Close Menu
    What's Hot

    வேட்புமனுவில் தகவலை மறைத்தாரா மு.க.ஸ்டாலின்? – ஜூலை 29-இல் உயர்நீதிமன்றம் விசாரணை

    நீண்ட கால சஸ்பெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது … உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு!

    மேற்கு வங்கத்தை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம்… கனமழை பெய்யகூடும் – வானிலை மையம் எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலட்சியம்; மாற்றிக் கொடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் …. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு
    Featured

    ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலட்சியம்; மாற்றிக் கொடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் …. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 girl death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடுரில் சிறுமியின் உடலை அரசு மருத்துவமனை மாற்றி வழங்கியதையடுத்து, புதைக்கப்பட்ட உடல் தோண்டி  எடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஏடுர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுமன் – காயத்ரி தம்பதியின் 17 வயது அனுஷ்கா மகள் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு, எளாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சனிக்கிழமை  இரவு  சிகிச்சை பலனின்ரி உயிரிழந்துள்ளார்.

    இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், காவல்துறையினரின் உதவியுடன் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை உடலை வாங்க வந்தனர். ஆனால் மருத்துவமனை தரப்பில் சிறுமியின் உடல் எனக் கூறி வேறு ஒரு பெண்ணின் உடலை வழங்கியுள்ளனர்.

    இதனை உறவினர்கள் கண்டறிந்த நிலையில் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அந்த சடலம் சென்னை மணலி பகுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் எனவும்,  மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால், மணலி பெண்ணின் உறவினர்களிடம் அனுஷ்காவின் சடலத்தை வழங்கியதும் தெரியவந்தது.

    மேலும், அதேபோல் அனுஷ்காவின் உடல் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு மணலி பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    தகவல் அறிந்த அனுஷ்காவின் உறவினர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மணலி பகுதியில் புதைக்கப்பட்ட அனுஷ்காவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் மருத்துவமனை கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அனுஷ்காவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்த நிலையில் அங்குள்ள போலீசார் சமரசம் செய்து அனுஷ்காவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Body Swap Case Chennai News Medical Negligence Stanley Government Hospital Tamil Nadu health department
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!
    Next Article கனிம வள கடத்தலை தடுப்பது எப்படி? –  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    வேட்புமனுவில் தகவலை மறைத்தாரா மு.க.ஸ்டாலின்? – ஜூலை 29-இல் உயர்நீதிமன்றம் விசாரணை

    July 27, 2026

    நீண்ட கால சஸ்பெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது … உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு!

    July 27, 2026

    மேற்கு வங்கத்தை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம்… கனமழை பெய்யகூடும் – வானிலை மையம் எச்சரிக்கை

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேட்புமனுவில் தகவலை மறைத்தாரா மு.க.ஸ்டாலின்? – ஜூலை 29-இல் உயர்நீதிமன்றம் விசாரணை

    நீண்ட கால சஸ்பெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது … உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு!

    மேற்கு வங்கத்தை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம்… கனமழை பெய்யகூடும் – வானிலை மையம் எச்சரிக்கை

    வெள்ளி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை… முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு

    கனிம வள கடத்தலை தடுப்பது எப்படி? –  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.