்று நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi road show 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரம்மாண்ட ரோடு ஷோ  மேற்கொள்கிறார்.

    தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.  இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் அவர், நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் வேப்பமூடு சந்திப்புக்குச் சென்று, மாலை 4.30 மணி அளவில் தனது ரோடு ஷோவை முறைப்படி தொடங்குகிறார்.  5.30 மணி வரை வெப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோட் ஷோ செல்ல உள்ளார்.

    அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பார். ரோட் ஷோ முடிந்த பிறகு, மாலை 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்படுகிறார்.

    இந்த ரோடு ஷோ, வேப்பமூடு காமராஜர் சிலையில் தொடங்கி மணிமேடை, அண்ணா சிலை வழியாக வடசேரி எம்.ஜி.ஆர் சிலை சந்திப்பு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது. இதற்காகத் திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி வீதி உலா வரப் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் நகரம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிஎஸ்கே-வின் மிரட்டல் பவுலிங்!. 200-க்கும் குறைவான ரன்களை டிபெண்ட் செய்து புதிய சாதனை!.
    Next Article இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!
    Editor web3
    • Website

    Related Posts

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 15, 2026

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    April 15, 2026

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.