Close Menu
    What's Hot

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்
    Featured

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 military
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை  முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்.

    இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (15.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவரும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.

    அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் கடந்த 8.6.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.

    011 military A

    தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப்பற்று, துணிச்சல், கடமை உணர்வு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதோடு, மற்றும் தியாக இளம் தலைமுறையினரிடையே வீர உணர்வு மனப்பான்மையை வளர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.

    பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்கள் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உயரிய விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் த. சரத்குமார், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் எ. சுந்தரவல்லி, முன்னாள் படைவீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் எம். சுரேஷ், இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!
    Next Article ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?
    Editor TN Talks

    Related Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    June 19, 2026

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நீடிக்கும் அன்பு..!! மு.க ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.