Close Menu
    What's Hot

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    திருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற வழக்கு – சட்டமன்ற செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு
    Featured

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற வழக்கு – சட்டமன்ற செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 court news
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, சட்டமன்ற செயலாளருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை  ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்துள்ளனர்.

    அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    அந்த மனுக்களில், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது, இருவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர், மனதை செலுத்தாமல் இயந்திர தனமாக முடிவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனம் மற்றும் இயற்கை விதிகளுக்கு எதிரானது எனவும் இந்த மனு மீது இறுதி முடிவெடுக்கும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, சட்டமன்ற செயலாளர் மற்றும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே நான்கு எம் எல்.ஏக்கள் ராஜினாவை ஏற்றதை எதிர்த்த வழக்குகளுடன், இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    AIADMK AIADMK MLAs Assembly Secretary Madras High Court MLA Resignation Tamil Nadu Assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூடுபிடிக்கும் ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கு.. தொடங்கியது CBCID விசாரணை..!! உருளப்போகும் தலைகள்..!!
    Next Article கலர் அப்பளம் சாப்பிடுறீங்களா?. உயிருக்கே ஆபத்து!. உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    July 16, 2026

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    July 16, 2026

    திருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    திருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?

    இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்… புதிய விதிகளே காரணமா?

    பள்ளியில் மத திணிப்பு?. சிறுவர்களின் டைரியில் எழுதப்பட்ட வீட்டுப்பாடம்!. பெரும் சர்ச்சை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.