Close Menu
    What's Hot

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி
    Featured

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2026Updated:June 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 krishnakrigi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரியில் கணினி மையத்தில் நுழைந்த திமுக நகராட்சி கவுன்சிலர், அந்த கடையின் உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சீனிவாசன். இவர் எல்ஐசி அலுவலகம் எதிரே உள்ள அவ்வை நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அந்த பகுதியில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை கொட்டி வைத்து, சிமெண்ட் சாலை பணிகளையும் செய்து முடித்துள்ளார். இந்த நிலையில் மீதம் இருந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் அந்தப் பகுதியிலேயே இருந்துள்ளது. பின்னர் அவரிடம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் என அந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை எடுத்துச் சென்று அவரவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு பள்ளமாக இருந்த பகுதிகளில் கொட்டி தாங்களாகவே சமன் செய்ததாக கூறப்படுகிறது.

     

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அந்தப் பகுதிக்கு வந்த திமுக கவுன்சிலர் சீனிவாசன் குறிப்பிட்ட அந்த கணினி மையத்திற்கு சென்று அவர் அங்கிருந்த உரிமையாளர் ஹரி பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    யாரைக் கேட்டு எம் சாண்ட் மற்றும் ஜல்லிகளை பயன்படுத்தினாய் எனக் கேட்டதுடன் ஆத்திரமடைந்து ஆபாசமாக பேசி அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து ஹரி பிரகாஷ் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவரது தந்தையும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் அவரையும் சீனிவாசனின் ஆதரவாளர்கள் கட்டையால் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    CCTV footage Computer Centre Attack DMK Municipal Councillor Viral Video
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு அரசின் நிதி நிலைமை – இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை
    Next Article ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!
    Editor TN Talks

    Related Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    June 16, 2026

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    June 16, 2026

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    மதுபோதையில் சில்மிஷம்; பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி; கூலிங்கிளாஸ் ஆசாமியை வெளுத்தெடுத்த பெண்கள்

    பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.