Close Menu
    What's Hot

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு

    மரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”தவெக அரசின் சொத்தை வாதத்தால் பறிபோகும் தமிழக மருத்துவ இடங்கள்”
    Featured

    ”தவெக அரசின் சொத்தை வாதத்தால் பறிபோகும் தமிழக மருத்துவ இடங்கள்”

    Editor web2By Editor web2June 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhay vijay medical student
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்குச் சரண்டர் செய்யக் கோரும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கும், அரசு மருத்துவர்களுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

    தற்போதைய புதிய அரசின் முறையற்ற வாதங்கள் மற்றும் மெத்தனப் போக்கின் காரணமாக தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    கடந்த 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 430 உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வில், 215 இடங்கள் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. இதில் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், 63 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு 152 இடங்கள் காலியாக இருந்தன.

    இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், காலியாக உள்ள இந்த 152 இடங்களையும் அகில இந்தியத் தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 29.05.2026 அன்று உத்தரவிட்டது.

    முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தி.மு.க. அரசின் சார்பில் திறமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு இந்த இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நீதிமன்றத்தில் உரிய சட்டப்பூர்வ வாதங்கள் முறையாக எடுத்து வைக்கப்படவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    முக்கியமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இடங்களைச் சரண்டர் செய்கிறோம்’ என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதே இந்தத் பின்னடைவுக்குக் காரணம் என்று உதயநிதி தனது கடிதத்தில் குற்றம் சாட்டி உள்ளார்.

    கடந்த 2000-ஆம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டு, பின்னர் திமுக அரசால் சட்டப் போராட்டங்கள் மூலம் நிலைநாட்டப்பட்ட அரசு மருத்துவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு, தற்போது தவெக அரசின் அலட்சியத்தால் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இதயநோய், புற்றுநோய், நரம்பியல் போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைகள் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, 152 இடங்களும் அகில இந்தியத் தொகுப்பிற்குச் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உதயநிதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவ இடங்கள் பறிபோகிறதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்!
    Next Article ”மின்வாரியத்தில் ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா?”… நயினார் நாகேந்திரன் கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு

    June 4, 2026

    மரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!

    June 4, 2026

    புதிய விதிகளுடன் பார் டெண்டர்; விரைவில் அதிகாரிகள் இடமாற்றம்!. டாஸ்மாக்கில் வரும் அதிரடி மாற்றம்?.

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு

    மரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!

    புதிய விதிகளுடன் பார் டெண்டர்; விரைவில் அதிகாரிகள் இடமாற்றம்!. டாஸ்மாக்கில் வரும் அதிரடி மாற்றம்?.

    சி.ஐ.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் –  மாநில அரசை உஷார் படுத்தும் முகமது முபாரக்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.