Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது
    தமிழ்நாடு

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 child
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கோபி காலனி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கிராப்பட்டியில் உள்ள தனியார் மேநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஜூன் 10ஆம் தேதி காலை மாணவி பள்ளிக்கு வழக்கம்போல புறப்பட்டுச் சென்ற நிலையில் அவர், பள்ளிக்கு வரவில்லை என பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், கண்ட்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் சில மணி நேரம் கழித்து எடமாலைப்பட்டி புதூர் அடுத்துள்ள செட்டிப்பட்டி பாலம் அருகில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்குச் சென்ற பெற்றோர் அவளை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்ற ஒரு திருவிழாவின்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள நாகமங்கலம் பகுதியை சேர்ந்த பூபதி என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் தினமும் செல்போன் மூலம் பேசிப் பழகி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற மாணவியை, எடமலைப்பட்டிபுதூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பூபதி, விராலிமலை அடுத்துள்ள மாதிரிபட்டி என்ற ஊரில் முள் காட்டிற்கு கூட்டிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    மாணவியின் இந்த அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் பூபதியை போக்ஸோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பூபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் இரண்டு வயது ஆண் பிள்ளை, மற்றும் இரண்டு மாத ஆண் குழந்தை என இரண்டு பிள்ளைகள்  இருப்பது தெரியவந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு
    Next Article கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்
    Editor TN Talks

    Related Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.