தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவை சிலர் வீழ்த்தி விடலாம் என நினைப்பாதாகவும், ஆனால் யாரும் தொட்டுப் பார்க்க முடியாத, அசைத்துப் பார்க்க முடியாத இயக்கம்தான் திமுக எனவும் கூறினார்.
இன்னும் ஆறு மாத காலத்தில் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி மலரும் என உறுதி தெரிவித்தவர், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக அழைப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள், ஆனால் தவெக எம்எல்ஏக்கள் எப்போது ஓடலாம் எனக் காத்திருக்கிறார்கள். இதனால் திமுகவை காட்டி அவர்களை பயமுறுத்தி வருகிறார்கள் என்றார்.
பழனி கோவிலுகு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு ரகசியமாக பத்திரம் பதிவு செய்துள்ள விவகாரத்தின் பின்னணியில் பெரிய மனிதர்கள் தலையீடு இல்லாமல் நடந்திருக்காது என தெரிவித்தவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இதற்கு சரியான கேள்வி கேட்பார் எனக் கூறினார்.
மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளதன் மூலம் தவெக அரசு பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியவர், அதிமுக எம் எல் ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் இணைத்ததன் மூலம் யார் குதிரை பேரம் நடத்துகிறார்கள் என மக்களுக்கும் தெரியும் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தான் ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர் மு க ஸ்டாலின் ஆகியோர் கொண்டு வந்த மகளிர் விடியல் பயணம் திட்டத்தில் வெளியில தான் எடுக்க முடிந்தது அந்த திட்டங்களின் பெயரை மற்றும் மாற்றலாமே ஒழிய திட்டத்தை தடுக்க முடியாது எனவும் இந்த அரசின் காக்கி சட்டைகள் போடும் சட்டம் தோற்கும் நீதிமன்றங்களால் திமுக வென்றெடுக்கும் என தெரிவித்தார்
