Close Menu
    What's Hot

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»”மாரிதாஸ் கைது பாசிசமா.. பாயாசமா?” –அதிமுக கேள்வி
    அரசியல்

    ”மாரிதாஸ் கைது பாசிசமா.. பாயாசமா?” –அதிமுக கேள்வி

    Editor web2By Editor web2June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Maridhas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைது  நடவடிக்கையை கண்டித்துள்ள அதிமுக, இது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

    மாரிதாஸ் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்துகளில், முதலமைச்சர் விஜயை “பொம்மை முதல்வர்” என விமர்சித்ததுடன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களையும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை அதிமுக எழுப்பியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து  அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?

    நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…

    What bro… It’s very wrong bro..!!

    அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத்துறையால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களே…ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள்தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?

    இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே? மாரிதாஸை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?

    அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    உடனடியாக மாரிதாஸ் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்!. அறிமுக வீரர் மானவ் சுதர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!
    Next Article பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய CM விஜய்..!! சந்திப்பின்போது ஒரு சுவாரசியம்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 29, 2026

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    July 29, 2026

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.